‘Vallavan is my best movie’ – Nayan Thara
Posted by Snapjudge மேல் நவம்பர் 9, 2006
`சிவாஜி’ படத்தில் ரஜினியுடன் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடுவது ஏன்?- நயன்தாரா பேட்டி
தீபாவளிக்கு ரிலீசான மூன்று படங்களில் நயன்தாரா நடித்திருக்கிறார். தொடர்ந்து அவரது மார்க்கெட் ஏறுமுகத்திலேயே உள்ளது. தமிழில் மட்டுமல்லாத பிற மொழிகளிலும் கலக்கி வரும் நயன்தாரா முன்னணி கதாநாயகியாக இருந்தாலும் `சிவாஜி’யில் ஒரு பாடலுக்கு ஆட சம்மதித்திருக்கிறார். அது ஏன்? இந்த பேட்டியில் அவரே விளக்குகிறார்.
நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது என்னை கவனித்த சத்யன் அதிகாடு மலையாள படம் ஒன்றில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார். அதிலிருந்து கடந்த இரண்டரை வருடமாக மிகவும் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறேன். கல்லூரியில் படிக்கும் போது தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம், ஹிந்தி என பல மொழிகளை கற்றுத் தேர்ந்தேன். அது இப்போது பல மொழிகளில் நடிப்பதற்கு பெரும் உதவியாக இருக்கிறது.
இதுவரை
- 5 மலையாளம்,
- 8 தமிழ்,
- 2 தெலுங்கு
என 15 படங்களில் நடித்தாயிற்று.
நான் நடித்த எல்லாபடங்களும் சிறந்தவைதான் என்றாலும் எனக்கு ரொம்பப்பிடித்தது வல்லவன். அந்த படத்தில் என்னுடைய வேடம், படத்தை சிம்பு இயக்கியிருந்த விதமும் வல்லவன் எனக்கு மிகவும் பிடித்துப்போகக் காரணங்கள்.
இதுவரை என்னை எல்லோரும் ஹோம்லியான வேடங்களிலேயே நடிக்க வைத்தார்கள். ஆனால் வல்லவனில் முதன் முதலாக புதுவித உணர்வுகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்தது. வித்தியாசமான அந்த வேடம் ஆபாசம் இல்லாமல் சொல்லப்பட்டிருக்கிறது.
கிசு கிசுக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதுபற்றியெல்லாம் யோசித்துக்கொண்டிக்கும் அளவுக்கு எனக்கு நேரம் கிடையாது. அவற்றை உடனே மறந்துவிடுவேன்.
சிவாஜியில் ஒரு பாடலுக்கு தோன்றி நடனமாடுவதற்கு சம்மதித்ததற்கு மூன்று காரணங்கள் இருக்கிறது.
- முதலாவதாக இது சூப்பர் ஸ்டார் ரஜினி படம்.
- இரண்டாவது சந்திரமுகியின் பிரம்மாண்ட வெற்றிக்குப்பிறகு ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது.
- மூன்றாவதாக இதை சங்கர் இயக்குவது. கடந்த தீபாவளி என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள். காரணம் அன்று நான் நடித்த மூன்று படங்கள் ரிலீசாயின.
மலையாளத்தில் மம்முட்டியுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். அதில் படம் முழுக்க 4 சேலைதான் காஸ்டிïம். அழுக்கான ஆடை, மேக்கப் இல்லாத தோற்றம் என படு யதார்த்தமான வேடம் அது. இந்த படத்தில் நடிப்பதில் மிகவும் சந்தோஷம். காரணம் என்னால் கமர்ஷியல் படங்களிலும் நடிக்க முடியும், மாறுபட்ட படங்களிலும் நடிக்க முடியும் என்பதை காட்டு வதற்கு இது நல்ல வாய்ப்பு.
நேரம் இல்லாததால் டப்பிங் பேச முடியவில்லை. ஆர்ட் படங்களில் நடிப்பதற்கு எனக்கு ஆர்வம் அதிகம். இந்த வேடத்திற்கு நமக்கு விருது கண்டிப்பாக கிடைக்கும் என்று உறுதியாகத் தோன்றினால் அந்த படத்திற்கு நிச்சயம் டப்பிங் பேசுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
This entry was posted on நவம்பர் 9, 2006 இல் 5:54 பிப and is filed under Chandramukhi, Interview, Malayalam, Nayan Thara, nayandhara, Rajini, Rajniganth, Shankar, Shivaji, Silambarasan, Simbu, Sivaji the Boss, Tamil Film, Tamil Movies, Telugu, Tollywood, Vallavan. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, அல்லது trackback from your own site.
மறுமொழியொன்றை இடுங்கள்