உள்ளாட்சி தேர்தல் வன்செயல்கள் குறித்து திமுகவினர் மீது குற்றச்சாட்டு
![]() |
![]() |
தேர்தல் வன்செயல்கள் |
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புக்களுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றபோது, சென்னையில் திமுகவினர் அதிக அளவில் தேர்தல் வன்முறைகளிலும், முறைகேடுகளிலும் ஈடுபட்டதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.
தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அக்கட்சி வழக்குத் தொடந்துள்ளது.
சென்னையில் வாக்களிக்க சென்ற சில வாக்காளர்கள் இதுவரை தாங்கள் கண்டிராத வன்முறைகள் நேற்றைய வாக்குப் பதிவின் போது இடம்பெற்றதாக கூறுகின்றனர். வேறு சிலரோ வன்முறை சம்பவங்கள் குறித்துப் பேசவே தயங்குகின்றனர்.
வன்முறைக்கு காரணமானவர்கள் என்று குற்றம்சாட்டப்பட்ட பலரை சென்னை காவல் துறை கைது செய்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டு தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும், ஒரு அதிமுக எம் எல் ஏ, பல இடங்களில் திமுகவினரும் – காவல்துறையினரும் இணைந்து வன்செயல்களை அரங்கேற்றியதாக குற்றம்சாட்டினார்.
ஆனால் தமது கட்சியினர் வன்செயல்களில் ஈடுபடவில்லை என்று திமுக தலைவரும், மாநில முதல்வருமான, மு. கருணாநிதி கூறியுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவில் நடைபெற்ற வன்முறைகள் குறித்து பல்வேறு தரப்பினர்களின் கருத்துக்கள் கொண்ட பெட்டகத்தை தமிழோசையில் நேயர்கள் கேட்கலாம்.