Pranab gets MEA, Anthony named Defence Minister
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 24, 2006
மத்திய மந்திரி சபை இன்று இரவு மாற்றம்: நடிகர் அம்பரீஷ் மந்திரி ஆகிறார்
புதுடெல்லி, அக். 24-
மத்திய மந்திரிசபையில் பல இலாகாக்களுக்கு மந்திரிகள் நியமிக்கப்படாமல் உள்ளனர். வெளியுறவு மந்திரியாக இருந்த நட்வர்சிங் ஈராக்கின் உணவுக்கு எண்ணை திட்ட ஊழலில் சிக்கி பதவியை ராஜினாமா செய்தார்.
- தொழிலாளர் நலத்துறை மந்திரியாக இருந்த தெலுங் கானா கட்சி தலைவர் கே.சந்திரசேகர்ராவ்,
- நகர்ப்புற வளர்ச்சித்துறை மந்திரியாக இருந்த ஏ.நரேந்திரா,
- நீர் வள ஆதார மந்திரியாக இருந்த ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த ஜெய் பிர காஷ் நாராயணன் யாதவ் ஆகியோரும் ராஜினாமா செய்ததால் அவர்கள் வகித்த இலாகாக்கள் காலியாக உள்ளன.
இந்த நிலையில் மத்திய மந் திரி சபையில் இன்று சிறிய அளவில் மாற்றம் செய் யப்படுகிறது.
ராணுவ மந்திரியாக இருக்கும் பிரணாப்முகர்ஜி இலாகா மாற்றம் செய்யப் படுகிறது. அவரை வெளியுறவு மந்திரியாக நியமிக்க பிரதமர் மன்மோகன் சிங் முடிவு செய்து இருக்கிறார். பிரணாப் முகர்ஜிக்கு பதில் புதிய ராணுவ மந்திரி நியமிக்கப்படுகிறார்.
காங்கிரஸ் பொது செயலாளராக இருக்கும் ஏ.கே.அந்தோணி தொழிலாளர் நலத்துறை மந்திரியாக நியமிக்கப்படுகிறார். ஐ.என்.டி.சி. தலைவர் சஞ்சீவரெட்டியும் மந்திரியாக பதவி ஏற்கிறார்.
பிரபல கன்னட நடிகர் அம்பரீஷ் மத்திய மந்திரிசபையில் இடம் பெறுகிறார். இவர் 1998-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டி யிட்டு வெற்றி பெற்று எம்.பி. ஆனார். தொடர்ந்து 1999-ம் ஆண்டு தேர்தலிலும், 2004-ம் ஆண்டு தேர்தலிலும் வெற்றி பெற்று 3-வது முறையாக எம்.பி. பதவி வகித்து வருகிறார்.
நடிகர் அம்பரீஷ் தமிழில் ரஜினிகாந்த் நடித்த பிரியா படத்தில் ஸ்ரீதேவிக்கு காதலனாக நடித்துள்ளார். 200-க்கும் மேற்பட்ட கன்னடப் படங்களில் நடித்து முன்னணி நடிகராக உள்ளார்.
இவரது மனைவி நடிகை சுமலதா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ள ஏராளமான படங்களில் நடித்தவர். அம்பரீசுடன் ஜோடியாக நடித்த போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு 1992-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
கன்னட பட உலகில் முன் னணி நடிகராக இருந்த அம் பரீஷ் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தீவிர அரசியலில் குதித்தார்.
புதிய மந்திரிகள் பதவி ஏற்பு விழா இன்று இரவு 7.30 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நடக்கிறது. ஜனாதிபதி அப்துல் கலாம் புதிய மந்திரிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
This entry was posted on ஒக்ரோபர் 24, 2006 இல் 6:54 பிப and is filed under A K Antony, Ambareesh, Chandra Sekhar Sahu, Defence Minister, External Affairs, Information and Broadcasting, J P Yadav, Jaiprakash Narayan Yadav, Karnataka, Manmohan Singh, Minister of State, Mukherjee, Oscar Fernandes, Pranab, Prime Minister, Rural Development, Sumalatha, Water Resources. You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, அல்லது trackback from your own site.
bsubra said
பிரணப் முகர்ஜிக்கு வெளியுறவு: புதிய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி
புது தில்லி, அக். 25: புதிய வெளியுறவு அமைச்சராக பிரணப் முகர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் வகித்து வந்த பாதுகாப்பு இலாகா, புதிய அமைச்சராகப் பதவியேற்றுள்ள கேரள மாநில முன்னாள் முதல்வர் ஏ.கே. அந்தோனிக்கு வழங்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை இரவு குடியரசுத் தலைவர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி நடந்தது. புதிய காபினட் அமைச்சராக அந்தோனிக்கும், இணை அமைச்சர்களாக கர்நாடகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி எம்.பி.யும் கன்னட திரைப்பட நடிகருமான எம்.எச். அம்பரீஷ், லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் நாராயண யாதவ் ஆகியோருக்கும் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
இராக்கின் கச்சா எண்ணெய்க்கு உணவுத் திட்டத்தில் நடந்த ஊழலில் நட்வர் சிங்குக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து, வெளியுறவுத் துறை அமைச்சர் பதவியிலிருந்து அவர் விலக வேண்டிய நிலை ஏற்பட்டது. சுமார் ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு புதிய வெளியுறவு அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். எழுபது வயதைக் கடந்த பிரணப் முகர்ஜி, ஏற்கெனவே நரசிம்ம ராவ் அமைச்சரவையில் ஓராண்டு காலம் வெளியுறவு அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். அத்துடன், நிதி மற்றும் வர்த்தக அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
பிரணப் முகர்ஜியின் இலாகா மாற்றத்தை ஒட்டி, நடந்த அமைச்சரவை மாற்றத்தில், மூன்று புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காபினட் அமைச்சராகப் பொறுப்பேற்ற அந்தோனிக்கு (65) பாதுகாப்புத் துறை வழங்கப்பட்டுள்ளது. அவர் மூன்று முறை கேரள முதல்வராகவும், ஒரு முறை மத்திய அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை அவர் வகித்து வருகிறார்.
இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள அம்பரீஷுக்கு செய்தி, ஒலிபரப்புத் துறை வழங்கப்பட்டுள்ளது.
ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் நாராயண யாதவ், ஏற்கெனவே நீர்வளத் துறை இணை அமைச்சராக இருந்தார். தனது சகோதரரை ஒரு வழக்கிலிருந்து, விதிகளுக்குப் புறம்பாக விடுவித்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டை அடுத்து, அவர் பதவி விலகினார். அவருக்கு மீண்டும் அதே துறை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரியில் நடந்த அமைச்சரவை மாற்றத்துக்குப் பிறகு, இலாகா இல்லாத இணை அமைச்சராக நீடித்து வந்த ஆஸ்கர் பெர்னாண்டஸýக்கு, தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை தனிப் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி (டிஆர்எஸ்) கட்சியைச் சேர்ந்த கே. சந்திரசேகர் ராவ் பதவி விலகியதை அடுத்து அந்தத் துறைக்கு அமைச்சர் இல்லாதிருந்தார்.
தொழிலாளர் நலத் துறை இணை அமைச்சராக இருந்த சந்திரசேகர் சாகு, ஊரக வளர்ச்சித் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பஞ்சாயத்து ராஜ் மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் மணிசங்கர் அய்யரிடம் வடகிழக்கு மாநிலங்கள் விவகாரம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.