‘DMK Alliance victory is Asurargal’s victory’ – Thol Thirumavalavan
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 20, 2006
விடுதலை சிறுத்தைகள் இணைந்ததால் தி.மு.க. கூட்டணியின் வலிமை கூடியிருப்பது நிரூபணம்: திருமாவளவன் அறிக்கை
சென்னை, அக்.20-
விடுதலை சிறுத்தைகள் பொது செயலாளர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தலிலும் 31 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இது கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என்று முதல்-அமைச்சர் கூறியிருப்பது அவருடைய பெருந்தன்மையான – முதிர்ச்சியான தலைமைப் பண்பை வெளிப்படுத்துகிறது.
கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்லும் அவரது இயல்பான அணுகுமுறைகளே தி.மு.க. கூட்டணியின் இந்த அமோக வெற்றிக்கு அடிப்படையாகும். விடுதலை சிறுத்தைகளின் வரவால் தி.மு.க. கூட்டணியின் வலிமை மேலும் கூடியிருக்கிறது என்று முதல்-அமைச்சர் கருணாநிதி, உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தேர்தலுக்கு முன்பே வெளிப்படையாக அறிவித்தது, இந்த அமோக வெற்றியின் மூலம் உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
கடைசி நேரத்து வரவால் விடுதலை சிறுத்தைகளுக்கு பெரிதும் பயனில்லை என்றாலும், போட்டியிட்ட குறைவான இடங்களில் கணிசமான வெற்றிகளைப் பெற்றிருக்கிறோம்.
குறிப்பாக
- கடலூர் மாவட்டத்தில் 3 நகராட்சி கவுன்சிலர்கள், 4 பேரூராட்சி கவுன்சிலர்கள்,
- விழுப்புரம் மாவட்டத்தில் 2 நகராட்சி கவுன்சிலர்கள், 2 பேரூராட்சி கவுன்சிலர்கள், ஒரு ஊராட்சி மன்ற தலைவர்,
- தர்மபுரி மாவட்டத்தில் 2 நகராட்சி கவுன்சிலர்கள், 3 பேரூராட்சி கவுன்சிலர்கள், 5 ஒன்றிய கவுன்சிலர்கள், ஒரு மாவட்ட கவுன்சிலர்,
- பெரம்பலூர் மாவட்டத்தில் 2 ஒன்றிய கவுன்சிலர்கள், ஒரு பேரூராட்சி கவுன்சிலர்,
- வேலூர் மாவட்டத்தில் ஒரு நகராட்சி கவுன்சிலர், 2 பேரூராட்சி கவுன்சிலர்கள், 8 ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒரு ஒன்றிய கவுன்சிலர்,
- சேலம் மாவட்டத்தில் ஒரு மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம்.
அத்துடன், தி.மு.க. கூட்டணியின் அமோக வெற்றிக்கு மிகப்பெருமளவில் பயன்பட்டிருக்கிறோம் என்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறோம்.
இந்த தீபாவளி நரகாசுரனை கொன்றதற்காக அல்ல; நரகாசுரனும், நரகாசுரனின் வாரிசுகளும் வென்றதற்காக கொண்டாடப்படும் தீபாவளி ஆகும். தி.மு.க. கூட்டணியின் தேர்தல் வெற்றி அசுரர்களின் வெற்றி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மறுமொழியொன்றை இடுங்கள்