Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Bank employees to observe Bandh to protest against Outsourcing & Privatization

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 23, 2006

அவுட்சோர்சிங், தனியார்மயமாக்கலை எதிர்த்து அக். 27ல் வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தம்

புதுதில்லி, அக். 23: வெளிப் பணி ஒப்படைப்பு(அவுட் சோர்சிங்), தனியார்மயமாக்கல் ஆகியவற்றை எதிர்த்து அக்.27ல் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்கின்றனர். ஒன்பது வங்கி ஊழியர் சங்கங்களின் தலைமை அமைப்பான வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு இந்த வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக அக்.18ல் தலைமை தொழிலாளர் ஆணையாளருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து இந்த வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், பணியாளர்களை நியமித்தல், பென்ஷன் சலுகைகள் போன்ற தங்களது கோரிக்கைகளில் அரசு அலட்சியம் காட்டியதே இந்தப் பேச்சுவார்த்தை தோல்வி அடையக் காரணம் என வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து இந்த கூட்டமைப்பின் பொதுச் செயலர் வெங்கடாச்சலம் விடுத்துள்ள அறிக்கை:

மத்திய அரசு இந்தக் கொள்கைகளைத் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால், இந்த வேலை நிறுத்தம் மேலும் தீவிரமாகும். இதனைத் தவிர்க்க, அரசு அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்த முன்வரவேண்டும்.

அரசு வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்துகொள்வார்கள் என்றார் வெங்கடாச்சலம்

ஒரு பதில் to “Bank employees to observe Bandh to protest against Outsourcing & Privatization”

  1. bsubra said

    வங்கி ஊழியர் வேலைநிறுத்தம்: வங்கிப் பணிகள் பெரும் பாதிப்பு

    சென்னை, அக். 28: வங்கித் துறையில் காலி இடங்களை நிரப்ப வேண்டும். அன்னிய முதலீட்டை அனுமதிக்க கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஒரு நாள் வேலை நிறுத்தம் நடைபெற்றது.

    நாடு முழுவதிலும் உள்ள பொதுத்துறை வங்கிகளில் பணிபுரியும் 9 லட்சம் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர். இந்த வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு 9 வங்கி ஊழியர் சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்தன.

    பணிகள் முடக்கம்: ஸ்டிரைக் காரணமாக நாடு முழுவதும் வங்கிப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. தமிழகத்தில் அனைத்து வங்கிப் பணிகளும் முடங்கின.

    அன்னியச் செலாவணி பணப் பரிவர்த்தனை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. ரிசர்வ் வங்கிப் பணிகள் முடங்கியதால், அன்னியச் செலாவணி பண பரிவர்த்தனையில் ஈடுபடும் தனியார் நிறுவன சேவைகளும் பாதிக்கப்பட்டன.

    அதே வேளையில் பன்னாட்டு வங்கிகளும், தனியார் வங்கிகளும் செயல்பட்டன. அவற்றின் ஊழியர்கள் பெருமளவுக்கு பணியில் ஈடுபட்டனர்.

    ஐசிஐசிஐ, எச்டிஎப்சி, யுடிஐ முதலிய வங்கிகளில் ஊழியர் சங்கங்கள் கிடையாது. இதனால் இந்த வங்கிகள் வழக்கம் போல் செயல்பட்டன. எனினும், தனியார் வங்கிகளான கரூர் வைஸ்யா வங்கி, கத்தோலிக் சிரியன் வங்கி, லட்சுமி விலாஸ் வங்கிகளின் ஊழியர்களும் போராட்டத்தில் பங்கேற்றதால் அவை செயல்படவில்லை.

    பேச்சு தோல்வி: மத்திய அரசுடனான பேச்சு தோல்வி அடைந்ததால், இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவதென வியாழக்கிழமை முடிவு செய்யப்பட்டதாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலர் சி.எச். வெங்கடாசலம் தெரிவித்தார்.

    கருணை அடிப்படையில் பணி நியமனம், ஓய்வூதிய சலுகை, காலியாக உள்ள ஒரு லட்சம் பணிகளை பூர்த்தி செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த வேலைநிறுத்தப் போராட்டம் நடந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

    பொதுத்துறை வங்கிகளை இணைப்பது, வங்கிப் பணிகள் வெளியாரிடம் ஒப்படைப்பு, கட்டுப்பாடு ஏதுமின்றி அன்னிய வங்கிகளை அனுமதிப்பது ஆகியவற்றுக்கும் எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இந்த போராட்டம் நடந்ததாக அவர் குறிப்பிட்டார். நவம்பர் 9-ம் தேதி வங்கி ஊழியர் சம்மேளனங்கள் ஒன்று கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக அவர் மேலும் கூறினார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: