Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Sivaji – The Boss : Story, Nayanthara and other Details (Maalai Malar)

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 26, 2006

இறுதி கட்ட படிப்பிடிப்பு: `சிவாஜி’ படத்தில் ரஜினி `பஞ்ச்’ வசனம்

ரஜினி நடிக்கும் `சிவாஜி’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. முந்தைய படமான சந்திரமுகி வெற்றிப்படமாக அமைந்ததால் `சிவாஜி’யை அதைவிட சிறந்த படமாக செதுக்குகிறார் இயக்குனர் ஷங்கர்.

ரசிகர்கள் மட்டுமன்று அனைத்து தரப்பு மக்களை யும் அவரும் வகையில் `சிவாஜி’ கதை ஒருவாக்கப்பட் டுள்ளது.

வெளிநாட்டில் வாழும் கோடீஸ்வர தமிழர் கேரக்டரில் ரஜினி நடக்கிறார். சொந்த நாட்டு மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் பண மூட்டையுடன் வரும் அவரை வில்லன் கோஷ்டி யும் அரசியல்வாதிகளும் ஏமாற்று கின்றனர். ரஜினியின் பணத்தை பிடுங்குகின்றனர். சொத்துக்களை இழந்து ஏழையாகிறார். ஒரு ரூபாய் நாணயம் மட்டும் மிச்சம் இருக்கிறது. அந்த நாணயத்தை வைத்து படிப்படியாக மீண்டும் பணக்காரன் ஆவது தான் கதை.

ரஜினி படங்களில் அவரது ஸ்டைலுக்கு முக்கியத்துவம் இருக்கும். `சிவாஜி’ படத்திலும் புது மாதிரி `ஸ்டைல்’ சித்த ரிக்கப்பட்டுள்ளது. சண்டைக் காட்சிகளில் இந்த ஸ்டைல்கள் புகுத்தப்பட்டுள்ளன.

`ஸ்டண்ட்’ மாஸ்டர் பீட் டர் ஹெய்ன் சண்டைக் காட்சிகளை வடிவமைத் துள்ளார். `பைக்’ சண்டை, ரோப் கட்டி நடக்கும் சண்டை போன்றவை ஹைலைட்டாக குறிப்பிடப்படுகின்றன. ஒரே அடியில் இருபத்தைந்து பேரை ஆகாயத்தில் பறக்க விடுவதும் சண்டையில் புகுத்தியுள்ளனர். வில்லன்களுடன் மோதும் கார் சேசிங் காட்சியும் இடம் பெறுகிறது. இதற்காக நூற்றுக்கணக்கான கார்களை பயன்படுத்தியுள்ளனர்.

ரஜினி அணியும் ஆடைக ளும் பணக்காரத்தனம் மிளி ரும் வகையில் வடிவமைக் கப்பட்டுள்ளன.

ரஜினி ஆடிப்பாடும் ஒரு பாடல் காட்சிக்கு சிங்கப்பூரில் இருந்து பிரத்யேகமாக கங்காரு முடியில் செய்த வெங்வேறு நிறத்தில் 5 `கோட்’களை வாங்கியுள்ளனர். இவை ஒவ்வொன்றின் விலையும் தலா ரூ.3 லட்சமாம்.

இந்த படத்துக்கு இது வரை இல்லாத அளவில் வெளிநாட்டினரை நிறைய பயன்படுத்தியுள்ளனர்.

சமீபத்தில் வெளிநாட்டில் அங்குள்ள நடனக் கலைஞர் கள் பங்கேற்ற பாடல் காட்சி படமாக்கப்பட்டது. சென்னை பின்னி மில்லில் வெனிஸ் நகர செட் அமைத்து ஒரு காட்சியை படமாக்கினர். வெனீஸ் நகர கால்வாய் மற்றும் செட், போட்டு படம் பிடித்தனர். இதிலும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் நடித்துள்ள னர்.

ரஜினியின் `பஞ்ச்’ வசனங் களும் சிவாஜியில் இடம் பெறுகிறது.

என் வழி தனி வழி, நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி, ஆண்டவன் சொல்றான் அருணாசலம் செய்றான், என்பன போன்ற `பஞ்ச்’ வசனங்களை பல்வேறு படங்களில் பேசியுள்ளார். அது போல் `சிவாஜி’யிலும் பஞ்ச் வசனங்கள் இடம் பெறுகிறது.

ரஜினி ஸ்ரேயா முதல் இரவு பாடல் காட்சியொன்று கிளு கிளுப்பாக படமாக்கப் பட்டுள்ளது. நயன்தாரா ஒரு பாடலுக்கு மட்டும் ஆடுகிறார். இப்பாடல் காட்சி பூனாவில் படமாக்கப்படுகிறது.

ஒரு பதில் -க்கு “Sivaji – The Boss : Story, Nayanthara and other Details (Maalai Malar)”

 1. bsubra said

  சென்னை,அக்.26: ÔசிவாஜிÕ படத்துக்காக கிராமிய நடனக் கலைஞர்களுடன் ரஜினி, நயன்தாரா ஆடும் பாடல் காட்சி புனேயில் படமாக்கப்பட்டது.

  ஏவிஎம் தயாரித்து வரும் ÔசிவாஜிÕ படத்தில் ரஜினியின் அறிமுக பாடல் காட்சியும், சில வசனக் காட்சிகளும் புனே நகரில் படம்பிடிக்கப்படுகிறது. இதற்காக புனேயில் பிரமாண்ட சொகுசு மாளிகையை வாடகைக்கு பிடித்துள்ளனர். ஒரு நாளுக்கு மாளிகை வாடகை ரூ.3 லட்சம். இங்கு வசனக் காட்சிகள் படமாக்கப்பட்டன. இதையடுத்து நேற்று முன்தினம் புனேயில் உள்ள ஒரு அணை அருகே ரஜினி, நயன்தாரா பங்கேற்கும் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. நா. முத்துக்குமார் எழுதியுள்ள இப்பாடலை எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார்.

  இப்பாடல் காட்சிக்காக 5 ஆயிரம் நடனக் கலைஞர்கள் புனேக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் ஆடும் கிராமிய கலைஞர்களும் இடம்பெற்றிருக்கிறார்கள்.

  3 நாட்களுக்கு இந்த பாடல் காட்சி படமாக்கப்பட்டது. Ôஅந்நியன்Õ படத்தில் வரும் Ôரண்டக்க ரண்டக்கÕ பாடலைப் போல குறும்பும் வேகமும் நிறைந்த மெட்டில் இப்பாடல் அமைந்துள்ளது.

  பாடல் காட்சி படமானதும் மீண்டும் வசனக் காட்சிகளை படம்பிடித்து விட்டு ÔசிவாஜிÕ பட யூனிட் சென்னை திரும்பும். அடுத்த கட்ட படப்பிடிப்பு நவம்பர் 14ம் தேதி தொடங்கும் என தெரிகிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: