Ilaiyaraja starts a Tamil Ilakkiya Manram with Jeyaganthan as Head
Posted by Snapjudge மேல் நவம்பர் 7, 2006
தமிழ் அறிஞர்களைக் கௌரவிக்க புதிய இலக்கிய மன்றம்- இளையராஜா தொடங்குகிறார்
சென்னை, நவ.7: சிறந்த தமிழ் அறிஞர்களைக் கெüரவிப்பதற்காக இசையமைப்பாளர் இளையராஜா புதிய இலக்கிய மன்றத்தை தொடங்குகிறார்.
இதுகுறித்து இளையராஜா செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை தெரிவித்ததாவது:
தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் பாடுபட்டு வரும் அறிஞர்களை கெüரவிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அதன்படி பலருடன் கலந்தாலோசித்து ஓர் இலக்கிய மன்றத்தை உருவாக்கியிருக்கிறோம்.
இந்த மன்றத்துக்கு அனைவரின் வேண்டுகோளுக்கிணங்க “இசைஞானி இலக்கிய மன்றம்‘ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த மன்றத்தின் தொடக்க விழா வரும் டிசம்பர் 2-ம் தேதி மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.
- இதற்கு எழுத்தாளர் ஜெயகாந்தன் தலைவராகவும்,
- ஆறு அழகப்பன் செயலாளராகவும் இருப்பார்கள்.
- அப்துல் ரகுமான்,
- வாலி,
- மு.மேத்தா,
- முத்துலிங்கம்,
- ஞானசுந்தரம்,
- திருப்பூர் கிருஷ்ணன்,
- ரவி சுப்ரமணியம் உள்ளிட்டோர் செயற்குழு உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.
சிறந்த படைப்புகளைப் படைக்கும் அறிஞர்களுக்கும், புதியவர்களுக்கும் இந்த மன்றத்தின் பெயரில் ரொக்கப் பணமும், பரிசுகளும் வழங்கப்படும்.
இவை “பாவலர் வரதராஜன் நினைவுப் பரிசு’ என்ற பெயரில் வழங்கப்படும்.
என்னுடைய இசையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் “அஜந்தா‘ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவும் அதே நாளில் பொதுமக்கள் முன்னிலையில் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்தப் படத்தின் மூலம் வரும் லாபத்தை ஏழைக் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக அளிக்கவிருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர் ராஜ்பா ரவிசங்கர். அவருக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் என்றார் இளையராஜா.
மறுமொழியொன்றை இடுங்கள்