Rajarajan awards for Thamizh Scholars
Posted by Snapjudge மேல் நவம்பர் 2, 2006
ராஜராஜ சோழன் சதயவிழா: தமிழறிஞர்கள் இருவருக்கு ராஜராஜன் விருது
தஞ்சாவூர், நவ. 3: தஞ்சையில் மாமன்னர் ராஜராஜ சோழன் சதயவிழாவையொட்டி தஞ்சாவூரைச் சேர்ந்த தமிழறிஞர்கள் இருவருக்கு மாமன்னர் ராஜராஜன் விருது புதன்கிழமை வழங்கப்பட்டது.
தஞ்சாவூர் அருள்மிகு பெருவுடையார் கோயிலை நிர்மாணித்த மாமன்னன் ராஜராஜ சோழனின் 1,021 ஆண்டு சதய விழா பெரியகோயில் வளாகத்தில் நடைபெற்றது.
புதன்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவில்
- மத்திய நிதித்துறை இணை அமைச்சர் எஸ்.எஸ். பழநிமாணிக்கம்.
- தமிழக அமைச்சர்கள் சி.நா.மீ. உபயதுல்லா,
- கோ.சி.மணி,
- அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே,
- மாவட்ட ஆட்சியர் சி. விஜயராஜ் குமார் பங்கேற்றனர்.
விழாவில் தமிழறிஞர்கள் பாவலரேறு பாலசுந்தரம், லியோ ராமலிங்கம் ஆகியோருக்கு மாமன்னர் ராஜராஜன் விருதுகளை அமைச்சர்கள் வழங்கிப் பாராட்டினர்.
குடுகுடுப்பை said
உங்கள் உ.வே.சா பதிவிற்கு என்னுடைய பதிவில் இனைப்பு கொடுக்க அனுமதி வேண்டுகிறேன்
bsubra said
Go ahead KuduKuduppai 🙂