Arasu Pathilgal – Kumudam
Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 29, 2006
தி.ராஜு,
திருநெல்வேலி டவுன்.
தமிழ்நாடு இப்போது இந்தியாவிலேயே முதல் மாநிலமாக மாறிக்கொண்டு வருவது போல் தெரிகிறதே?
கரெக்ட். சிக்குன் குனியா பரவுவதில்தானே?
ஜி.மாரியப்பன்,
சின்னமனூர்.
நமீதா போலீஸ் ஸ்டேஷனுக்கு வரும் காட்சியை டி.வி.யில் பெரும் பரபரப்பு செய்தியாகக் காட்டியது அவசியமா?
நீர் பார்த்தீரா இல்லையா? அதைச் சொல்லும் முதலில்.
இரா. பார்த்திபன்,
வயலூர்.
சமீபத்தில் படித்த புத்தகம்?
1973ம் வருடம் வெளியிடப்பட்ட, அ.தட்சிணாமூர்த்தி என்கிற தமிழ்ப்பேராசிரியர் எழுதிய ‘தமிழர் நாகரிகமும் பண்பாடும்’ என்கிற அரிய புத்தகம். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் வரலாறும் வாழ்க்கையும் எப்படி சிறப்புற்று இருந்தன என்பதை உணர்ச்சிவசப்படாமல், இலக்கிய, தொல்லியல் ரீதியாக அழகாக விவரிக்கும் புத்தகம்.
- போர் முறைகளில் தமிழர்கள் கொண்டிருந்த நேர்மை,
- புதிய கண்டுபிடிப்புகளில் காட்டிய ஆர்வம் (முக்கியமாக உணவு, உடை, வாத்தியங்கள் தயாரிப்பில்),
- வாணிபத்தில் இருந்த உலகநோக்கு,
- புலவர்களை மதித்த பணிவு,
- உழவுக்குத் தலை வணங்கிய மாண்பு,
- இறந்தவர்களைப் பெருமைப்படுத்தும் நன்றி மறவாமை,
- வானிலையிலும்,
- மருத்துவத்திலும்,
- விருந்தோம்பலிலும்,
- இலக்கியத்திலும்,
- ஆன்மிகத்திலும்,
- ஆடற் பாடல், இசைக் கலையிலும்,
- தத்துவத்திலும்,
- கலாசாரத்திலும் வாழையடி வாழையாக தமிழும், தமிழர்களும் செழித்தோங்கி வளர்ந்ததைப் படிக்கப் படிக்க, ஆஹா, எத்தனை சிறப்புமிக்க வரலாற்றில் நாம் பிறந்திருக்கிறோம் என்கிற செருக்கே வந்துவிட்டது. இத்தனை மகத்தான பின்னணியை எப்படி இளம் பிள்ளைகளுக்குப் புரிய வைப்பது என்கிற பிரமிப்பும் வந்தது.
ச.சிவகாமி சுந்தர்,
சென்னை_94.
சென்னையில் பெருகி வரும் டிராஃபிக் ஜாமைச் சமாளிக்க ஒற்றைப் படை எண் வாகனங்களை ஒரு நாளும் இரட்டைப் படை எண்ணுள்ள வாகனங்களை மறுநாளும் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று சட்டம் கொண்டு வரலாமே?
எனக்கு முன் ஜென்மங்களில் நம்பிக்கை இல்லை. உங்கள் கேள்வியைப் படிக்கும்போது தாங்கள் முற்பிறவியில் துக்ளக் மகாராஜாவாகப் பிறந்திருப்பீர்களோ என்று தோன்றுகிறது.
மறுமொழியொன்றை இடுங்கள்