AIADMK presidium chairman Kalimuthu passes away – Biosketch
Posted by Snapjudge மேல் நவம்பர் 8, 2006
முன்னாள் சபாநாயகர் காளிமுத்து மரணம்
அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் காளிமுத்து.
அண்ணா காலத்தில் திராவிட இயக்கத்தில் ஈர்க்கப்பட்ட இவர் எம்.ஜி.ஆர். அ.தி.மு.க.வை தொடங்கியதும் அந்த கட்சியில் இணைந்தார். அ.தி.மு.க.வில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து பணியாற்றி உள்ளார்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது இவர் சபாநாயகராக இருந்தார். 2001-ம் ஆண்டு முதல் கடந்த மார்ச் மாதம் வரை அவர் இந்த பதவியில் இருந்தார். கடந்த ஆண்டு அவருக்கு திடீரென இருதய கோளாறு ஏற்பட்டது.
இதனால் அவர் இருதய ஆபரேசன் செய்து கொண்டார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு பக்கவாத நோயும் தாக்கியது. இதனால் அவர் கடந்த மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை.
உடல்நலக்குறைவு காரணமாக அவரால் கட்சிப் பணிகளில் ஈடுபட இயலவில்லை. இதனால் தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபடவில்லை. சமீபத்தில் அவர் மீது தமிழக அரசு 2 வழக்குகளை தொடர்ந்தது.
இந்த நிலையில் கடந்த மாதம் 25-ந் தேதி காளிமுத்துக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவரை சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இன்று அதிகாலை அவர் உடல் நிலை மோசமானது. சிறிது நேரத்தில் காளிமுத்து உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 64.
காளிமுத்துவுக்கு 2 மனைவி, 4 மகன்கள், 5 மகள்கள் உள்ளனர்.
காளிமுத்து மரணம் அடைந்த தகவல் அறிந்ததும் ஏராளமான அ.தி.மு.க.வினர் மருத்துவமனைக்குபபபவிரைந்த னர். காலை 9 மணி அளவில் காளிமுத்து உடல் தேனாம் பேட்டையில் உள்ள செனடாப் ரோட்டில் உள்ள வீட்டுக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு அவர் உடலுக்கு ஏராளமான அ.தி.மு.க.வினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.
பின்னர் காளிமுத்து உடல் அண்ணாநகரில் உள்ள வீட்டுக்கு எடுத்து வரப்பட்டது. அவர் மறைவுக்கு அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெய லலிதா இரங்கல் தெரிவித்துள் ளார்.
ஜெயலலிதா அஞ்சலி
பகல் 12.10 மணிக்கு அ.தி.மு.க.பொதுச் செயலாளர் ஜெயலலிதா சென்று காளி முத்து உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். ஜெய லலிதாவைப்பார்த்ததும் காளிமுத்துவின் மனைவி மனோகரி, மகன்,மகள்கள் கதறி அழுதனர். அவர்களுக்கு ஜெயலலிதா ஆறுதல் கூறினார்.
பின்னர் அங்கிருந்து 12.17 மணிக்கு புறப்பட்டுச் சென்றார். காளிமுத்து உடலுக்கு அஞ்சலி செலுத் தியவர்கள் விவரம் வருமாறு:-
முன்னாள் அமைச்சர் கள்
- முத்துசாமி,
- செங்கோட்டை யன்,
- தம்பித்துரை,
- ஜெயக் குமார்,
- தளவாய் சுந்தரம்,
- செ.ம.வேலுச்சாமி,
- மது சூதனன்,
- செம்மலை,
- கே.பி.அன்பழகன்,
- சோமசுந்தரம்,
- முன் னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன்,
- டி.டி. வி.தினகரன் எம்.பி.,
- சுலோசனாசம்பத்,
- ஜோதி எம்.பி,
- கோகுல இந்திரா எம்.பி.,
- துணைசபாநாயகர், வரகூர் அருணாசலம்,
- முன்னாள் எம்.பி.க்கள் அன்பழகன்
- பெரம்பலூர் ராஜரத்தினம்,
- அ.தி.மு.க. தேர்தல் பிரிவு இணை செயலாளர் பாலகங்கா,
- எம்.எல்.ஏ.க்கள் எஸ்.வி.சேகர்,
- திருத்தணி அரி,
- முன்னாள் எம்.எல்.ஏ. சைதை துரைசாமி,
- சுகுமார்பாபு,
- வி.என். சிதம்பரம்,
- வி.ஜி.சந்தோஷம்,
- வேட்டவலம் மணிகண்டன்,
- ஆதிராஜாராம்,
- நடிகை சி.ஆர்.சரஸ்வதி,
- நடிகர் குண்டு கல்யாணம்,
- முன்னாள் மாநில தேர்தல் ஆணையர் வை.பழனிச்சாமி,
- மல்லை சத்யா,
- கலைப்புலி எஸ்.தாணு
- வேளச்சேரி மணிமாறன்,
- மல்லிகா தயாளன்,
- பட அதிபர் கே.டி.குஞ்சுமோன்,
- அவ்வை நடராஜன் மற்றும் ஏராளமான அ.தி. மு.க. பிரமுகர்களும், தொண்டர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.
முன்னதாக தேனாம் பேட்டை வீட்டில் காளிமுத்து உடலுக்கு
- எம்.எல்.ஏ.க்கள் பதர்சயீத்,
- கலைராஜன்,
- செந்த மிழன்,
- முள்ளான் துணை மேயர் கராத்தே தியாகராஜன்,
- பழ.நெடுமாறன், ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.
பகல் 12.45 மணிக்கு காளிமுத்து உடல் ஆம்புலன்ஸ் வேனில் மதுரைக்குகொண்டு செல்லப்பட்டது.
`சிறந்த இலக்கிய- அரசியல் பேச்சாளர்’ காளிமுத்து வாழ்க்கை குறிப்பு
1942-ம் ஆண்டுபபசிவகாசி அருகே உள்ள ராமுதேவன் பட்டியில் காளிமுத்து பிறந்தார். இவரது தந்தை பெயர் காளிமுத்து. தாயார் பெயர் வெள்ளையம்மாள். எம்.ஏ. பி.எச்.டி. வரை படித்து உள்ளார். தனது 13-வது வயதிலேயே காளிமுத்து மேடை பேச்சாளர் ஆனார். பசும் பொன்முத்துராமலிங்க தேவர் இவரது மேடை பேச்சை கேட்டு வியந்ததுடன் இவரை `மேடை மணி’ என்றும் பாராட்டி உள்ளார்.
தமிழக அரசியல் தலைவர்களில் மிகச் சிறந்த இலக் கிய-அரசியல் பேச்சாளர் களில் இவர் தனித்துவம் பெற்றவராக திகழ்ந்தார்.
100-க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 10-க்கும் மேற் பட்ட புத்தகங்களையும் காளிமுத்து எழுதி உள்ளார். 1965-ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அரசியல் சட்ட நகலை எரித்த தால் கைதானார். மதுரை, திருச்சி, பாளையங்கோட்டை சிறைகளில் இருந்தார்.
1971-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுஎம்.எல்.ஏ. ஆனார். 1972-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அ.தி.மு.கவை தொடங்கியபோது காளிமுத்துவும் அதி.மு.க.வில்பபசேர்ந்தார்.
1977, 1980 ஆகிய ஆண்டு களில் நடந்த தேர்தலில் திருப் பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1984-ம் ஆண்டு மதுரை கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஆனார். 1989-ம் ஆண்டு சிவகாசி தொகுதியில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.
அமைச்சர்
1977 முதல் 1980 வரை தமிழக உள்ளாட்சி துறை அமைச்சராகவும், 1980 முதல் 1984 வரை விவசாய துறை அமைச்சராகவும், 1984 முதல் 1987 வரை விவசாயம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராகவும் இருந்தார்.
அ.தி.மு.க. துணை பொதுச் செயலாளராகவும் பதவி வகித்த காளிமுத்து கடந்த 2001-ம் ஆண்டு திருமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார்.
இதையடுத்து அவர் சபா நயாகராக தேர்ந்தெடுக்கப் பட்டார். அப்போது அவர் வகித்து வந்த கட்சி பதவியை ராஜினாமா செய்தார்.
கடந்த சில மாதங்களாக அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கடந்த 2006 சட்டசபை தேர்தலில் மதுரை மத்திய தொகுதி யில் அ.தி.மு.க. வேட்பாள ராக காளிமுத்து அறிவிக்கப் பட்டார். ஆனால் உடல் நலக்குறைவு காரண மாக அவர் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.பின்னர் அ.தி.மு.க. அவைத் தலைவ ராக காளிமுத்து இருந்து வந்தார்.
காளிமுத்துவுக்கு பொன் பாண்டி, குமாரவேல், ரவிச்சந்திரன், நல்லதம்பி, வீரபாண்டி என்ற 5 சகோதரர்களும், வாணி என்ற சகோதரியும் உள்ளனர்.
காளிமுத்துவின் முதல் மனைவி நிர்மலா. அவர்களுக்கு டேவிட் அண்ணாத்துரை, ராஜன் என்ற மகன்களும், புனிதா, ரோஷி, வேதா என்ற மகள்களும் உள்ளனர்.
2-வது மனைவி மனோகரி. இவர்களுக்கு மணிகண்டன், அருள்மொழிதேவன் என்ற மகன்களும், அருணா, கயல் விழி என்ற மகள்களும் உள் ளனர். கயல்விழிக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது.
bsubra said
முன்னாள் சபாநாயகர் காளிமுத்து மறைவு
தமிழக சட்டப்பேரவையின் முன்னாள் தலைவரான கா.காளிமுத்து இன்று அதிகாலை சென்னையி்ல் மரணமடைந்தார். அவருககு வயது 65. அவர் சிலகாலம் நோய்வாய்பட்டிருந்தார்.
திராவிட இயககத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான காளிமுத்து ஒன்றுபட்ட ராமநாதபரம் மாவட்டம் ராமுத்தேவன் பட்டியில் பிறந்தவர். கனல்தெறிககப்பேசும் வல்லமைபெற்றவர். 1971 ஆம் ஆண்டில் அவர் முதல்முறையாகத் தேர்தலி்ல் போட்டியிட்டு வென்றார்.
ஆனால் கருணாநிதி தலைமையிலான திமுகவில் அவருக்கு அவ்வளவு முககியத்துவம் கிடைக்கவில்லை. எம்.ஜி.ஆர் அதிமுக துவங்கியபோது அவரோடு துவககத்திலேயே இணைந்தவர் காளிமுத்து. எம்.ஜி.ஆர் முதல்வராயிருந்த காலம் முழுமையும் அமைச்சராயிருந்த காளிமுத்து, ஜெயலலிதாவை தனது வாரிசாக எம்.ஜி.ஆர் வளர்த்தெடுக்கிறார் என்ற தோற்றம் எழுந்தநேரத்தில் கடுமையான எதிர்ப்புக்குரல் எழுப்பினார்.
எம்.ஜி.ஆர் மறைந்த பிறகு ஜானகி அணியின் சார்பாக போட்டியிட்டு சட்டமன்றத் தேர்தல்களில் தோல்வியுற்ற அவர், பல்வேறு பிரச்சினைகள் காரணமாக, திமுக, அஇஅதிமுக என்று தொடர்ந்து கட்சிமாறி, இறுதியில் ஜெயலலிதாவின் தலைமையின் கீழ் செயல்பட்டார்.
ஜெயலலிதா 2001ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிககு வந்தவுடன், அவருக்கு சட்டப்பேரவைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.
உடல்நலக் குறைவுகாரணமாக சமீபத்திய சட்டமன்றத் தேர்தல்களில் அவர் போட்டியிடவில்லை. பல்வேறு திறமைகள் இருந்தும், முன்னோடியாக இருந்தும் திராவிடஇயககத்தில் முழுமையாக பிரகாசிக்காது போனவர்களில் காளிமுத்துவும் ஒருவர் என்கின்றனர் நோக்கர்கள்.
காளிமுத்துவின் மறைவிற்கு முதல்வர் கருணநாநிதி, ஜெயலலிதா உட்பட பலரும் அஞ்சலி செலுத்தினர்.
bsubra said
இனிய தமிழ்ப் பேச்சால் எல்லோரையும் கவர்ந்தவர்!
மதுரை, நவ. 9: தமது இனிய தமிழ்ப் பேச்சால் எல்லோரையும் கவர்ந்தவர் கா.காளிமுத்து.
சிறந்த இலக்கியவாதி, எழுத்தாளர், கம்பீரப் பேச்சாளர், தமிழ் மொழிப் பற்றாளர், பரபரப்புமிக்க அரசியல்வாதி என்ற பன்முகத் தன்மை கொண்டவர் அவர்.
விருதுநகர் மாவட்டம் ராமுத்தேவன்பட்டியைச் சேர்ந்த காளிமுத்து -வெள்ளையம்மாள் தம்பதிக்கு 25.5.1942-ல் பிறந்தவர் கா.காளிமுத்து.
15 வயதில் மேடை ஏறியவர்: உள்ளூரில் தொடக்கக் கல்வியைத் தொடங்கிய அவர், 15 வயதிலேயே மேடைகளில் பேசத் தொடங்கினார். 1957-ல் சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் முத்துராமலிங்கத் தேவரின் சீடர் முத்துராமானுஜ தேவர் போட்டியிட்டபோது அவரை ஆதரித்து மேடை ஏறி பிரசாரம் செய்தார்.
இந்தி எதிர்ப்புப் போராட்டம்: பின்னர், திராவிட இயக்கத்தில் ஈடுபாடு காட்டினார். 1965-ல் மதுரை தியாகராஜர் கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்கும்போது இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றார்.
கடிகாரம் அணிவதில்லை: அப்போது அவரைக் கைது செய்த போலீஸôர் கைக் கடிகாரம், மோதிரத்தை கழற்ற வேண்டும் என்று கூறினர். அன்று கடிகாரத்தை கழற்றிய அவர் இதுவரை கடிகாரம் அணிந்ததில்லை.
பின்னர், எம்.ஏ. (தமிழ்), பிஹெச்.டி. பட்டம் ஆகியவற்றை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பெற்றார். சிறிது காலம் மதுரை வி.டி.சி. கல்வி மையத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
ஊராட்சித் தலைவர்: 1967-ல் ராமுத்தேவன்பட்டி பஞ்சாயத்துத் தலைவரானார். 1971-ல் சிவகாசி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரானார். 1972-ல் திமுகவிலிருந்து விலகிய எம்.ஜி.ஆர். அதிமுகவைத் தொடங்கியபோது அக்கட்சியில் இணைந்தவர்களில் முக்கியமானவர் கா.காளிமுத்து.
எம்.ஜி.ஆர். மறைவை அடுத்து அதிமுக (ஜா) அணிக்குச் சென்ற அவர், பின்னர் அதிமுக (ஜெ) அணியில் இணைந்தார். அதையடுத்து கருத்து மோதல் காரணமாக அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் சேர்ந்தார். 1995-ல் மீண்டும் அதிமுகவில் சேர்ந்தார்.
கட்சிகள் மாறிய போதிலும், திராவிட இயக்கத்தின் முன்னோடிகளான பெரியார், அண்ணாவின் கருத்துகளைப் பரப்பும் பிரசார பீரங்கியாக இறுதிவரை விளங்கினார். தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரிடமும், தற்போதைய முதல்வர் கருணாநிதியுடனும் அரசியலில் இணைந்து பணியாற்றி மிகுந்த நட்புடன் இருந்தவர்.
கட்சிப் பாகுபாடின்றி அனைத்து அரசியல் கட்சியினரிடமும் நட்பு பாராட்டியவர். சிலேடை, உவமைக் கதைகளுடன் கூடிய பேச்சால் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியவர்.
1977 முதல் 1986 வரை அமைச்சர்: 1977-லும், 1980-லும் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1984-ல் மதுரை கிழக்குத் தொகுதியில் வெற்றி பெற்றார். 1991-ல் கடலாடி தொகுதியில் போட்டியிட்டு (திமுக) தோல்வி அடைந்தார். 2001-ம் ஆண்டு திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தமிழக அரசில் 1977 முதல் 1986 வரையிலான காலத்தில் வேளாண் துறை, உள்ளாட்சித் துறை, குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக இருந்தார். 1996-ல் மதுரை மேயர் தேர்தலில் தோல்வி அடைந்தார்.
2001-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தலைவராக பொறுப்பேற்ற அவர், 1.2.2006-ல் சட்டப்பேரவைத் தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து அதிமுகவின் அவைத் தலைவராகப் பொறுப்பேற்றார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் மதுரை மத்திய தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அவர், உடல்நலக் குறைவால் போட்டியிடவில்லை.
நண்பர் வைகோவுடன் காளிமுத்து போட்டி: மதிமுக பொதுச் செயலர் வைகோவும், காளிமுத்துவும் நெருங்கிய நண்பர்கள். இருப்பினும், 1989-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சிவகாசி தொகுதியில் அதிமுக வேட்பாளராக காளிமுத்துவும், திமுக வேட்பாளராக வைகோவும் போட்டியிட்டனர். இத் தேர்தலில் காளிமுத்து வெற்றி பெற்றார்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது அதிமுகவுடன் மதிமுக கூட்டணி அமைக்க மிகவும் முயற்சித்தவர் காளிமுத்து. இருவரும் புத்தகப்பிரியர்கள். காளிமுத்து இறந்த தகவல் அறிந்தவுடன் வைகோ மிகவும் துயரமடைந்து கண்ணீர்விட்டார்.
திரைப்படங்களுக்கு வசனம்: அரசியல் பணி, சமூகப்பணி ஆகியவற்றுக்கு இடையே புத்தகங்கள் எழுதுதல், திரைப்படங்களுக்கு வசனம், பாடல் எழுதுதல் ஆகியவற்றிலும் காளிமுத்து முத்திரை பதித்தவர்.
“நாங்கள் கருப்புச் சட்டை கம்யூனிஸ்ட்கள், தொல்காப்பிய இலக்கியக் கொள்கையும்-குறுந்தொகையும், மன்னர் திருமலை, தேவர் திருமகனார், என்னை நான் பார்க்கிறேன்’ போன்ற பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.
தற்போது தயாரிக்கப்பட்டுவரும் பசும்பொன் தேவர் என்ற திரைப்படத்துக்கு காளிமுத்து வசனம் எழுதியுள்ளார்.
குடும்ப விவரம்: காளிமுத்துவுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி நிர்மலா இறந்துவிட்டார். அவருக்கு டேவிட் அண்ணாதுரை, ராஜன் என்ற இரண்டு மகன்கள், புனிதா, ரோஸி, வேதா என்ற மூன்று மகள்கள் உள்ளனர்.
இரண்டாவது மனைவி மனோகரி. இவருக்கு மணிகண்டன், அருள்மொழித்தேவன் என்ற 2 மகன்களும், அமுதா, கயல்விழி என்ற 2 மகள்களும் உள்ளனர்.