TN Govt. (atlast) declares Chikungunya as notifiable disease
Posted by Snapjudge மேல் நவம்பர் 7, 2006
சிக்குன்குனயா தொற்று நோய் என தமிழக அரசு அறிவிப்பு
![]() |
![]() |
சிக்கன்குனியா நோயைப் பரப்பும் கொசு |
இதற்கிடையே, கடந்த சிலமாதங்களாக தமிழகத்தில் பரவலாக பாதிப்பை ஏற்படுத்திய சிக்குன்குனியா நோயை, அரசுக்கு அறிவிக்கப்படவேண்டிய தொற்றுநோயாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் காலரா, மலேரியா, அம்மை, டைபாய்ட் காய்ச்சல் உள்ளிட்ட 21 நோய்கள் ஏற்கெனவே அரசுக்கு அறிவிக்கப்படவேண்டிய தொற்றுநோய்களாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது சிக்குன் குன்யாவும் அந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
தமிழக அரசியல் அரங்கில் சிக்குன் குன்யா நோய் பரவல் என்பது தமிழகத்தை ஆளும் திமுகவுக்கும் பிரதான எதிர்கட்சியான அதிமுகவுக்கும் இடையிலான அரசியல் விவகாரமாக உருவெடுத்ததால், தமிழகத்தில் சிக்குன் குன்யாவின் நிஜமான பாதிப்பு எவ்வளவு என்பது குறித்து முறையான தகவல்கள் இல்லை என்று சுகாதாரத்துறை வல்லுனர்கள் பலர் கவலை தெரிவித்திருந்தனர். குறிப்பாக தமிழ்நாட்டில் எத்தனைபேருக்கு சிக்கன் குன்யா காய்ச்சல் தாக்கியது என்பது குறித்து இருவேறு மதிப்பீடுகள் நிலவி வருகின்றன.
அரசு தரப்பில் சுமார் அறுபதாயிரத்துக்கும் அதிகமானவர்கள் சிக்குன் குன்யாவால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் எதிர்தரப்பில் லட்சக்கணக்கானவர்கள் சிக்குன் குன்யாவால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வந்த சிக்குன் குன்யா நோயாளிகளின் கணக்கை மட்டுமே அரசு தருவதாகவும், அவர்களைப்போல பலமடங்கு நோயாளிகள் தனியார் மருத்துவ மனைகளிலும் தனியார் மருத்துவர்களிடமும் சிகிச்சை பெற்ற விவரத்தை அரசு கணக்கில் கொள்ளவில்லை என்றும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
Bruno said
http://www.penandscale.com/bruno/2006/10/chickungunya-in-tamil-nadu.html