Mumbai Train Bomb Blasts – Pakistan’s ISI, Lashkar-e-Toiba & SIMI involved
Posted by Snapjudge மேல் ஒக்ரோபர் 2, 2006
மும்பை ரயில் தொடர் குண்டுவெடிப்பில் துப்பு துலங்கியது: பாக். உளவு அமைப்பு ஐஎஸ்ஐ-யின் சதி அம்பலம்
மும்பை, அக். 1: ஜூலை 11-ம் தேதி மும்பை புறநகர் ரயில்களில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், மும்பை பயங்கரவாதத் தடுப்புப் படை போலீஸôர் வெற்றிகரமாக துப்புதுலக்கி இருக்கின்றனர்.
அச் சதித் திட்டத்தை பாகிஸ்தான் உளவு அமைப்பான “ஐஎஸ்ஐ’ கடந்த மார்ச் மாதம் தீட்டியதையும், பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கர்~இ~தொய்பா மற்றும் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம் (“சிமி’) ஆகியவற்றின் மூலம் அக் குண்டுவெடிப்பை நடத்தியிருப்பதையும் மும்பை போலீஸôர் கண்டுபிடித்துள்ளனர்.
இத் தகவல்களை மும்பை நகர போலீஸ் கமிஷனர் ஏ.என். ராய், மும்பையில் நிருபர்களிடம் சனிக்கிழமை தெரிவித்தார். அவர் கூறிய தகவல்களின் விவரம்:
இது தொடர்பாக இதுவரை 15 பேரை போலீஸôர் கைது செய்துள்ளனர். அவர்களில் 11 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள்; அவர்கள் மூன்று குழுக்களாக பாகிஸ்தானிலிருந்து நேபாளம், வங்கதேசம் மற்றும் குஜராத் எல்லை வழியாக இந்தியாவுக்குள் வந்துள்ளனர்.
பாகிஸ்தானில் பஹவல்பூர் என்ற இடத்தில் அவர்கள் லஷ்கர்~இ~தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்களால் நாசவேலைகளில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இருந்து, “சிமி’ அமைப்பைச் சேர்ந்த சிலரும் பஹவல்பூர் சென்று நாசவேலைகளில் பயிற்சி பெற்று இந்தியா திரும்பியுள்ளனர்.
பாகிஸ்தானிலிருந்து லஷ்கர்~இ~தொய்பா அமைப்பைச் சேர்ந்த ஈசானுல்லா என்பவர் 15-லிருந்து 20 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிமருந்தை இந்தியாவுக்குள் கொண்டுவந்துள்ளார்.
அம்மோனியம் நைட்ரேட் வெடிபொருளை இந்தியாவில் வாங்கியிருக்கின்றனர். இரண்டையும் கலந்து 5 லிட்டர் பிரஷ்ஷர் குக்கரில் வைத்து, குறித்த நேரத்தில் வெடிக்கும்படி அவற்றுடன் “குவார்ட் கடிகாரங்களை’ இணைத்து, நாளிதழ்கள், குடைகள் போன்றவற்றால் மறைத்து 7 ரயில் நிலையங்களில், முதல் வகுப்பு ரயில் பெட்டிகளில் வைத்துள்ளனர். பின்னர் நடுவழியில் அவர்கள் இறங்கித் தப்பியுள்ளனர்.
ஆனால், பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதியான சலீம் என்பவரால், கூட்ட நெரிசல் காரணமாக ரயிலில் இருந்து இறங்க முடியவில்லை. எனவே குண்டு வெடித்தபோது அவரும் பலியாகிவிட்டார்.
இச் செயலில் ஈடுபட்ட, இந்தியாவைச் சேர்ந்த ஃபைஸல் ஷேக், கமாலுதீன் அன்சாரி, இதாஷான் சித்திக், முகம்மது நவீத் ஆகிய 4 பேரை போலீஸôர் கைது செய்துவிட்டனர். மேலும் 3 பேரை போலீஸôர் தேடிவருகின்றனர்.
நவீத்தை ஆந்திர மாநிலம் ஹைதராபாதில் வெள்ளிக்கிழமை போலீஸôர் கைது செய்தனர். “சிமி’ அமைப்பைச் சேர்ந்த ஜூனைத் என்பவரை தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
மறுமொழியொன்றை இடுங்கள்