Minister Dasari Narayana Rao in domestic violence case
Posted by Snapjudge மேல் நவம்பர் 3, 2006
மகனுக்கு 2-வது திருமணம் செய்ய முயற்சி: மத்திய மந்திரி மீது மருமகள் பரபரப்பு புகார்- குடும்ப வன்முறை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மனு
ஐதராபாத், நவ. 3-
பிரபல தெலுங்கு பட இயக்குனரான தாசரி நாராயணராவ் மத்திய மந்திரியாக பதவி வகிக்கிறார். இவரது மூத்த மகன் தாசரிபிரபு. இவருக்கும் சுசீலா என்ற பெண்ணுக்கும் 1995-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 11 வயதில் தாசரி நாராயணன் என்ற மகன் இருக்கிறான். குடும்ப தகராறு காரணமாக தாசரி பிரபுவும் சுசீலாவும் பிரிந்து வாழ்கிறார்கள்.
கடந்த ஆண்டு சுசீலா தனது கணவர் மீதும் மாமனார் தாசரி நாராயணராவ் மீதும் போலீசில் வரதட்சணை புகார் கொடுத்து இருந்தார். இந்த வழக்கு போலீஸ் விசாரணையில் உள்ளது.
இதற்கிடையே சுசீலா கணவர் மீதும் தாசரி நாராயண ராவ் மீதும் மீண்டும் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். அதில் தன்னை தனிமைப்படுத்திவிட்டு தாசரி பிரபுவுக்கு மறுமணம் செய்து வைக்க முயற்சிப்பதாகவும், எனவே இருவர் மீதும் குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த புகாரை கொடுப்பதற்காக சுசீலா ஐதராபாத் போலீஸ் நிலையம் வந்திருந்தார். அவரை போலீசார் 3 மணிநேரம் காக்க வைத்தபிறகு புகாரை பெற்றுக்கொண்டனர். ஆனால் அதன் மீது முறைப்படி வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை.
இது பற்றி போலீசாரிடம் கேட்டதற்கு தாசரி நாராயண ராவ் மற்றும் அவரது மகன் மீது ஏற்கனவே சுசீலா வரதட்சணை புகார் கொடுத்து இருக்கிறார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. தற்போது குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் வந்துள்ள புகாரையும் அதனுடன் சேர்க்க முடியுமா என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்” என்றனர்.
புதிய புகார் பற்றி தாசரி பிரபுவிடம் கேட்டபோது, சுசீலாவை நான் திருமணம் செய்தது முதல் என் மீது அவள் ஒருபோதும் அன்பு காட்டியது இல்லை. பண ஆசை பிடித்தவள். பணத்தின் மீதே குறியாக இருப்பாள். பணத்துக்காக அவள் எதை வேண்டுமானாலும் செய்வாள்’ என்றார்.
கணவன்- மனைவி பிரச்சினையில் இவர்களது 11 வயது மகன் தாசரி நாராயணன் தவிக்கிறான்.
மறுமொழியொன்றை இடுங்கள்