Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Postal History – World Mail Day

Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 9, 2006

கடைசித் திறப்பு!

நா. ஹரிஹரன்

இந்தியாவில் உள்ள பெருநகரங்கள் மட்டுமல்ல ஒவ்வொரு குக்கிராமத்திலும்கூட பொதுவாக காணப்படும் அரசு சாதனம் ஒன்றே ஒன்றுதான்-அதுதான் நமது பாரம்பரியம் மிக்க “தபால்பெட்டி’.

ஆரம்ப காலத்தில் தபால்களைப் போடுவதற்கு தபால்பெட்டிகள் கிடையாது. கடிதங்களைக் கொண்டு செல்பவர்களே கடிதங்களைப் பெற்றும் வந்தனர். 1653 ஆம் ஆண்டு Longueville மாகாண Minister Fouqet என்ற போஸ்ட் மாஸ்டர் ஜெனரலின் மனைவியின் யோசனையின் பேரில்தான் தபால்பெட்டி அறிமுகமாயிற்று.

சார்லஸ் ரீவ்ஸ் என்பவர் தபால்பெட்டிக்கு மாதிரி வடிவத்தைக் கொடுத்தார். லண்டன் மற்றும் இதர நகரங்களில் முற்றிலும் வடிவமைக்கப்பட்ட வசதிகளுடன் கூடிய தபால்பெட்டிகளை வைக்க அந்தோணி ட்ரோலோபி (Anthony Trollope) என்ற பிரிட்டிஷ் தபால்துறையின் பணி மேம்பாட்டு அதிகாரியை 1851-ல் பிரிட்டிஷ் அரசு நியமித்தது. இவர் ஒரு நாவலாசிரியரும் ஆவார். அவரது ஆய்வின் முடிவில் பிரான்சில் உள்ளதுபோல் ஐந்தடி உயரமுள்ள இரும்புத்தூண் தபால்பெட்டிகளை பல்வேறு இடங்களில் வைக்கலாம் என முடிவாயிற்று. பிரான்ஸ் நாட்டில் அறிமுகமான தபால்பெட்டிகள் பிரிட்டன், ஜெர்மனி, பெல்ஜியம் ஆகிய நாடுகளால் பின்பற்றப்பட்டன. தபால்பெட்டிகள் அதிகபட்சம் ஐந்தேகால் அடி உயரத்தையும், குறைந்தபட்சம் நான்கடி உயரத்தையும் கொண்டவையாக இருந்தன.

1852-ல் அமெரிக்காவில் செவ்வக வளைவு கொண்ட தபால்பெட்டிகள் வைக்கப்பட்டன. அதே ஆண்டு ஜெர்சி மாகாணத்தில் 4 தூண் தபால்பெட்டிகள் வைக்கப்பட்டன. அதன்பின்னர் 1855-ல் குர்னெசி மாகாணத்தில் (Guernse) 3 தபால்பெட்டிகளும், லண்டனில் 6 தபால் பெட்டிகளும் வைக்கப்பட்டன. லண்டனில் வைக்கப்பட்ட தபால்பெட்டிகள் பொதுமக்களின் கவனத்தை மிகவும் ஈர்த்தன. தபால்பெட்டிகளில் பிரிட்டிஷ் அரசின் சின்னமும், அதற்கு கீழ் பிரிட்டிஷ் தபால்துறையான ராயல் மெயில் சேவையின் சின்னமும் முகப்பில் இருந்தன. தபால்பெட்டியின் மேற்பகுதி விக்டோரியா மகாராணியின் கிரீட சின்னத்தையும் கொண்டிருக்கும். மெயில் பஸ்கள், மெயில் ரயில்களிலும்கூட அக்காலத்தில் தபால்பெட்டிகள் இடம்பெற்றிருந்தன.

சிவப்பு வண்ணம் மக்களது பார்வையை உடனடியாக ஈர்க்கும் சக்தி கொண்டதால் தபால்பெட்டிகளுக்கு சிவப்பு வண்ணம் பூசலாம் என பிரிட்டிஷ் அரசு அறிவுறுத்தியது. இது “போஸ்ட் ஆபீஸ் ரெட்’ (Post Office Red) என ஒரு வர்ண பெயின்டாகவே பிரபலமாயிற்று. பச்சை நிறத் தபால் பெட்டிகளும் பின்னர் அறிமுகமாயின. ஆனால் அவை மிகக் குறைந்த எண்ணிக்கையில் உள்நாட்டு தபால்களைப் போடுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தன. நம் நாட்டில் பல்வேறு சமஸ்தான தபால் சேவைகளில் பச்சை நிறத் தபால் பெட்டிகளும் இருந்தன.

இந்தியாவில் பிரிட்டிஷ் மற்றும் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சி நிகழ்ந்தபோதிலும் சுமார் 82 சமஸ்தானங்கள் தங்களது தபால் சேவைகளைத் தாங்களே நிர்வகித்து வந்தனர். இந்திய தபால்சட்டம் இயற்றப்பட்ட 1837-ஆம் ஆண்டிலிருந்து பல்வேறு சமஸ்தானங்கள் படிப்படியாக பிரிட்டிஷ் அரசு சேவையின்கீழ் கொண்டுவரப்பட்டன.

இந்தியாவின் முதல் தூண் தபால்பெட்டி (டண்ப்ப்ஹழ் கங்ற்ற்ங்ழ் ஆர்ஷ்) லண்டனிலிருந்து 1855 ஆம் ஆண்டு உதகமண்டலத்திற்கு அனுப்பப்பட்டது. ஆனால் 1856-57 ஆண்டுகளில்தான் பெருவாரியான தபால்பெட்டிகள் பிரிட்டனிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டன. உதகமண்டலம் தபால்நிலையம் 1826 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

நமது நாட்டில் மரத்தினாலான தூண் தபால்பெட்டிகள் தார்வார் (ஈட்ஹழ்ஜ்ஹழ்) சமஸ்தானத்தில் எட்வர்டு அரசர் ஆட்சி காலத்தில் வைக்கப்பட்டிருந்தன.

அந்தோணி ட்ரோலோபி ஆரம்ப காலத்தில் தபால்பெட்டியை அறிமுகப்படுத்தியபோது மக்கள் தங்கள் கடிதங்கள் திருட்டுபோவதாகப் பயந்து தபால்பெட்டியைப் பயன்படுத்தத் தயங்கியது மட்டுமல்லாமல், எதிர்ப்பும் தெரிவித்தனர். ஆனால், காலப்போக்கில் தபால்பெட்டி மக்களின் நம்பிக்கைக்குரிய ஒரு சாதனமாக மாறிவிட்டது.

1913-14 ஆம் ஆண்டு வாக்கில் நம் நாட்டில் 49131 தபால்பெட்டிகள் இருந்தன. தற்போது அது சுமார் 5,91,000 ஆக உயர்ந்துள்ளது. நாட்டிலுள்ள ஒன்றரை லட்சம் தபால் நிலையங்களின் கடிதப்போக்குவரத்தை ஊக்குவிக்க தபால்பெட்டிகள் பெரும்பங்கை வகிக்கின்றன.

தபால்நிலையங்களைவிட தபால்பெட்டிகளின் எண்ணிக்கை நான்கு மடங்காக உள்ளது. உலகிலேயே அதிகப்படியான தபால்பெட்டி வசதிகளைக் கொண்ட நாடு இந்தியாதான்.

தபால்பெட்டிகளில் தபால் எடுக்கப்படும் தபால் நிலையத்தின் பெயர், நேரம் இவையெல்லாம் குறிப்பிடப்பட்டிருக்கும். இவற்றைத்தவிர கடைசித் திறப்பு நேரமும் குறிப்பிடப்பட்டிருக்கும். தென் மாவட்டங்களில் உள்ள சில தபால்பெட்டிகளில் “கடைசித் திறப்பு’ (Last clearance) என்ற அறிவிப்பு வாசகம் இன்றும் வழக்கத்தில் இருந்து வருகிறது. பல ஊர்களில் தபால்பெட்டிகள் ஒரு நாளைக்குப் பலமுறை திறக்கப்படுவதும் உண்டு. கடைசித் திறப்பை அறிவிக்கும்பட்சத்தில் தபால்களை அன்றைய கட்டிலேயே சேர்ப்பிக்க முற்படுவதற்கு இந்தத் தகவல் பயன்படுகிறது.

(இன்று உலக தபால் தினம்).

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
<span>%d</span> bloggers like this: