Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Islamic Literature Association to confer Umaru Pulavar Award to Mu Karunanidhi

Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 26, 2006

கருணாநிதிக்கு உமறுப்புலவர் விருது: இஸ்லாமிய இலக்கிய கழகம் அறிவிப்பு

சென்னை, செப். 27: முதல்வர் கருணாநிதியின் இலக்கிய பங்களிப்பைப் பாராட்டி ரூ.1 லட்சம் பரிசுத் தொகையுடன் கூடிய உமறுப் புலவர் சிறப்பு விருதை இஸ்லாமிய இலக்கியக் கழகம் வழங்குகிறது.

இதுதொடர்பாக அக்கழகப் பொதுச் செயலாளர் எஸ்.எம். இதயத்துல்லா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இஸ்லாமிய இலக்கியக் கழகப் பொதுக் குழுக் கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அதன் தலைவர் என்.ஏ.அமீர் அலி தலைமையில் நடைபெற்றது. நீதிபதி சி.மு. அப்துல் வகாப், சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சாதிக், கவிஞர் அப்துல் ரகுமான், மாநில அரசின் தமிழ் அறிவியல் மன்றத் தலைவர் மணவை முஸ்தபா, தோப்பில் முகமது மீரான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இவ்வாண்டு டிசம்பரில் சென்னையில் இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் அனைத்துலக 7-வது இலக்கிய மாநாடு நடத்தப்படும். மாநாட்டில் பங்கேற்க குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அழைக்கப்படுவார். மாநாட்டில் கருணாநிதிக்கு உமறுப் புலவர் விருது வழங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

  • இஸ்லாமிய இலக்கிய பண்பாட்டு ஆய்வு மையம், நூலகம் அமைக்க சென்னையில் அரசு நிலம் தர வேண்டும்.
  • சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித் துறையில் ஆண்டுதோறும் இஸ்லாமியப் பண்பாட்டுச் சொற்பொழிவை நிகழ்த்த ரூ.1 லட்சத்தில் அறக்கட்டளை ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டது.

ஒரு பதில் to “Islamic Literature Association to confer Umaru Pulavar Award to Mu Karunanidhi”

  1. bsubra said

    கருணாநிதிக்கு பாரதியார் தமிழ்ச் செம்மல் விருது

    கோவை, ஜன. 6: முதல்வர் கருணாநிதிக்கு பாரதியார் தமிழ்ச்செம்மல் விருது வழங்குகிறது பாரதியார் பல்கலைக்கழகம்.

    பல்கலைக்கழகத்தின் வெள்ளிவிழாவையொட்டி அளிக்கப்படும் இவ்விருதை ஏற்றுக் கொள்ள முதல்வர் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

    சென்னையில் முதல்வரை வெள்ளிக்கிழமை சந்தித்த பிறகு துணைவேந்தர் க.திருவாசகம் இத் தகவலைத் தெரிவித்தார்.

    இதுகுறித்து மேலும் அவர் கூறியது:

    பல்கலைக்கழக வெள்ளிவிழாவையொட்டி இவ் விருது அளிக்கப்படுகிறது. குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பாரதியார் தமிழ்ச் செம்மல் விருதை முதல்வர் கருணாநிதிக்கு வழங்குகிறார்.

    பிப்.24-ம் தேதி பகல் 2 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்தில் விழா நடைபெறுகிறது.

    ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் மத்திய அரசின் சமூகநீதித் துறையின் உதவியில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதியை அன்றைய தினம் முதல்வர் தொடங்கி வைக்கிறார்.

    மேலும் வெள்ளி விழாவையொட்டி பல்கலைக்கழகத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் கட்டுமானங்களான நானோ தொழில்நுட்ப மையம், வெளிநாட்டு மாணவர்கள் தங்கும் விடுதி உள்ளிட்ட கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

    திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எழுதிய “பாரதியும் பெண்ணுரிமையும்’, மாநிலத் திட்டக் குழுத் துணைத் தலைவர் எஸ்.நாகநாதன் எழுதிய “பாரதியும் இந்திய சமூக பொருளாதார மேம்பாடும்’ ஆகிய புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன என்றார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: