Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Director SJ Surya to marry Meera Jasmine – ‘Thirumagan’ Rumor mill

Posted by Snapjudge மேல் நவம்பர் 16, 2006

டைரக்டர் சூர்யா-நடிகை மீராஜாஸ்மின் திருமணமா?

கேரளாவைச் சேர்ந்தவர் நடிகை மீராஜாஸ்மின். இவர் தமிழில் `ரன்‘, `சண்டக் கோழி‘, உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

தற்போது `திருமகன்‘ என்ற படத்தில் டைரக்டர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக மீராஜாஸ்மின் நடித்து வருகிறார். 6 மாதங்களாக இதன் படப்பிடிப்பு தேனி பகுதியில் நடந்து வருகிறது. இந்தப் படத்தில் காதல் காட்சிகளில் இருவரும் நெருங்கி நடித்துள்ளனர்.

அப்போது மீராஜாஸ்மினுக்கும், எஸ்.ஜே.சூர்யாவுக்கும், காதல் ஏற்பட்டது. படப்பிடிப்பு முடிந்ததும் இருவரும் சந்தித்து மனம் விட்டு பேசிக் கொண்டனர். திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருப் பதாக வும் தகவல் வெளியாகி உள்ளது.

மீராஜாஸ்மின் ஏற்கனவே மலையாள பட டைரக்டர் லோகிததாசை காதலித்து வந்தார். சமீபத்தில் அவருடனான காதல் முறிந்து விட்டதாக மீராஜாஸ்மின் அறிவித்தார்.

எஸ்.ஜே.சூர்யாவை திருமணம் செய்வதற்காகவே அவர் லோகிததாசுடனான காதலை முறித்துக் கொண்டதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேச்சு அடிபடுகிறது.

ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெறலாம் என்றும் கூறப்படுகிறது. மீரா ஜாஸ்மினும், எஸ்.ஜே.சூர்யாவும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவரது பெற்றோரும் சம்மதித்து விட்டதாகவும், நிச்சயதார்த்தம் கூட நடந்து முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.

இது பற்றி டைரக்டர் எஸ்.ஜே.சூர்யாவை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் பதில் தெரிவிக்க மறுத்து விட்டார்.

ஒரு பதில் -க்கு “Director SJ Surya to marry Meera Jasmine – ‘Thirumagan’ Rumor mill”

  1. bsubra said

    “மீரா ஜாஸ்மினுடன் திருமணமா?’ எஸ்.ஜே.சூர்யா மறுப்பு

    இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா, நடிகை மீரா ஜாஸ்மினை தேனியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டார் என்று வதந்தி பரவியது. இதுதொடர்பாக எஸ்.ஜே.சூர்யாவைக் கேட்ட போது… “”மீரா ஜாஸ்மின் சிறந்த நடிகை. அவருடன் “திருமகன்’ படத்தில் நடித்து வருகிறேன். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் மட்டுமே. எங்களுக்கு காதல், கோவிலில் திருமணம் நடைபெற்றது என்பதெல்லாம் வெறும் வதந்திதான்” என்று கூறினார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: