‘Kerala still did not get the promised help on Chikun Kunya from Anbumani’ – Achuthananthan
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 11, 2006
கேரளத்தில் சிக்குன்குனியாவை கட்டுப்படுத்த அன்புமணி அறிவித்த உதவிகள் இதுவரை வரவில்லை: முதல்வர்
திருவனந்தபுரம், அக். 11: கேரள மாநிலத்தில் பரவி வரும் சிக்குன் குனியா நோயை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அமைச்சர் அன்புமணி அறிவித்த நிவாரண உதவிகள் இதுவரை வரவில்லை என அந்த மாநில முதல்வர் அச்சுதானந்தன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
கேரள சட்டப் பேரவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அச்சுதானந்தன் இத்தகவலை தெரிவித்தார்.
ஆலப்புழை மாவட்டத்தில் சிக்குன்குனியா பாதிப்பு குறித்து அறிய கடந்த 6-ம் தேதி வந்த மத்திய அமைச்சர் அன்புமணி அறிவித்த உதவிகள் குறித்து பத்திரிகைகளில் பார்த்தேன். ஆனால், அத்தகைய உதவிகள் ஏதும் இதுவரை வரவில்லை.
இதுகுறித்து, தில்லியில் புதன்கிழமை நடைபெறும் மாநில சுகாதார அமைச்சர்களின் கூட்டத்துக்கு செல்லும் கேரள சுகாதார அமைச்சர், மத்திய அரசின் கவனத்துக்கு இவ்விவகாரத்தை கொண்டு செல்வார் என்றார். முன்னதாக ஆலப்புழை வந்த அன்புமணி, சிக்குன்குனியாவை பரப்பும் கொசுக்களைக் கட்டுப்படுத்த புகை அடிக்கும் இயந்திரம், கொசு வலைகள் ஆகியவற்றை சிறப்பு நிவாரணமாக கேரளத்துக்கு மத்திய அரசு அளிக்கும் என தெரிவித்திருந்தார்.
மறுமொழியொன்றை இடுங்கள்