Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

‘Vijayakanth is a responsible MLA’ – Peter Alphonse (Congress)

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 24, 2006

விஜயகாந்த் பற்றி விமர்சனம்: கண்ணிய குறைவாக இருந்தால் ஜெயலலிதா மீது நடவடிக்கை: சபாநாயகர் பேட்டி

நெல்லை, அக். 24-

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை தாக்கி ஒரு அறிக்கைவெளி யிட்டிருந்தார். இதுபற்றி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பீட்டர் அல்போன்ஸ், சபாநாயகர் ஆவுடையப்பனிடம் நேரில் புகார் தெரிவித்தார்.

சட்டசபைக்கு சட்டமன்ற உறுப்பினர் குடித்து விட்டு வருவார் என்று ஒரு எதிர்க்கட்சி தலைவர் கூறியிருப்பது தமிழக சட்டசபையின் ஜனநாயக மாண்பை பாதிக்கும் வகையில் உள்ளது.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சட்டமன்றத்திற்கு பொறுப்புடன் வந்து செல்கிறார். ஆனால் எதிர்க் கட்சி தலைவர் ஜெயலலிதா கூறியது தமிழக சட்டமன்றத்திற்கு வந்த விபத்தாக உள்ளது. எனவே தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் குறிப்பிட்டு உள்ளார்.

இது குறித்து நெல்லையில் இருந்த சபாநாயகர் ஆவுடையப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக சட்டசபையின் மாண்பை குறைக்கும் வகையில் எதிர்க்கட்சி தலைவரான ஜெயலலிதா அறிக்கை வெளி யிட்டுள்ளார் என்று பீட்டர் அல்போன்ஸ் எம்.எல்.ஏ. என்னிடம் நேரில் முறையிட்டு உள்ளார்.

நாளை நான் சென்னை செல்கிறேன். அங்கு அவர் வெளியிட்ட ஒரிஜினல் அறிக்கையை ஆராய்ந்து பார்ப்பேன். அது சட்டசபை மரபை மீறிய செயலாக இருந்தால், அவமதிக்கும் செயலாக இருந்தால், கண்ணியத்தை குறைக்கும் செயலாக இருந்தால் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

2 பதில்கள் -க்கு “‘Vijayakanth is a responsible MLA’ – Peter Alphonse (Congress)”

  1. bsubra said

    சட்டப் பேரவையின் மாண்பையும், கண்ணியத்தையும் குறைக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா மீது சட்டப் பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் கொறடா பீட்டர் அல்போன்ஸ் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

    திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

    உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாத ஜெயலலிதா, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மீது புழுதி வாரி தூற்றி வருகிறார். இப்போது, சட்டப் பேரவை உறுப்பினர்கள் குடித்துவிட்டு போதையில் தெளிவில்லாமல் பேரவைக்குள் வருகிறார்கள் எனச் சொல்லி கொச்சைப்படுத்தியுள்ளார். இதனால் தமிழக மக்கள், குடித்துவிட்டு யார் சட்டப் பேரவைக்குள் வருகிறார்கள் எனத் தெரியாமல் எல்லா உறுப்பினர்களையும் குடிப்பழக்கம் உள்ளவர்களாகவே உருவகப்படுத்தி பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

    இது சட்டப் பேரவையின் மாண்பையும், கண்ணியத்தையும், உறுப்பினர்களின் மரியாதையையும் கெடுக்கும் செயல். ஒரு எதிர்க்கட்சித் தலைவரே இப்படி பேசி இருப்பது ஜனநாயக அவலமாகும்

    எனவே, ஒட்டுமொத்த சபையின் மாண்பைக் குறைக்கும் எண்ணத்தில் செயல்பட்டுள்ள ஜெயலலிதா மீது சட்டப் பேரவைத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சட்டப் பேரவை உரிமைக் குழுவில் நானும் ஒரு உறுப்பினர் என்பதால், இப் பிரச்சினையை உரிமைக் குழுவுக்கு அனுப்பவும் கேட்டுக் கொள்வேன்.

    விஜயகாந்த் பெயர்: ஜெயலலிதா அறிக்கையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பெயரை சொல்லி இருப்பது போலத்தானே தெரிகிறது என கேட்கிறீர்கள்.

    அப்படியானால் விஜயகாந்த் பெயரை ஜெயலலிதா நேரடியாகவே கூறி இருக்கலாமே. ஏன், ஒட்டுமொத்த உறுப்பினர்களையும் கூறுவது போல கூறி இருக்க வேண்டும். விஜயகாந்த் எனது சக உறுப்பினர். நாங்கள் முதல் வரிசை உறுப்பினர்கள். அவரையே அப்படி கூறியிருந்தாலும் அது தவறு. அவர் ஒரு கட்சியின் தலைவர், சபை நடவடிக்கையில் பங்கேற்று செல்கிறார். அவரை குடிகாரன் எனச் சொல்வது தவறு.

    இப்பிரச்சினையில் விஜயகாந்த்துக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்குமா என கேட்கிறீர்கள்.

    இது அரசியல் கட்சிகளுக்கு இடையிலான பிரச்சினை அல்ல. ஒட்டுமொத்த உறுப்பினர்கள் தொடர்புடைய பிரச்சினை.

    சட்டப் பேரவை கூடும்போது, இப்பிரச்சினை குறித்து உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வருவது குறித்து, எங்கள் கட்சித் தலைவர்களை கலந்தாலோசித்து முடிவு செய்யப்படும் என்றார் பீட்டர் அல்போன்ஸ்.

  2. பீட்டர் அல்போன்ஸ் க்கு சில தகவல்கள்.

    1) கர்மவீரர் காமராசரின் பங்களா என்று இல்லாத ஒன்றை படம் போட்டது சரியா?
    2) ப.சிதம்பரம் ஒரு “சின்ன பயல்” என்று கூறியது சரியா?
    3) விஜயகாந்த் ஒரு “தெலுங்கர்” என்று கருணாநிதி கூறியது சரியா?
    4) முன்பு ஜெயலலிதா வை “பாப்பாத்தி” என்று கருணாநிதி கூறியது சரியா?
    5) சட்டமன்றத்தில் ஜெயலலிதா வின் புடவையை இழுத்தது சரியா?

    ஒரு தனி மனிதனை தாக்கி பேசுவது தவறுதான்.ஆனால் மேலே உள்ளவை கருணாநிதி சொன்னவை,செய்தவை.
    கருணாநிதி கூறினால் மட்டும் சரியா?
    ரஜினிகாந்த் ஒரு குடிகாரர்,சினிமாவில் புகை பிடித்தால் சமுதாயம் கெட்டு போய் விடும் என்று கூறும் அரசியல்வாதிகள் தங்களுக்கும் தனி மனித ஒழுக்கம் அவசியம் என்பதை உணர வேண்டும்.

    அரசியல் தலைவர்களுக்கு தனி மனித ஒழுக்கம் அவசியம். ஒன்றுக்கு மேல் மனைவி,குடி,ஊழல் என்று உள்ளவர்கள் எப்படி மக்களுக்கு நல்ல வழி காட்ட முடியும்?

    விஜயகாந்த் ஒன்றும் காந்தி அல்ல.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: