சினிமா
தீபாவளி திரைப்படங்கள் ஒரு முன்னோட்டம்
இந்த வருட தீபாவளிப் பண்டிகைக்கு
- விஜயகாந்த்,
- சரத்குமார்,
- அர்ஜுன்,
- அஜித்,
- சிம்பு,
- ஜீவா,
- ஆர்யா
ஆகியோர் நடித்த ஏழு படங்கள் திரைக்கு வருகின்றன. கமல், ரஜினி, விக்ரம், விஜய், சூர்யா, த்ரிஷா ஆகியோ ரின் படங்கள் இந்த தீபாவளிக்கு வெளிவரவில்லை. தீபாவளிக்கு வெளிவரும் ஏழு படங்களில் மூன்றில் நயன்தாரா கதாநாயகியாக நடித்துள்ளார்.
மற்ற படங்களில்
- அஸின்,
- ரீமாசென்,
- சந்தியா,
- லஷ்மிராய்,
- கனிகா,
- மல்லிகா கபூர்,
- கீரத், அதிசயா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். தீபாவளிப் படங்களைப் பற்றிய ஒரு சிறு முன்னோட்டம்…
தர்மபுரி
விஜயகாந்த், லஷ்மிராய், விஜயகுமார், மணிவண்ணன், ராஜ்கபூர், எம்.எஸ்.பாஸ்கர், பாபி, மனோபாலா, சுமித்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தர்மபுரியில் சமையல் பாத்திரங்களை வாடகைக்கு விடு பவராக நடித்துள்ளார் விஜயகாந்த். தான் உண்டு; தன் வேலையுண்டு என வாழ்ந்து வரும் அவருக்கு ஊரிலுள்ள பெரிய மனிதர்களால் சில பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அவற்றை தன்னுடைய வசனங்களாலும், வலுவான கால்களாலும் எதிர்கொண்டு எப்படி ஜெயிக்கிறார் என்பதே கதை.
காதல், சென்டிமெண்ட், காமெடி இவற்றினூடே சிறிது அரசியல் என அனைத்து ஜனரஞ்சக அம்சங்களோ டும் படம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இசை -ஸ்ரீகாந்த் தேவா.
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் – பேரரசு.
தயாரிப்பு -ஸ்ரீசூர்யா மூவிஸ் சார்பாக ஏ.எம்.ரத் னம்.
மக்கள் தொடர்பு -நெல்லை சுந்தர்ராஜன்.
வாத்தியார்
அர்ஜுன், மல் லிகா கபூர், பிரகாஷ்ராஜ், வடி வேலு, மணிவண்ணன், தலைவாசல் விஜய், முத்துக்காளை, சிங்கமுத்து, அல்வா வாசு, பிரதீப் ராவத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அர்ஜுன் நேர்மையான பள்ளி ஆசிரியர். ஆசிரியர் பணியை சேவையாக நினைத்து வாழ்ந்துவருகிறார். இந்த நேரத்தில் அவருக்கு சில அரசியல் குறுக் கீடுகள் ஏற்படுகின்றன. குறுக்கு வழியில் முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் அரசியல்வாதி ஒருவர் சமூகத்துக் குப் புறம்பான காரியங்களில் ஈடுபடுகிறார்.
அவருடைய முயற் சியை அர்ஜுன் புத்திசாலித்தனமாக முறியடிக்கிறார். அர்ஜுன் படங்களுக்கேயுரிய ஆக்ஷன் காட்சிகளும், வடிவேலுவின் காமெ டியும் படத்துக்கு பலம்.
கதை -அர்ஜுன்.
வசனம் -ஜி.கே.கோபி நாத்.
இசை -இமான்.
ஒளிப்பதிவு -கே.எஸ்.செல்வராஜ்.
கலை -சங் கர்பாபு.
படத்தொகுப்பு -வி.டி.விஜயன்.
திரைக்கதை, இயக்கம் – ஏ.வெங்கடேஷ்.
தயாரிப்பு -ஏ.பி.ஃபிலிம் கார்டன் சார்பில் வி.பழ னிவேல், ஏ.சி.ஆனந்தன்.
மக்கள் தொடர்பு -மெüனம் ரவி.