Ramzan Shopping == Christmas Santa Claus == Deepavali Celebrations
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 25, 2006
வர்த்தகமயமாகும் ரம்சான் பண்டிகை
![]() |
ரம்ஜான் தொழுகையில் இஸ்லாமியர்கள் |
ரம்சான் காலத்தில் முஸ்லீம்கள் வீடுகளிலேயே அதிக நேரம் தங்கியிருக்கின்றனர். இதனால் இவர்கள் அதிக நேரம் டி வி பார்ப்பதாக தொலைக்காட்சி நிலைய உரிமையாளர்கள் கூறுகின்றனர். முஸ்லீம் நாடுகளில் செய்யப்படும் மொத்த விளம்பரங்களில 30 சதவீதம் ரம்சான் மாத காலத்தில் செய்யப்படுவதாக கணிக்கப்பட்டுள்ளது. செயற்கைக் கோள் மூலம் செய்யப்படும் டி வி ஒளிபரப்புகள் உலகம் முழுவதிலும் உள்ள முஸ்லீம் குடும்பங்களை சென்றடைகின்றன.
நோன்பு காலத்தில் உணர்ச்சிமயமான விளம்பரங்களை விளம்பரதாரர்கள் தயாரிக்கின்றனர். நோன்பு இருப்பவர்களுடன் தொடர்புகொள்ள நீதிக் கதைகளை சொல்வது ஒரு வழியாக உள்ளது என்கிறார் லியோ பர்னேட் நிறுவனத்தின் ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கப் பிரிவின் தலைவர் ரிச்சர்ட் பிண்டெர்.
ரம்சான் போது ஷாப்பிங் செய்யாதீர்கள் என்று கூறுகிறார் இமாம் அஜ்மால் மசூர். அதிக அளவுவிலான வர்த்தக் குறுக்கீட்டால், ரம்சானின் உண்மையான நோக்கம் பாதிக்கப்படக் கூடிய அபாயம் இருப்பதாக இமாம் அஜ்மல் மசூர் கருதுகிறார்.
உலகம் முழுவதிலும் 100 கோடிக்கும் அதிகமான முஸ்லீம்கள் உள்ளனர். இதில் பலர் வேகமாக வளரும் நாடுகளில் உள்ளனர். எனவே ரம்சான் மாதத்தில் வர்த்தகத்துக்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது ஏராளமாக பொருள் செலவிடப்படுவதை ஏற்றுக் கொள்ளாத சில முஸ்லீம்கள், தற்போது ரம்சானுக்கும் அதே போன்றதொரு நிலை ஏற்பட்டுள்ளதோ என்று எண்ணுகின்றனர்.
sarav said
உண்மைதான் பாலா. கிறிஸ்துமஸ் பண்டிகை இப்போ வெறும் பரிசுகள் பண்டிகையாகத்தான் மாறியிருக்கு(At least, in America). தீபாவளி சிறப்புத் தள்ளுபடிகளும், சிறப்பு T V நிகழ்ச்சிகளும், புதுப்பட ரிலீஸ்களும் தீபாவளியின் அர்த்தத்தை மாத்திகிட்டுதான் இருக்கு.
ஆனா, ஷாப்பிங் செய்யாதீங்க-ன்னு கட்டுப்பாடு விதிச்சு மக்கள தடுத்துடமுடியும்-னு தோனல. காலத்தோட மாற்றங்களா, இந்த மாற்றங்கள ஏத்துக்கறதுதான் வழின்னு நெனைக்கறேன்.
bsubra said
Consumer rocks 🙂
good for the economy 😉