‘Stalin’ Released – Four Dead in the Melee
Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 21, 2006
சிரஞ்சீவியின் “ஸ்டாலின்’ ரிலீஸ்: 4 ரசிகர்கள் சாவு
நகரி, செப். 22: தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் புதிய படமான “ஸ்டாலின்’ வெளியான திரையரங்குகளில் ஏற்பட்ட நெரிசலிலும், மின்சாரம் தாக்கியும் 4 ரசிகர்கள் உயிரிழந்தனர்.
இதுகுறித்த விவரம்:
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிரஞ்சீவி, நடிகை த்ரிஷா நடித்துள்ள “ஸ்டாலின்’ படம் புதன்கிழமை இந்தியா முழுவதும் வெளியானது. படத்தை முதல் நாளே பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலில் திரையரங்குகளில் ரசிகர்கள் குவிந்தனர். இதனால் கடும் நெரிசல் ஏற்பட்டது.
இதில் அனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிநாராயணா (24), கர்ணூல் மாவட்டத்தைச் சேர்ந்த ரங்கசாமி (30) ஆகிய இருவர் உயிரிழந்தனர்.
மேலும் குண்டூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஒரு திரையரங்கில் சிரஞ்சீவியின் “கட்-அவுட்’ வைப்பதில் மும்முரமாய் இருந்தனர் ரசிகர்கள். அப்போது மின்சாரம் தாக்கியதில் நாகராஜ் (24), சேக் உசேன் (23) ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
மறுமொழியொன்றை இடுங்கள்