Did Vadivelu plagiarize concepts from Bhagyaraj?
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 24, 2006
வடிவேலுவின் 2 காமெடி அதை என்னுடையது: பாக்கியராஜ் புகார்
சென்னை, அக். 24-
விஷால் நடிக்கும் `சிவப்பதிகாரம்‘ படத்தின் பாடல் கேசட் விழா வட பழனியில் நடந்தது. இந்த விழாவில் பங்கேற்று பேசிய நடிகர் பாக்கியராஜ் தான் எழுதிய 2 காமெடி கதைகள் படமாகி அவற்றில் வடிவேலு நடித்ததாக புகார் கூறினார். பாக்கியராஜ் பேச்சு விவரம் வருமாறு:-
முன்பெல்லாம் படம் ரிலீஸ் ஆன பிறகு சரி இல்லையாமே, ஊத்துக்கிட்டாமே, என்றெல்லாம் கன்னாபின்னா வென்று பேசுவார்கள். இப்படம் வெளிவரும் முன்பே `அது ரிலீஸ் இல்லை, பெட்டி வராது என்றெல்லாம் பேசினார்கள். தீபாவளி படங்கள் ரிலீசின் போது அவற்றை கேட்டேன். வருத்தமாக இருந்தது.
உதவி டைரக்டர்கள் முந்தைய காலங்களில் டைரக்டர்கள் வீட்டு வாசலில் காத்து கிடந்து சான்ஸ் கேட்டனர். நான் பாத்திபன் போன்றோர் அப்படித் தான் டைரக்டராகினோம்.
ஆனால் இப்ப உதவி டைரக்டர்களை தேட வேண்டி இருக்கு. அகப்படும் உதவி டைரக்டர்கள் கூட எவ்வளவு பணம் தருவீர்கள் என்று கேட்கிறார்கள்.தமிழ், படங்களில் மட்டும் அவர்கள் வேலை பார்ப்பதில்லை. தெலுங்கு, மலையாளம், இந்தின்னு சுற்றிக்கிட்டே இருக்காங்க. உதவி டைரக்டர்கள் நம்பிக்கையா இருப்பதும் அவசியம்.
நான் ஒரு காமெடி கதை எழுதி வச்சிருந்தேன். ஓட்டு போட்டவர் கிட்ட எனக்குத் தானே போட்டே என்று வேட்பாளர் கேட்க உங்களுக்குத்தாண்ணே நீங்க நம்ப மாட்டிங்கன்னு காட்டுறதுக்கு எடுத்து வந்துட்டேன் என்று ஓட்டு சீட்டை காண்பிப்பார். சில நாள் கழித்து வடிவேலு நடிக்க இந்த கதையை படத்தில் பார்த்தேன். வடிவேலுக்கே போன் பண்ணி கேட்டேன். எனக்கு தெரியாது நடிக்கச் சொன்னாங்க நடிச்சேன் என்றார். அது போல் பகலில் அம்மா-அப்பாவை மதிக்கும் ஒருவேன் ராத்திரியானால் குடிச்சிட்டு வந்து சித்ரவதை செய்றமாதிரி கதை எழுதி இருந்தேன். அதுவும் வடிவேலு நடிக்க வெளியாகி விட்டது.
நல்ல கதை உள்ள படங்களை மக்கள் ஏற்பார்கள் சித்திரம் பேசுதடி, எம்டன் மகன், திமிரு படங்களில் கதையம்சம் இருப்பதால் ஒடுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.
நடிகர்கள் பார்த்திபன், விஷால், நடிகை மம்தா, கவிஞர்கள் பா.விஜய், யுகபாரதி, டைரக்டர்கள் லிங்கசாமி, கரு. பழனியப்பன் தயாரிப்பாளர்கள் எம்.ஆர். மோகன் ராதா, பி.எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பேசினார்கள்.
மறுமொழியொன்றை இடுங்கள்