Archive for ஒக்ரோபர் 3rd, 2006
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 3, 2006
மன நோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த சென்னையில் சர்வதேச திரைப்பட விழா
சென்னை, அக். 4: மனநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சர்வதேச திரைப்பட விழா சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷிய கலாசார மையத்தில் 3 நாள்கள் நடைபெறும் இந்த விழாவில் 9 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. அனுமதி இலவசம். ஆளுநர் சுர்ஜித்சிங் பர்னாலா விழாவைத் தொடங்கி வைக்கிறார்.
மனச்சிதைவு நோய் குறித்து ஆராய்ச்சி செய்துவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான “ஸ்கார்ஃப்,’ இந்தத் திரைப்பட விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் இயக்குநர் டாக்டர் ஆர்.தாரா, சென்னையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:
இந்தியாவில் 90 லட்சம் பேர் மனச் சிதைவு உள்ளிட்ட மனநலம் சார்ந்த நோய்களால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் 37 மட்டுமே உள்ளன.
தமிழகத்தில் ஏர்வாடியில் உள்ள மனநலக் காப்பகத்தில் நான்கு ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் இறந்தனர். சரியான விழிப்புணர்வு இல்லாததே இதற்குக் காரணம்.
மனநலம் குறித்த விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும். இப் பணியில் ஊடகங்களுக்கு அதிகப் பங்கு இருக்கிறது என்றார் டாக்டர் தாரா. திரைப்பட விழா: மன நோய்களின் பல்வேறு தன்மைகளை மையமாகக் கொண்ட, மலையாளம், கன்னடம், ஆங்கிலம், இந்தி மொழிகளில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. சஞ்சய் தத் நடித்து, தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் “லகே ரஹோ முன்னாபாய்‘ என்ற இந்தித் திரைப்படம் நிறைவு நாளில் திரையிடப்படுகிறது.
திரைப்பட விழாவை ஒட்டி அறிவிக்கப்பட்ட குறும்பட போட்டிக்கு 40-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. அவற்றில் 15 பேரின் படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அவர்களின் படங்கள் நடுவர் குழு முன் திரையிடப்படும். அவற்றில் சிறந்த மூன்று படங்களுக்கு தலா ரூ.1 லட்சம், ரூ.75,000 மற்றும் ரூ.50,000 பரிசு வழங்கப்படும்.
செய்தியாளர் சந்திப்பில் நடிகர் பார்த்திபன், நடிகை ரோகிணி உள்ளிட்டோர் பேசினர். “பொய் முகங்கள்’ என்ற தலைப்பிலான மனநோய் குறித்த விளக்கப் படமும் திரையிடப்பட்டது.
Posted in Awareness, Chennai, Events, Festival, Films, Madras, Movies, Poi Mugangal, SCARF, Tamil | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 3, 2006
சிக்குன் குனியாவிற்கு ஹோமியோபதி மருத்துவம் பலனளிக்குமா
 |
 |
தமிழக ஹோமியோபதி மருத்துவர்கள் சங்க தலைவர் வெங்கட்ராமன் |
தமிழ்நாட்டளவில் சிக்குன் குன்யா நோயின் தாக்குதல் தொடர்ந்து நீடித்து வருகிறது. சிக்குன் குன்யா நோயை பரப்பும் கொசுக்களே, டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் வைரசையும் பரப்பும் என்பது மருத்துவ துறையாளர்களின் கருத்து. தமிழ்நாட்டில் சிக்குன் குன்யா வைரசை பரப்பும் கொசுக்கள், ஒரே சமயத்தில் இரண்டாவது ரக வைரசான டெங்கு வைரசை பரப்புவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று சுகாதார வல்லுனர்கள் பரவலாக கருதுகிறார்கள்.
எனவே, தமிழ்நாட்டில் சிக்குன் குன்யா நோய் தடுப்பு என்பதே தற்போதைய முக்கிய பொது சுகாதார பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக, தற்போதைய தமிழக உள்ளாட்சித்தேர்தலின் முக்கிய பிரச்சார கருப்பொருளாக சிக்குன் குன்யா நோயின் பரந்துபட்ட பாதிப்புகள் உருவெடுத்திக்கிறது.
அதேவேளை, சிக்குன்குன்யா நோய்க்கான சிகிச்சை முறை பற்றி புதிய சர்ச்சை எழுந்திருக்கிறது. ஒருபக்கம் சிக்குன் குன்யாவுக்கு, அலோபதி சிகிச்சைமுறை போதுமான பலன் தரவில்லை என்று சுகாதார நிர்வாகிகளும், மருத்துவர்களும் கவலைப்பட்டுக்கொண்டிருக்க, மறுபக்கம் சிக்குன் குன்யாநோயை ஹோமியோபதி சிகிச்சைமுறை நல்லவிதமாக குணப்படுத்துவதாக ஹோமியோபதி மருத்துவர்கள் அறிவித்து வருகின்றனர். ஹோமியோபதி மருத்துவர்களின் இந்த அறிவிப்பை அரசு நிர்வாகமும் அலோபதி மருத்துவர்களும் ஏற்க மறுக்கின்றனர்.
ஹோமியோபதி மூலம் சிக்குன் குன்யா நோய் நல்ல முறையில் குணப்படுத்தப்படுவதாக கூறுவதற்கான ஆதாரம் என்ன என்பது பற்றி தமிழக ஹோமியோபதி மருத்துவர்கள் சங்கத்தலைவரும் பிரபல ஹோமியோபதி மருத்துவருமான பி.வி.வெங்கட்ராமனின் பேட்டியை நேயர்கள் இன்றைய அனைவருக்கும் அறிவியல் நிகழ்ச்சியில் கேட்கலாம்.
Posted in Allopathy, Chicken Kuniya, Chicken Kunya, Chikun Gunya, Chikun Kunya, Dengue, Healthcare, Homeopathy, Outbreak, Tamil, Treatment | 5 Comments »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 3, 2006
யூரேனியம் செறிவூட்டுவதை நிறுத்த முடியாது என இரான் தெளிவாக சமிக்ஞை
 |
 |
பொருளாதார தடை விதிக்க ஐ.நா பாதுகாப்பு சபையில் முயற்சி தொடரும் |
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கேட்டபடி, யூரேனியம் செறியூட்டும் திட்டத்தினை தாம் கைவிட முடியாது என்று இரான் முதற்தடவையாக தெளிவாக காட்டியுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக்கொள்கை தலைவர் ஹாவியே சோலானாவுக்கு இரான் இந்த அறிகுறியை காட்டியதாக பிரிட்டிஷ் அதிகாரிகள் கூறுகிறார்கள்.
இரானிய அரசின் மூத்த அதிகாரிகளுக்கும், சோலானவுக்கும் இடையில் வாரக்கணக்கில் நடந்த பேச்சுவார்த்தைகள் எதுவித முன்னேற்றத்தையுமே ஏற்படுத்தவில்லை என்று பிரிட்டிஷ் அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
பிபிசி யின் இராஜதந்திர முகவர் கருத்து வெளியிடும்போது, இருதரப்பினருக்கும் இடையில் பேச்சுக்கள் தொடர்ந்தாலும், இரானிய அரசின் மீது பொருளாதார தடை ஒன்றை வரைய பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் மத்தியில் முயற்சிகள் தொடரும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இப்படியான தடைகள் எதையும் அங்கீகரிக்க சீனாவும், ரஷ்யாவும் தயக்கம் காட்டுவதற்கான காரணத்தால், இது போன்ற திட்டங்கள் பாதுகாப்பு சபையில் முன்னர் பிளவுப்படுத்தின.
எனவே ஒருமித்த கருத்து உருவாக வேண்டும் என்றால், பக்குவமான பேச்சுவார்த்தைகள் அவசியம் என்று பிபிசியின் ராஜதந்திர முகவர் கூறுகிறார்.
Posted in China, Enrichment, EU, Iran, Nuclear, Russia, Tamil, Uranium | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 3, 2006
திருநாவுக்கரசர்-சுப்பிரமணியசாமி சென்ற சென்னை-மதுரை விமானத்தில் கோளாறு
தாம்பரம், அக். 3-
சென்னை விமான நிலை யத்தில் இருந்து இன்று காலை 7.30 மணிக்கு ஜெட் ஏர் விமானம் மதுரைக்கு புறப்பட தயாரானது. இதில், புதுச்சேரி மாநில பா.ஜனதா பொறுப்பாளர் திருநாவுக்கரசர் எம்.பி., ஜனதா கட்சித் தலைவர் சுப்பிர மணியசாமி, மாநில தலைவர் சந்திரலேகா உள்ளிட்ட 36 பயணிகள் இருந்தனர். விமானம் ஓடு தளத்தில் ஓடிய போது திடீரென்று எந்திர கோளாறு ஏற்பட்டது.
அதை உடனே விமானி கண்டுபிடித்தார். விமானம் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது. திருநாவுக்கரசர் எம்.பி. உள்ளிட்ட 36 பயணிகளும் விமான ஓய்வு அறைக்கு திரும் பினார்கள்.
விமான ஊழியர்கள் எந்திர கோளாறை சரி செய்தனர். ஒரு மணி நேர தாமதத்திற்கு பின்பு விமானம் புறப்பட தயாரானது. 36 பயணிகளும் பாதுகாப்பாக மதுரைக்கு புறப்பட்டு சென்றனர்.
அதுபோலவே மொரீஷிய ஸில் இருந்து சென்னைக்கு வந்த விமானமும் குறித்த நேரத்தில் தரை இறங்க முடியவில்லை. இன்று அதிகாலை 2 மணிக்கு 179 பயணிகளுடன் சென்னை விமான நிலையத்திற்கு தரை இறங்க மொரீஷியஸ் விமா னம் வந்தது.
ஆனால் மோசமான வானிலையால் விமானம் தரை இறங்க கட்டுப்பாடு அதி காரிகள் அனுமதி தர வில்லை. விமானம் ஐதராபாத்திற்கு திருப்பி விடப்பட்டது. 4மணி நேரத்திற்கு பின்னர் மொரீஷியஸ் விமானம் சென்னை விமான நிலையத் தில் தரை இறங்கியது.
அதே விமானத்தில் சென் னையில் இருந்து மொரீஷியஸ் செல்வதற்காக அதிகாலை 3.30 மணிக்கு 205 பயணிகள் காத்திருந்தனர். ஆனால், விமா னம் தரை இறங்க தாம தம் ஏற்பட்டதால் 5 மணி நேரம் காத்திருந்து காலை 8.30 மணிக்கு மொரீஷியஸ் புறப் பட்டு சென்றனர்.
Posted in Chandralekha, Flight delays, Subramaniya Swamy, Tamil, Thirunavukkarasar | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 3, 2006
மும்பை குண்டு வெடிப்பை செயல்படுத்த பாகிஸ்தான் உளவு அமைப்பு ரூ.20 லட்சம் நிதி உதவி: ஹவாலா மூலம் பணபரிமாற்றம்
மும்பை, அக். 3-
மும்பையில் கடந்த ஜுலை மாதம் 11-ந் தேதி மின்சார ரெயில்களில் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 200-க் கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியானார்கள்.
இந்தியாவையே அதிர்ச் சிக்குள்ளாக்கிய இந்த குண்டு வெடிப்புக்கு லஷ்கர்- இ-தொய்பா தீவிரவாத அமைப்பு தான் காரணம் என்று கூறப்படுகிறது. மும்பை குண்டு வெடிப்பு குறித்து மத்திய அரசின் தீவிரவாத எதிர்ப்புப் புலனாய்வு படை விசாரித்து வருகிறது.
இந்த நிலையில் குண்டு வெடிப்பு சதி நிகழ்த்து வதற்காக பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. ரூ.20 லட்சம் நிதி உதவி அளித் ததாகவும் அதை பாகிஸ்தானில் உள்ள லக்ஷர்-இ-தொய்பா அமைப்பின் கமாண்டர் ஒரு வரிடம் கொடுத்தனுப்பிய தாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஏ.டி.எஸ்.தலைமை அதிகாரி கே.பி.ரகு வன்சி கூறியதாவது:-
“ஐ.எஸ்.ஐ. அமைப்பு குண்டு வெடிப்பு சதிகாரர்களுக்கு நிதி உதவி அளித்ததற்கான ஆதாரங்கள் சிக்கி உள்ளன. 20 லட்சம் என்பது சிறிய தொகையாகத் தோன்றினாலும் மொத்தம் செலவிழிக்கப்பட்ட தொகையில் இது 10 சதவீதம் மட்டுமே குண்டு வெடிப்பை நிகழ்த்தும் சம்பவத்திற்கு மட்டுமே இந்தத் தொகை மற்றபடி அதற்கான திட்டமிடுதல் தகவல் தொடர்பு போன்றவற்றிற்குதான். மீத முள்ள 90 சதவீத பணத்தை செலவழித்துள்ளனர் என்றார்.
20 லட்சத்தை ஹவாலா ஏஜெண்டுகள் மூலம் சவுதி அரேபியன் ரியல் ஸாக தீவிரவாதிகளின் கைகளுக்கு ஐ.எஸ்.ஐ. கொண்டு சென்றதாகவும், குண்டு வெடிப்பு சதிகாரர் களுக்கு ஐ.எஸ்.ஐ. பயிற்சி அளித்ததாகவும் விசாரணை யில் போலீஸ் கமிஷனர் ஏ.என்.ராய் தெரிவித்தார்.
குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பைசல் சேக்கிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேற்கண்ட தகவல் வெளியாகி உள்ளன.
Posted in Bomb Blasts, Delhi blast, Delhi Police, Finance, Hawala, Investigations, Lashkar-e-Taiba, Pakistan, riyals, Tamil, terror networks | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 3, 2006
செல்போனில் பரவும் சொர்ணமால்யா ஆபாச படம்: போலீஸ் விசாரணை
சென்னை, அக். 3-
நடிகைகளின் ஆபாச காட்சிகள் அவ்வப்போது இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துகின்றன. திரிஷாவின் குளியல் காட்சி யென நிர்வாணப்படம் சமீபத்தில் வலம் வந்தது. செல்போன் கேமிராவில் இப்படத்தை எடுத்து இன்டர் நெட்டில் மர்ம நபர் வெளியிட்டு இருந்தான்.
நிர்வாணமாக இருப்பவர் தன்னை மாதிரியுள்ள வேறு பெண் என்று திரிஷா மறுத்தார். போலீசிலும் புகார் செய்தார்.
அதே போல் நடிகை சொர்ணமால்யாவின் ஆபாச படம் தற்போது செல்போன்களில் பரவி கலக்கி வருகிறது. 30 விநாடிகள் இந்த வீடியோ காட்சி ஓடுகிறது.
சொர்ணமால்யா தோற் றத்தில் இருப்பவர் படுக்கை அறை காட்சியில் மேலாடையின்றி அரை நிர்வாணமாக அமர்ந்து இருக்கிறார். திடீரென்று எதிரே ஒருவர் செல்போனில் படம் எடுப்பதை பார்த்து வேண்டாம் என்று தலையசைக்கிறார்.
ஆனாலும் கேமராவில் தொடர்ந்து பதிவாகிறது. தலையணையால் மார்பை மறைக்கிறார். பிறகு குனிந்து மேலாடையை எடுத்து அணிகிறார்.
அதற்குள் அரை நிர்வாணத்தை முழுமையாக படம் பிடித்து விடுகிறது கேமரா.
இந்த ஆபாச காட்சிகள் இ.மெயில் மூலம் உலகம் முழுவதும் பரவி வருகின்றன. தமிழ்நாட்டில் செல் போன்களில் இந்த காட்சி பரவுகிறது.
சென்னை, மதுரை, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் செல்போன்களில் இந்த காட்சிகள் மின்னல் வேகத்தில் பரப்பப்படுகிறது.
ஆபாச படத்தில் இருப்பது தன்னைப் போன்ற வேறு பெண் என்று சொர்ணமால்யா மறுத்துள்ளார். அவர் கூறியதாவது:-
என்னை கேவலப்படுத்த இது போன்ற வக்கிர செயலில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.
நான் அந்த வீடியோ காட்சியை இதுவரை பார்க்கவில்லை. இது மாதிரி கேவலமான காட்சியில் நான் இருக்க மாட்டேன். எனக்கு தெரியாமல் யாரும் வீடியோ எடுக்கவும் முடியாது. என் உருவம் கொண்ட யாரோ ஒருவரை வைத்துத்தான் இந்த படத்தை எடுத்திருக்க வேண்டும்.
இது பற்றி போலீசில் புகார் செய்ய முடிவு செய்துள்ளேன். இது போன்ற ஆபாச படங்கள் என்னை பாதிக்காது என்னைப் பற்றி சுற்றி இருப்பவர்களுக்கு நன்றாக தெரியும்.
இவ்வாறு சொர்ணமால்யா கூறினார்.
இந்த ஆபாச படங்கள் போலீஸ் கவனத்துக்கும் சென்றுள்ளது.
இதை பார்த்த கூடுதல் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் `சைபர் கிரைம் போலீஸ் மூலம் விவாதிக்கப்படும் என்றார். செல்போன் மூலமோ அல்லது இ.மெயில் மூலமோ ஆபாச படங்கள் மற்றும் ஆபாச எஸ்.எம்.எஸ்.கள் அனுப்புவது சட்டப்படி குற்றம் என்றும் அது போன்ற காரியங்களில் ஈடுபடுவோர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
ஆபாச படத்தில் இருப்பது சொர்ணமால்யாதான் என்று உறுதியானால் அவர் மீது வழக்கு தொடரப்படும் என்று போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
Posted in Bathroom, Cellphone, Downloads, Duplicate, MMS, Mobile Phone, Porn, Sex, Sornamalya, Tamil, Topless, Trisha, video | 2 Comments »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 3, 2006
முஷாரபின் மிரட்டல்
பாகிஸ்தான் அரசின் உதவியும் ஐ.எஸ்.ஐ. எனப்படும் பாகிஸ்தானிய உளவு அமைப்பின் உதவியும் இல்லாவிட்டால் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் “மேற்கத்திய நாடுகள் மண்டியிட வேண்டியிருக்கும்’ என்று பாகிஸ்தான் அதிபர் முஷாரப் எச்சரித்துள்ளார். அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பும் வழியில் பிரிட்டனில் அவர் ஒரு பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.
மேற்கு நாடுகளுக்கு முஷாரப் விடுத்துள்ள எச்சரிக்கையை மிரட்டல் என்றும் வர்ணிக்க முடியும். சோவியத் யூனியனுக்கு எதிரான போரில் மேற்கத்திய நாடுகள் வெற்றி பெற்றதற்கு பாகிஸ்தான் அளித்த உதவி காரணம் என்றும் அந்தவகையில் பாகிஸ்தானுக்கு அமெரிக்காவும் பிரிட்டனும் கடன்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானில் முஜாஹிதீன்களுக்கு எதிரான போரில் சோவியத் யூனியன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து சோவியத் யூனியன் உடைந்தது. இதைத்தான் முஷாரப் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்குப் பயிற்சி அளித்து ஆயுதங்களையும் அளித்தது மேற்கத்திய நாடுகளே என்ற வரலாற்று உண்மையை முஷாரப் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் பின்னர் ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி ஏற்பட்டதற்கு பாகிஸ்தானே காரணம் என்பதை அவர் எடுத்துக் கூறவில்லை. முஷாரபின் பேச்சில் நிறைய அர்த்தம் இருக்கிறது.
மேற்கத்திய நாடுகளுக்கு எதிராகச் செயல்படும் பயங்கரவாதிகளின் லகான் பாகிஸ்தான் கையில்தான் இருக்கிறது. பாகிஸ்தான் நினைத்தால் அவர்களை ஏவி விட முடியும் என்ற மிரட்டல் அவரது பேச்சில் தொனிக்கிறது. ஐ.எஸ்.ஐ. அமைப்பைக் கலைத்துவிட வேண்டும் என்றெல்லாம் பாகிஸ்தானை நிர்பந்திக்கக் கூடாது என்றும் மேற்கத்திய நாடுகளுக்கு முஷாரப் மறைமுகமாக எடுத்துக் கூறியுள்ளதாகவும் கருதலாம்.
மும்பை ரயில்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்புக்குத் தொடர்பு உள்ளது என்ற உண்மை தெரிய வந்துள்ள பின்னணியில் முஷாரப் இவ்வாறு கூறியுள்ளார் என்பதைக் கவனிக்க வேண்டும்.
பாகிஸ்தானுக்குக் கடன்பட்டுள்ள மேற்கத்திய நாடுகள் எவ்விதம் பாகிஸ்தானுக்குக் கைம்மாறு செய்ய வேண்டும் என்பதை முஷாரப் மேற்கண்ட பேட்டியில் கூறியுள்ளார். காஷ்மீர்ப் பிரச்சினையைத் தீர்க்க மேற்கத்திய நாடுகள் பாகிஸ்தானுக்கு உதவ வேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
காஷ்மீர் விஷயத்தில் இந்தியா மீது நிர்பந்தம் செலுத்த பாகிஸ்தானில் பயிற்றுவிக்கப்பட்ட பயங்கரவாதிகள் அவ்வப்போது இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்தப் பயங்கரவாதிகளைத் தயார்படுத்தும் அமைப்புகளை பாகிஸ்தான் தடை செய்ய முற்படவில்லை.
தவிர, பாகிஸ்தான் அரசு அண்மையில் வடமேற்கு எல்லைப்புறத்தில் உள்ள மலைஜாதி தலைவர்களுடன் ஓர் உடன்பாட்டைச் செய்து கொண்டுள்ளது. இதன்படி அப் பகுதியில் புகலிடம் தேடியுள்ள பயங்கரவாதிகளைப் பிடிக்க முற்பட மாட்டோம் என்று உறுதிமொழி அளித்துள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பிய தலிபான் தலைவர்களும் அல்-காய்தா தலைவர்களும் அப் பகுதியில்தான் ஒளிந்திருப்பதாக நம்பப்படுகிறது.
பாகிஸ்தான் அதிபரின் பேச்சுகள், பாகிஸ்தான் அரசின் செயல்கள் ஆகியவற்றிலிருந்து பயங்கரவாதிகள் குறித்து பாகிஸ்தானின் போக்கு பற்றிய ஒரு சித்திரம் தெரிகிறது. இந்தியாவுக்கு எதிராகப் பாகிஸ்தானில் இயங்கும் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஒடுக்க முற்படாது.
மேற்கத்திய நாடுகளைப் பொறுத்தவரையில் முக்கியமாகத் தேடப்படும் பயங்கரவாதிகளைப் பிடித்துக் கொடுக்க பாகிஸ்தான் ஒத்துழைப்பு அளிக்கும். ஆனால் தங்கள் மண்ணில் வளரும் பயங்கரவாதத்தை அடியோடு ஒழிக்க பாகிஸ்தான் முற்படாது. ஏனெனில் மேற்கத்திய நாடுகள் மீது பாகிஸ்தானுக்கு இருக்கிற பிடி போய்விடும். இப்படியான நிலையில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு பாகிஸ்தான் ஒத்துழைப்பு அளிக்கும் என்று இந்திய அரசு எதிர்பார்ப்பது சரியானதாகத் தோன்றவில்லை.
Posted in Afghanisthan, Al Quaeda, Dinamani, ISI, Op-Ed, Pakistan, Pervez Musharraf, Taleban, Tamil, Terrorism, USA | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 3, 2006
தமிழ் மென்பொருள்: தேவை உறுதியான நடவடிக்கை
ஜீ.முருகன்
எல்லாத் துறைகளும் கணினி மயமாகிக் கொண்டிருக்கிற இன்றைய சூழ்நிலையிலும் தமிழ் மென்பொருள் குறித்துத் தெளிவான முடிவுகள் எட்டப்படாதது பெரும் பிரச்சினையாக உள்ளது. குறிப்பாக அரசு அலுவலகங்களில் இதனால் காலவிரயமும் பணவிரயமும் ஏற்படுகின்றன. கோப்புப் பரிமாற்றங்களில் குழப்பங்கள் நிலவுகின்றன.
எல்லா அரசு அலுவலகங்களும் ஒரே மென்பொருளைப் பயன்படுத்தினால் இப்படிப்பட்ட குழப்பங்கள் ஏற்படாது. ஆனால் அரசு இதுவரை இந்த விஷயத்தில் உறுதியான முடிவுகள் எதையும் எடுக்காதது வியப்பாக உள்ளது.
10-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தமிழ் மென்பொருள்கள் இன்று புழக்கத்தில் உள்ளன. ஒவ்வொரு நிறுவனமும் தங்களுகென்று தனிவகையான எழுத்துருக்களையும் (Fonts) உருவாக்கி வைத்திருக்கின்றன. ஒன்றை ஒன்று பதிலீடு செய்ய முடியாத வகையில் இவை உருவாக்கப்பட்டுள்ளன. Old Typewriter, New Typewriter, Phonetic, Translitration, Tamil 99 என 5 வகையான தட்டச்சு முறைகள் பயன்பாட்டில் உள்ளன.
தமிழ் மென்பொருள் ஆர்வலர்களும் அரசும் பல மாநாடுகளை நடத்தி சில முடிவுகள் எட்டப்பட்டிருந்தாலும் அவற்றைப் பயன்படுத்துவதில் பொதுத்தன்மை இன்னும் உருவாகவில்லை. TAM, TAB வகை எழுத்துருக்கள் இந்த முயற்சியில் உருவானவைதான்.
மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை வெளியிட்டுள்ள “தமிழ் மென்பொருள் கருவிகள்’ என்ற இலவச சிடியில் இதற்கான முயற்சி தெரிந்தாலும் தெளிவான அணுகுமுறை இதில் பின்பற்றப்படவில்லை. சில நிறுவனங்கள் கொடுத்த மென்பொருள்கள் கலவையாகச் சேர்த்து நிரப்பப்பட்டுள்ளன, அவ்வளவுதான்.
- இந்தத் துறையில் சிறந்த நிபுணர்களை வைத்து அதை எளிமையாக ஒழுங்குபடுத்தியிருக்கலாம்.
- தரமான சில எழுத்துருக்களை மட்டும் தேர்ந்தெடுத்து எல்லா அரசு அலுவலகங்களும் இவற்றையே பயன்படுத்தவேண்டும் என்று கட்டாயமாக்கியிருக்கலாம்.
இந்த முயற்சிகளை எடுக்காததால் அது வெளியிடப்பட்டதற்கான நோக்கம் நிறைவேறாமலேயே போய்விட்டது.
இணையதளங்களில் தமிழைப் பயன்படுத்தும் முயற்சிகள் இதுபோன்றே இன்னும் குழப்ப நிலையில் உள்ளன. சமீபத்தில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் எல்லா பல்கலைக்கழகங்களையும் இணையதளத்தில் இணைக்கவேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார். இந்தச் சூழ்நிலையில் இதை எப்படி நிறைவேற்றுவது?
“கன்வர்ட்டர்’ என்ற முறை இப்போது இந்தப் பிரச்சினைகளை தீர்த்து வைத்தாலும் இது தலையைச் சுற்றி காதைத் தொடுவதற்கு ஒப்பானதே. காலவிரயத்திற்கே இட்டுச்செல்லக்கூடியவை. மேலும் பிழைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இப்போது அரசாங்க அலுவலகங்களில் ஒரு நிறுவனத்தின் எழுத்துருவை மட்டும் பயன்படுத்தும் முறை வழக்கத்தில் உள்ளது. இதற்காக ஒவ்வோர் அலுவலகமும் அந்த நிறுவனத்திடம் சில ஆயிரங்களைக் கொடுத்து அந்த மென்பொருளை வாங்கிப் பயன்படுத்துகின்றன. அரசாங்கமே இலவசமாக இப்படிப்பட்ட மென்பொருளை உருவாக்கித் தந்தால் இப்பிரச்சினையை தீர்த்துவிட முடியும். ஆங்கில எழுத்துருக்கள் இலவசமாகக் கிடைக்கும்போது தமிழ் எழுத்துருக்களை மட்டும் ஏன் விலைகொடுத்து மக்கள் வாங்கவேண்டும்? அதிலும் அரசாங்க அலுவலகங்கள்!
Windows, linux, Unix போன்ற ஆப்ரேட்டிங் சிஸ்டங்களில் இயங்கக்கூடிய வகையில் ஒரு மென்பொருளை அரசாங்கமே தயாரித்து ஏன் இலவசமாகவே தரக்கூடாது? அதை எல்லா அரசாங்க அலுவலகங்களிலும் பயன்படுத்த வேண்டும் என்று ஏன் ஆணை பிறபிக்கக்கூடாது?
சமீபத்தில் நடந்த ஒரு மாநாட்டில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் இன்றைய கணினி யுகத்துக்கு ஈடுகொடுக்கக்கூடிய வகையில் 16 bit தமிழ் மென்பொருள் ஒன்றை உருவாக்கும் முயற்சி நடப்பதாக அறிவித்திருக்கிறார். அதைப் பயன்பாட்டுக்கு கொண்டுவரும்போது அது பெரும்பாலான மக்களுக்குப் போய்சேரும்படியும், அரசு அலுவலகங்களில் கோப்புப் பரிமாற்றங்களை எளிதாக்கும்படியும் பார்த்துக்கொள்வது நல்லது.
Posted in Dayanidhi maran, Dinamani, Fonts, G Murugan, Software, TAB, TAM, Tamil, Tamil Help, Tech, Technology, Transliteration, Translitration, TSCII, Tune, Typing, Unicode, Word Processors | 3 Comments »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 3, 2006
திருகோணமலையில் நிலக்கரி அனல் மின் நிலையம்
 |
 |
இந்தியாவின் ஒத்துழைப்புடன் நிலக்கரி அனல்மின் நிலையம் |
இலங்கை திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்குப் பிரதேசத்தின் சம்பூர் பகுதியில் இலங்கையின் இரண்டாவது நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக எரிபொருள் மின்சக்தி அமைச்சு கூறியுள்ளது.
இந்த திட்டம் இந்தியாவின் உதவியுடன் செயற்படுத்தபடுவதாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக இலங்கை மின்சக்தி அமைச்சர் ஜான் சேனவிரத்ன அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது, இத்திட்டம் தொடர்பாக தாங்கள் பல மாத காலமாக ஆராய்ந்து வருவதாகவும், இது தொடர்பாக இந்தியாவில் இருந்து ஒரு குழு இலங்கை வந்ததாகவும், இலங்கையில் இருந்து ஒரு குழு இந்தியா சென்றதாகவும், அவர்கள் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் நடத்துவதாக கூறினார்.
சமீபத்தில் இந்தப் பிராந்தியத்தில் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை இராணுவத்தினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்ட நிலையில், சம்பூர்ப் பகுதியில் திட்டம் செயற்படுத்தபடுவது குறித்து அமைச்சரிடம் கேட்கப்பட்ட போது, தற்போது அந்தப் பிராந்தியத்தில் பயங்கரவாதிகள் இல்லை என்றும், தாங்கள் இது தொடர்பாக கடற்படைத் தளபதிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியதாகவும், அதன் போது அங்கு பயங்கரவாதிகள் இல்லை என்று அவர்கள் தெரிவித்ததாகவும், இதனால் இத்திட்டம் அங்கு செயற்படுத்தபடலாம் என கூறினார்.
இது தொடர்பாகவும், நிலக்கரி அனல் மின் நிலையம் அமைக்க வேண்டிய அவசியம் தொடர்பான கேள்விகளுக்கும் அமைச்சர் வழங்கிய பதில்களை நேயர்கள் தமிழோசையில் கேட்கலாம்.
Posted in Electricity, Factory, Generation, India, Lignite, LTTE, Moothoor, Moothur, Power, Samboor, Sambur, Sri lanka, Tamil, Thirukonamalai, Triconamalee | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 3, 2006
பாலஸ்தீனத்தில் அரச பணிகள் இடை நிறுத்தம்
பாலஸ்தீன அரசாங்கக் கட்டிடங்கள் மற்றும் அரச அதிகாரிகள் மீது ஆர்ப்பாட்டகாரர்கள் தாக்குதல் நடத்தியதினைக் கண்டித்து, அனைத்து அமைச்சுப் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக ஹமாஸ் தலைமையிலான பாலஸ்தீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.
 |
 |
பால்ஸ்தீனக் குழுக்களிடையே வன்முறை |
இது போன்ற தாக்குதல்கள் தொடர்வதற்கு அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ள பாலஸ்தீனப் பிரதமர் இஸ்மயில் ஹனியா, அமைதியினைக் கடைப்பிடிக்குமாறு கோரியுள்ளார்.
முன்னதாக பாலஸ்தீன போட்டி அரசியல் பிரிவுகளுக்கு ஆதரவான ஆயுததாரிகள் இடையே மோதல் ஏற்பட்டது. மேற்குக் கரையோர நகரமான நபுலஸ் துணை பிரதமர் நஸ்ஸர் அல் ஷயிர் அவர்களின் மெய்ப்பாதுகாவலர்கள் பலர் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி காயம் அடைந்தனர்.
ஜெரிக்கோவில் வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு நடத்துமாறு வலியுறுத்திய ஆயுததாரியின் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார்
Posted in Al-Aqsa Brigades, al-Fatah, Alliance, Coalition, Fatah, Gaza, Hamas, Khan Yunus, Mahmoud Abbas, Palestine, Ramallah, Said Siyam, Tamil | Leave a Comment »
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 3, 2006
ரஷிய அதிகாரிகளை ஜார்ஜியா விடுவித்தது
ஜார்ஜியா நாட்டில் உளவு பார்த்தனர் என்கிற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நான்கு ரஷிய ராணுவ அதிகாரிகளை ஐரோப்பிய பாதுகாப்பு நிறுவனமான OSCE இடம் ஜார்ஜிய அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர். இந்த நான்கு பேரும் இன்று பின்னர் ரஷியாவிற்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இது ஒரு நல்லெண்ண அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்றும், ரஷிய அழுத்தத்திற்கு பதிலளிக்கும் விதமாக இதைத் தாங்கள் செய்யவில்லை என்றும் ஜார்ஜிய அதிபர் மிகைல் சாக்சவிலி தெரிவித்தார். தடுத்து வைக்கப்பட்ட நான்கு ரஷிய ராணுவ அதிகாரிகளும் ஒரு உளவு கட்டமைப்பினை ஏற்படுத்த முயன்றனர் என ஜார்ஜிய அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்றைய நிகழ்வுகள் குறித்து ரஷியா இதுவரையில் கருத்து எதனையும் வெளியிடவில்லை. ஜார்ஜியாவுடனான போக்குவரத்து அனைத்தையும் தாங்கள் துண்டித்து விட்டதாகவும், இரண்டு நாடுகளுக்கிடையேயான வங்கி விவகார பரிமாற்றத்தைத்தையும் தாங்கள் நிறுத்தி விட்டதாகவும், ரஷிய முன்னர் அறிவித்திருந்தது.
Posted in Ambassador, Charges, Consulate, Counsel, EU, Europe, Georgia, Military, Neighbor, OSCE, Relations, Russia, Spy, Tamil | Leave a Comment »