Central Madurai Campaign ends – Who will be the Winner?
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 9, 2006
தமிழகத்தின் மத்திய மதுரை தொகுதி இடைத்தேர்தலின் பிரச்சாரம் ஒய்ந்தது
![]() |
வாக்குச் சேகரிக்கும் திமுக, அதிமுக, தேதிமுக வேட்பாளர்கள் |
தமிழகத்தின் மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கு கடந்த இரண்டு வாரக்காலமாக நடைபெற்ற பரபரப்பான பிரச்சாரம் திங்கட்கிழமை மாலை ஐந்து மணியுடன் முடிவடைந்துள்ளது.
திமுக அரசில் அறநிலையத்துறை அமைச்சராக இருந்த பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் அவர்களின் மறைவால் நடத்தப்படும் இந்த தேர்தலில், 13 சுயேட்சைகள் உட்பட மொத்தம் 16 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர். திமுக வின் சார்பில் கவுஸ் பாட்சாவும், அதிமுகவின் சார்பில் ராஜன் செல்லப்பாவும், நடிகர் விஜயகாந்த்தின் தேதிமுகவின் சார்பில் பன்னீர்செல்வமும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இந்த மூன்று வேட்பாளர்கள் இடையே தான் கடுமையான போட்டி நிலவுகிறது. தமது வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தேதிமுக தலைவர் விஜயகாந்த் ஆகியோர் இங்குத் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
இங்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக திமுகவும், அதிமுகவும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றன. இந்தக் குற்றச்சாட்டு அடிதடியாகவும் மாறியுள்ளது.
இது குறித்து திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களிடமும், யாருக்கு வாக்களிக்க இருக்கின்றார்கள் என்று மதுரை வாக்காளர்கள் சிலரிடமும் பிபிசியின் எல். ஆர். ஜெகதீசன் அவர்கள் கேட்டறிந்தார்.
மறுமொழியொன்றை இடுங்கள்