Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Somali Parliament Leader Meets With Islamist Leaders

Posted by Snapjudge மேல் நவம்பர் 6, 2006

சோமாலிய கிளர்ச்சிக்காரர்களுடன் சமரசத்துக்கு முயற்சி

ஷரிப் ஷேக் அடன்
ஷரிப் ஷேக் அடன்

சோமாலியாவின் இடைக்கால நாடாளுமன்றத்தின் சபாநாயகரான ஷரிப் ஷேக் அடன், இஸ்லாமிய நீதிமன்றங்களின் ஒன்றியத்தின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த தலைநகர் மொகடிஷுவிற்கு சென்றுள்ளார்.

இஸ்லாமிய நீதிமன்றங்களின் ஆயுதக்குழுக்கள் நகரத்தினை தங்களது கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளன.

அமைதி ஏற்படுவதற்காகவும், சோமாலியர்கள் ஒன்றிணைவதற்காகவும், தான் தலைநகர் சென்றுள்ளதாக அடன் கூறுகின்றார்.

தலைநகர் மொகடிஷு கடந்த ஜுலை மாதத்தில் இஸ்லாமிய படைகளின் கட்டுப்பாட்டிற்குள் சென்ற பின்னர், மொகடிசஷுவிற்கு செல்லும், அரசாங்கத்தின் மூத்த அதிகாரி இவர்.

இஸ்லாமிய படைகள் தலைநகரின் கட்டுப்பாட்டினை எடுத்து கொண்டதினை அடுத்து, பதினைந்து ஆண்டுகளாக தலைநகரை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த ஆயுதக்குழுக்கள் நகரத்தினை விட்டு வெளியேறின.

ஆனால் சபாநாயகர் நடத்திவரும் பேச்சுவார்த்தைக்கு அரசாங்கத்தின் இதர உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்தப் பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் ஏதாவது ஏற்பட்டால், நாடாளுமன்றத்தின் பல உறுப்பினர்கள் இஸ்லாமிய நீதிமன்றங்களுக்கு ஆதரவாக செயற்பட கூடும் என்றும், இதனால் சர்வதேச சமூகத்தினால் அங்கிகரிக்கப்பட்ட அரசாங்கம் கலைவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் பிபிசி செய்தியாளர் ஒருவர் தெரிவிக்கின்றார்.

3 பதில்கள் -க்கு “Somali Parliament Leader Meets With Islamist Leaders”

  1. Bala said

    சோமாலியாவில் மோதல் தீவிரமடைகிறது

    சோமாலியாவில் பெரும் பகுதியை தமது கட்டுப்பாட்டில் கொண்டிருக்கும் இஸ்லாமிய கிளர்ச்சிக்காரர்கள், அந்த நாட்டின் இடைக்கால அரசாங்கம் பலம் பெற்றுள்ள இறுதி பிராந்தியத்தில் முன்னேறி, அரசாங்க தலைமையகம் அமைந்துள்ள பைடோவாவின் உள்ளே, 30 கிலோமீற்றர்கள் நுழைந்துள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் கூறுகின்றன.

    இஸ்லாமிய நீதிமன்றங்களின் கூட்டமைப்பு என்னும் இந்தக் கிளர்ச்சிக்குழு டேய்னுனே என்னும் இடத்தில் உள்ள குடியிருப்புகளை கைப்பற்ற முயற்சிப்பதாகவும், ஆனால் அரசாங்க ஆதரவு கிளர்ச்சிக்குழு இன்னமும் அந்த நகரை தக்கவைத்துள்ளதாகவும், தொலைபேசி மூலம் தொடர்புகொள்ளப்பட்ட அந்தப் பகுதி வாசிகள் தெரிவித்துள்ளனர்.

    இடைக்கால அரசாங்கத்துக்கும், ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர், லூயிஸ் மிச்சேலுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள், பைடோவாவில் நடந்துகொண்டிருந்த போது இந்தச் சண்டை தீவிரமடைந்துள்ளது.

    இடைக்கால அரசாங்கத்துக்கு ஆதரவான பெருமளவிலான எத்தியோப்பியத் துருப்புகள் சண்டைக்கு தயாராகுவதைக் காணக்கூடியதாக உள்ளதாக, அந்த நகரில் உள்ள ஒரு பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

  2. bsubra said

    தெற்கு சோமாலியாவில் அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது


    தெற்கு சோமாலியாவில் அமெரிக்கர்களினால் அல் கயீதா உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் பதுங்கியுள்ளதாகக் கூறும் நிலைகளின் மீது, அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

    இது குறித்து அதிக தகவல்கள் வெளிவராத நிலையில், இந்தத் தாக்குதல்கள் இன்று திங்கட்கிழமை ஜிபுத்தியிலுள்ள ஒரு அமெரிக்க விமான தளத்திலிருந்து நடைபெற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    இந்தத் தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டுள்ளதாக சோமாலிய இடைக்கால அரசின் சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்துள்ளார்.

    வடக்கே 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அஃப்மதாவ் நகருக்கு அருகில் மேலும் வான்வழித் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.

    ஆனால் இதில் அமெரிக்காவா அல்லது சோமாலிய இடைக்கால அரசுக்கு ஆதரவளிக்கும் எத்தியோப்பியப் படைகளா ஈடுபட்டிருந்தன என்பது தெளிவாகவில்லை.

    1998 ஆம் ஆண்டில் கென்யா மற்றும் தன்சானியா நாட்டிலுள்ள தமது தூதரகங்கள் மீது குண்டுத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் சோமாலியாவில் தான் பதுங்கியுள்ளார்கள் என அமெரிக்கா நீண்ட காலமாக குற்றம் கூறி வருகிறது.

  3. bsubra said

    சோமாலிய மோதல்கள் தொடருகின்றன

    சோமாலிய தலைநகர் மொகதிசுவில் கடந்த மூன்று நாட்களில் இடம்பெற்ற சண்டையில் ஏற்பட்ட ஆட்சேதத்தின் எண்ணிகையை, மருத்துவமனைகளால் சமாளிக்க முடியாமல் இருப்பதாக, மொகதிசு மருத்துவமனை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    தற்காலிக அரசாங்கத்துக்கு ஆதரவாக வந்த எத்தியோப்பிய நாட்டுத் துருப்புகள், இஸ்லாமியர்களுக்கும், இனப் பிரிவுகளின் தனியார் படைகளுக்கும் எதிராகக் தாக்குதலை ஆரம்பித்தது முதல், 300 க்கும் அதிகமான மக்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

    சுமார் 150 பேர் கொல்லப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    அமைதிகாப்புப் பணியில் ஆபிரிக்க ஒன்றியப் படைகள் கடந்த மாதம் ஈடுபடுத்தப்பட்டதன் பின்னர், அந்தப் பிரிவின், தமது வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாக உகண்டா நாட்டு இராணுவம் கூறியுள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: