G Varalakshmi passes away – Anjali
Posted by Snapjudge மேல் நவம்பர் 27, 2006
பழம்பெரும் நடிகை வரலட்சுமி காலமானார்
சென்னை, நவ. 27 உடல்நலக் குறைவு காரணமாக பழம்பெரும் தமிழ் திரைப்பட நடிகை ஜி. வரலட்சுமி (80) சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது மகள் கனகதுர்கா வீட்டில் அவர் காலமானார்.
- அண்ணி,
- குலேபகாவலி,
- நான் பெற்ற பிள்ளை,
- நல்ல தங்காள்,
- அரிச்சந்திரா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
இவரது கணவர் கே.எஸ். பிரகாஷ் ராவ் “வசந்த மாளிகை’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
bsubra said
நான் பெற்ற செல்வம்,
குழந்தையும் தெய்வமும்,
ஆரவல்லி சூரவல்லி உள்பட 70-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ஜி.வரலட்சுமி. இவர் நீண்டகாலமாக அல்சர் நோயினால் அவதிப்பட்டு வந்தார். கடந்த 1 வாரத்துக்கு முன் அவருடைய உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. நேற்றுமாலை 6.20 மணிக்கு அவர் மரணம் அடைந்தார்.
அவருடைய உடல் தகனம் இன்று (திங்கள் கிழமை) மாலை 3 மணிக்கு பெசன்ட்நகரில் உள்ள சுடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது.
மறைந்த ஜி.வரலட்சுமியின் கணவர் கே.பிரகாஷ்ராவ், பிரபல டைரக்டர் ஆவார். சிவாஜி கணேசன் நடித்த வசந்தமாளிகை உள்பட பல பிரமாண்டமான படங்களை `டைரக்டு’ செய்தவர் இவர்.