“Supreme Court crosses its Boundaries” – ‘Reservations are not meant for 2.5 lacs p.a. salaried folks’
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 24, 2006
இட ஒதுக்கீட்டுக் கொள்கை: உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து 31-ல் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
சென்னை, அக். 25: இட ஒதுக்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து வரும் 31-ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச் செயலர் தொல். திருமாவளவன் கலந்து கொள்கிறார்.
இது தொடர்பாக அக் கட்சி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
“பதவி உயர்வில் ஒதுக்கீடு’ என்கிற சமூகநீதிக் கொள்கை தொடர்பான முடிவுகளை மத்திய அரசு தான் எடுக்க முடியும். அவற்றில் நீதிமன்றங்கள் தலையிடுவது அதிகார வரம்பு மீறல் ஆகும்.
- “50 சதவீதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது.
- ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் பெறுவோருக்கு இட ஒதுக்கீட்டுப் பயன் கிடைக்கக் கூடாது.
- பதவி உயர்வில் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக மாநில அரசுகளே முடிவு எடுத்துக் கொள்ளலாம்’ என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்துள்ளது.
சமூகநீதிக் கொள்கையை முற்றிலும் அழிக்கும் முயற்சி இது. தனது இறையாண்மைக்கு எதிராக வரம்பு மீறும் உச்ச நீதிமன்றத்தின் போக்குகளை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்றும் இக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்படும்.
siva said
I need thirumavalavan email id, or krishnaswami’s id, can you give me if you hve? or their address to communicate?
bsubra said
I would check with Viduthalai Siruthaigal official websites. Also, you might be able to get hold of their MLA addresses. Especially Ravikkumar might be net-savvy.
Try contacting Kaalachuvadu for Ravikumar contact details
bsubra said
சதாம் தூக்கிலிடப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
சென்னை, ஜன. 6: சதாம் ஹுசைன் தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர் தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அமைப்பின் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் பேசியது:
சதாம் ஹுசைனை தூக்கிலிட்ட சம்பவம் கண்டனத்துக்கு உரியதாகும். அவருக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்ட போது, இந்திய அரசு, போப்பாண்டவர் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதைக் கேட்காத அமெரிக்கா, சதாமுக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்றி உள்ளது. ஏகாதிபத்திய முறையில் நிறைவேற்றப்பட்டுள்ள இது, தண்டனை அல்ல; படுகொலை ஆகும்.
அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தை உலகின் அனைத்து நாடுகளும் ஓரணியில் நின்று எதிர்க்க வேண்டும் என்றார் திருமாவளவன்.
ஆர்ப்பாட்டத்தின் போது, விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர், அமெரிக்க அதிபர் புஷ்ஷின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர்.
முதல்வருடன் சந்திப்பு:இதனிடையே, முதல்வர் கருணாநிதியை வியாழக்கிழமை சந்தித்தார் திருமாவளவன். அப்போது, கடலூர் அருகே தலித் இளைஞர் படுகொலை செய்யப்பட்டது மற்றும் எம்.எல்.ஏ. ரவிக்குமார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகியன குறித்து நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் மனு அளிக்கப்பட்டது.
Reservations, Creamy Layer - Thoughts, Observations, Personal Experiences, Analysis « Snap Judgment said
[…] செய்தி : […]