Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Next Generation Leaders – Thanuja Lakshmanan

Posted by Snapjudge மேல் நவம்பர் 20, 2006

வளர்முகம்: போட்டிதான் முன்னேற்றத்துக்குக் காரணம்!

ரவிக்குமார்

இரும்பு உருக்கும் ஆலைகள், சர்க்கரை ஆலைகள், எஃகு ஆலைகள், உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் என எல்லா இடங்களிலும் இருப்பவை எரி உலைகள். இவற்றில் இருந்து வெப்பம் வெளியேறுவதைத் தடுப்பதற்குப் பயன்படும் சுடு கற்களையும், எரி உலைகளை அமைப்பதற்கு பயன்படும் ரி-ஃபிராக்டரி சிமென்ட்களையும் விற்கும் தொழிலில் ஓர் இளம்பெண் ஈடுபட்டிருக்கிறார். அவர்- தனுஜா லஷ்மணன்.

மக்கள் தொடர்புத் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்கும் இவர், நாக்பூரில் இருக்கும் “ஏஸ் ரி-ஃபிராக்டரி சிமென்ட்’ தயாரிப்பு நிறுவனத்தின் சென்னை ஸ்டாக்கிஸ்ட். அதுமட்டுமல்ல, இந்திய அளவில் பிரபலமான அந்த நிறுவனத்தின் ஒரே பெண் ஸ்டாக்கிஸ்ட்டும் கூட. அம்பத்தூர் தொழிற்பேட்டையில், இவர் நடத்திவரும் “பாலாஜி அசோசியேட்ஸ்‘ விற்பனையில் சாதனை படைத்ததற்காக “ஏஸ் நிறுவனத்தால்’ கெüரவிக்கப்பட்டிருக்கிறது. பெரும்பாலும் வட இந்தியர்களே அதிகம் ஈடுபட்டிருக்கும் இந்தத் தொழிலில் முன்னேறி வரும் தனுஜா, நம்மிடம் பேசியதிலிருந்து…

“”சென்னை எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரியில் நான் எம்.ஏ. பப்ளிக் ரிலேஷன் படிக்கும்போது, அந்த வயதுக்கேயுரிய கனவுகளோடுதான் இருந்தேன். படித்து முடித்தவுடன் பெரிய பெரிய பப்ளிக் ரிலேஷன் கம்பெனிகளில் வேலை செய்யவேண்டும்; ஊடகங்களில் சேர்ந்து பலதுறைகளில் இருக்கும் பிரபலங்களையும், மக்களை நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கும் பல பிரச்சினைகளை வெளிப்படுத்துவதற்குப் பாடுபடவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது. இந்தத் துறையில் நான் நன்றாக வரவேண்டும் என்பது என் அப்பாவின் ஆசை.

இந்த ரி-ஃபிராக்டரி தொழிலிலேயே பல வருடங்கள் அனுபவம் பெற்று, புகழ்பெற்ற ஏஸ் நிறுவனத்தின் சென்னை ஸ்டாக்கிஸ்ட்டாகி 1997-ம் ஆண்டு முதல் பாலாஜி அசோசியேட்ûஸ நடத்தி வந்தவர்என்னுடைய அப்பா லஷ்மணன். நன்றாகப் போய்க்கொண்டிருந்த பிசினஸில் பெரிய தொகை அவுட்-ஸ்டாண்டிங், கூட இருந்தே குழி பறித்த சிலரால் ஏற்பட்ட நஷ்டங்கள் என்று திடீர் சரிவு ஏற்பட்டது. இதனாலேயே அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இறந்து விட்டார்.

ஏஸ் நிறுவனத்திடமும், எங்களின் வாடிக்கையாளர்களிடமும் அவர் சம்பாதித்து வைத்திருந்த நல்ல பெயர் மட்டுமே எங்களின் பெரிய சொத்தாக இருந்தது. அண்ணா அமெரிக்காவில் படித்துக் கொண்டிருந்ததால், அப்பாவின் மரணத்துக்குப் பின் அனைத்துப் பொறுப்புகளும் அம்மாவிடம்(வித்யா லஷ்மணன்) வந்தன. அப்போது நான் படித்துக் கொண்டிருந்தேன். அப்பாவின் உடல் நிலை மோசமானதற்குக் காரணமாக இருந்த இந்த தொழிலின் மீது முதலில் எனக்கு வெறுப்பாகத்தான் இருந்தது. அம்மாவும், நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகளை கவனித்துக் கொள்ளும் எங்களின் உறவினர் கணபதி மாமாவும்தான் மெதுவாக எனக்கு இந்தத் தொழிலில் ஆர்வத்தை அதிகப்படுத்தி ஈடுபடுத்தினர்.

போட்டிகள் அதிகம் இருந்தாலும் தரத்தையும், நாணயத்தையும் விடாமல், வாடிக்கையாளர்களுக்கு குறித்த நேரத்தில் பொருட்களை சப்ளை செய்தேன். இந்தத் தொழிலில் இருக்கும் அளவுக்கதிகமான போட்டிதான், இந்தத் தொழிலில் நான் முன்னேறுவதற்குக் காரணம் என்று கூடச் சொல்லலாம். ஆண்டுக்கு 35 லட்சத்துக்கும் அதிகமாக விற்பனை செய்யும் ஸ்டாக்கிஸ்ட்டுகளுக்கு, ஏஸ் நிறுவனம், ஸ்டாக்கிஸ்ட் மாநாடுகளை வெளிநாடுகளில் நடத்தி விருதுகளை வழங்கிக் கெüரவிக்கும். இந்த விருதை கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பெற்றிருக்கிறேன். முதல் ஆண்டு விற்பனை செய்த தொகை 70 லட்சம். இரண்டாம் ஆண்டு விற்பனை செய்த தொகை 80 லட்சம். முதல் ஆண்டு விழா இலங்கையில் நடந்தது. அப்போதுதான் என்னுடைய அப்பாவின் முதல் வருட நினைவு நாள் என்பதால் போகவில்லை.

இரண்டாவது வருடம், இந்த விழா மலேசியாவில், கோலாலம்பூரில் நடந்தது. மேடையில் நான் பரிசு வாங்கும்போதுதான், என்னுடைய பணியின் சிறப்பையும், அதற்குப் பின்னணியில் இருக்கும் என் அப்பாவின் ஆசியையும் உணர்ந்தேன்.” என்கிறார் கண்கள் பனிக்க, தனுஜா.

படம்: “மீனம்’ மனோ

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: