Nicaragua’s Ortega headed back to power, blow to US
Posted by Snapjudge மேல் நவம்பர் 7, 2006
நிகராகுவா தேர்தலில் முன்னணியில் உள்ளார் டேனியேல் ஆர்டீகா
![]() |
![]() |
நிகராகுவா அதிபர் தேர்தலில் முன்னணியில் உள்ள ஆர்டீகா |
நிகராகுவா நாட்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் அதிபரும் சாண்டினிஸ்டா வேட்பாளருமான டேனியேல் ஆர்டீகா முன்னணியில் உள்ளதாக ஆரம்பக் கட்ட முடிவுகள் காட்டுகின்றன.
இதுவரை பதினைந்து சதவிகித வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், ஆர்டிகாவிற்கு நாற்பது சதவிகிதத்திற்கும் சற்றே அதிகமாக வாக்குகள் கிடைத்துள்ளன என்றும் இந்தப் போக்கு தொடர்ந்தால், அவருக்கு நிச்சயமான வெற்றி கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
முப்பத்து மூன்று சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ள கன்சர்வேடிவ் கட்சியின் வேட்பாளர் எடுவார்டோ மோண்டியலெகர இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.
டேனியல் ஆர்டடீகா அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், நிகராகுவாவிற்கான அமெரிக்க உதவி நிறுத்தப்படக் கூடும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
1980களில், இடது சாரி டேனியல் ஆர்டிகாவின் அரசு பதவியில் இருந்த போது அதற்கு எதிரான காண்டிராஸ் எனப்படும் கிளர்ச்சிக் குழுவினருக்கு அமெரிக்கா நிதி உதவி வழங்கி ஆதரவு அளித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மறுமொழியொன்றை இடுங்கள்