Sivaji (The Boss) – Rajni to use his own voice for playback singing
Posted by Snapjudge மேல் நவம்பர் 7, 2006
சிவாஜி படத்தில் ரஜினி சொந்தகுரலில் பாட்டு பாடுகிறார்
ரஜினி நடிக்கும் சிவாஜி படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. படக்குழுவினர் தற்போது புனேவில் முகாமிட்டுள்ளனர். அங்கு செட் அமைத்து நயன்தாரா பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. ரஜினி, ரகுவரன் நடிக்கும் காட்சிகளும் படமாக்கப்படுகிறது.
அமெரிக்காவில் வாழும் இந்திய தொழில் அதிபர் வேடத்தில் ரஜினி நடிக்கிறார். அவர் தமிழகம் வரும் போது அரசியல்வாதிகள் ஏமாற்றி சொத்தை பிடுங்குவதும் பிறகு அவர் மீண்டும் பணக்காரர் ஆவதும்தான் கதை.
அரசியல்வாதிகள் தூண்டுதலில் ரஜினி கைதாகும் காட்சிகள் ஏற்கனவே சென்னை புளியந்தோப்பு போலீஸ் நிலையத்தில் படமாக்கப் பட்டது. இதன் அருகில் உள்ள பின்னிமில்லில் வில்லன்களுடன் மோதும் சண்டைக்காட்சி எடுக்கப் பட்டது.
புனேவில் `கோர்ட் சீன்’ படமாக்கப்பட்டு வரு கிறது. கோர்ட்டில் ரஜினி கைதாகி நிற்பது போலவும், அவருக்கு ஆதரவாக ரகுவரன், வக்கீல் வேடத்தில் வாதாடுவது போலவும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
`சிவாஜி படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 5 பாடல்கள் இந்த படத்தில் இடம்பெறுகிறது. அதில் ஒருபாடலை ரஜினிகாந்த் பாடுகிறார். ஏற்கனவே மன்னன் படத்தில் விஜயசாந்தியுடன் `அடிக்குது குளிரு, துடிக்குது தளிரு’ என்ற பாடலை ரஜினி சொந்த குரலில் பாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.
`சிவாஜி’ படத்தில் இவர் சொந்தக்குரலில் பாடுவது இரண்டாவதுபாடலாகும். `சிவாஜி‘ படப்பாடல்கள் ரஜினிரசிகர்களை திருப்தி படுத்தும் வகையில் இருக்கும் என்று ஏ.ஆர்.ரகுமான் கூறினார்.
வா சிவாஜி வா சிவாஜி என்று தொடங்கும் பாடலும் இடம் பெறுகிறது. இந்த பாடல்காட்சி ஏற்கனவே ஐதராபாத் பிலிம்சிட்டியில் படமாக்கப்பட்டது. இந்த பாட்டுக்குக்காக மட்டும் ரூ. 2.75 கோடியில் `செட்’ போடப்பட்டதாக கூறப்படுகிறது.
Johnson said
Goodluck Sivaji team.