The Right to Information Act (RTI)
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 25, 2006
இந்தியாவில் தகவல் உரிமை பெறும் சட்டம் பயன்களை அளிக்கத் தொடங்கியுள்ளது
![]() |
![]() |
தகவல் பெறும் உரிமை குறித்த விழிப்புணர்வு |
இந்தியாவில் உள்ள அரசாங்க அலுவலகங்களுக்குச் சென்று தங்களுக்குத் தேவையான தகவல்களைப் பெறுவது என்பது சாதாரண குடிமக்களுக்ககு இயலாத ஒன்றாக இருந்து வந்தது. ரேஷன் அட்டை, குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு போன்ற சேவைகளைப் பெறவே பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை நாட்டின் பல பகுதிகளில் உள்ளது.
லஞ்சம் கொடுத்தால்தான் அரசு அலுவலகங்களில் வேலை நடக்கும் என்கிற எண்ணம் மக்கள் மனதில் வெகுவாக பரவியிருந்த நிலையில்தான் கடந்த ஆண்டு இந்திய அரசால் தகவல் உரிமை பெறும் சட்டம் இயற்றப்பட்டது.
இந்த சட்டத்தின்படி, அரசு அதிகாரிகள் 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல்களைத் தெரிவிக்க வேண்டும்.
இல்லாவிட்டால் அரசு அதிகாரிகள் அபராதம் செலுத்த நேரிடும். இந்தச் சட்டம் வந்த பிறகு அடித்தளத்தில் இருக்கும் பலர் ஒரு சாதாரண விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தங்களுக்கு வேண்டிய தகவல்களைப் பெற்றுக் கொள்கின்றனர்.
சில இடங்களில் தங்களுக்கு கிடைக்க வேண்டிய அரசின் நலத் திட்டங்களை அமல்படுத்துவதற்கு மக்கள் இந்தச் சட்டதின் உதவியை நாடியுள்ளனர்.
தமிழ் நெஞ்சன் said
தகவல் அறியும் உரிமை பற்றிய நல்ல செய்தி. 2006 ஏப்ரல் மாதத்தில் தமிழில் இது பற்றிய நூல் எழுதினேன். இதனைப் பற்றி இன்னும் சுவாரசியமான் தகவல்கள் தமிழில் உள்ளன. அனுப்பலாமா? உங்கள் தளத்தில் இடம் பெற?
தமிழ் நெஞ்சன்
டி என் கிருஷ்ணமூர்த்தி