History of Middle-East Arabian Countries & Jews Israel
Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 15, 2006
யூதர்-அரபியர் கூடி வாழ்ந்தால்…
என்.ஆர். ஸத்யமூர்த்தி
இஸ்ரேலுக்கும் லெபனானுக்குமான போர் 12-7-2006 அன்று தொடங்கி, 14-8-06 காலை நிறுத்தப்பட்டுள்ளது. தெற்கு லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா என்ற இயக்கம் இஸ்ரேலின் இரண்டு படைவீரர்களைக் கடத்திச் சென்றதே இப் போருக்குக் காரணம் என்று இஸ்ரேல் சார்பில் சொல்லப்பட்டது. ஹிஸ்புல்லா இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் வலிமை, லெபனானுக்கு இல்லை என்பதால், அதைப் பலவீனப்படுத்துவது, ஒடுக்குவது தன்னுடைய தேவை என்று இஸ்ரேல் கருதியது.
இஸ்ரேலுக்குத் தன் அண்டை நாடுகளுடன் போர் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது புதியதல்ல. 14-5-1948 அன்று இஸ்ரேல் என்ற தனிநாடு தோற்றம் பெற்ற 24 மணிகளுக்குள்ளாகவே, எகிப்து, ஜோர்டான், சிரியா, லெபனான், ஈராக் ஆகிய நாடுகள் இஸ்ரேல் மீது படையெடுத்தன. பின்னர் 1956ல் எகிப்துடன் போர் மூண்டது. 1967ல் எகிப்து, ஜோர்டான், சிரியா ஆகிய நாடுகளுடன் போரிட வேண்டியிருந்தது. 1973ல் மீண்டும் எகிப்தின் படையெடுப்பைச் சந்திக்க நேர்ந்தது.
போரிலே பிறந்து, போரிலே வாழ்ந்து, போரிலே உயிர் துறக்கும் இஸ்ரேலியர்களின் பூர்வ கதை தெரிந்து கொள்ளப்பட வேண்டியதாகும்.
இஸ்ரேலியர்கள் யூதர்கள். அவர்கள், பைபிளில் பேசப்படுகிற ஆப்ரஹாமின் வம்சாவளியினர். ஆப்ரஹாம் தம் உறவினர், நண்பர்கள் ஆகியோருடன் “”கானான்” என்ற பிரதேசத்தில் குடியமர்ந்தார். இது ஜோர்டான் ஆறு, சாக்கடல் Dead Sea) ஆகியவற்றுக்கும் மத்திய தரைக்கடலுக்கும் இடைப்பட்ட பகுதி. இது நடந்தது சுமாராக கி.மு. 2000-ல்.
கானான் நாட்டில் ஏற்பட்ட பஞ்சத்தின் காரணமாக, அம் மக்கள் எகிப்து நாட்டில் குடியேறினர்; அங்கு துன்புறுத்தலுக்கு ஆளானதால், மோசஸின் தலைமையில் வெளியேறி சினாய்க்குன்றை அடைந்தனர். கானான் நாட்டுக்குத் திரும்பி, அங்கு புனித தேசத்தை நிறுவுமாறும் அது அவர்களுக்கானது எனவும் வாக்களித்தார் இறைவன் எனப்படுகிறது. அதுவே அவர்களுக்கான Promised Land ஆன இஸ்ரேல் ஆனது.
அசீரியர்கள், பாபிலோனியர்கள், பாரசீகத்தினர், கிரேக்கர்கள், ரோமானியர்கள் ஆகியோரின் படையெடுப்புக்களால், இஸ்ரேலியர்கள் தம் நாட்டை விட்டு வெளியேறிச் சிதறியிருந்தாலும், பாலஸ்தீனத்தில் அடங்கிய தம் சொந்த நாடே, அவர்களின் ஆன்மிக மையமாகத் தொடர்ந்தது.
ஆற்றல்மிக்க யூதர்கள் தம் நாட்டை இழந்து பலவிதமான இம்சைகளுக்கு இலக்கானது சோக சரித்திரம். கி.பி. 313ல், கான்ஸ்டண்டைன் பேரரசர் கிறிஸ்தவத்தைத் தேச மதமாக அறிவித்ததை அடுத்து யூதர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டன; அலெக்ஸôண்ட்ரியாவிலிருந்து யூதர்கள் முழுமையாகப் படுகொலை செய்யப்பட்டனர்.
கி.பி. 1096ல், பாலஸ்தீனத்தை முஸ்லிம்களிடமிருந்து விடுவிப்பதற்காக பிரான்ஸýம் மற்ற ஐரோப்பிய நாடுகளும் போர் தொடுத்தபோது, முதல் காரியமாக யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். கி.பி. 1099ல் அவர்கள் ஜெருசலேத்தைக் கைப்பற்றியபோது, கிறிஸ்தவரல்லாதவர் ஒவ்வொருவரும் கொல்லப்பட்டார். யூதர்கள் எல்லாம் அவர்களின் கோயிலில் அடைக்கப்பட்டு, உயிருடன் கொளுத்தப்பட்டனர். கி.பி. 1290 – 1492க்குள் இங்கிலாந்து, பிரான்சு, ஸ்பெயின் ஆகிய நாடுகளிலிருந்தும் இம்சிக்கப்பட்டு, அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இவ்வாறு வெளியேற்றப்பட்ட யூதர்கள், ஹாலந்து, வடஆப்பிரிக்கா, பால்கன், போலந்து, லிதுவேனியா, ரஷியா எனப் பல நாடுகளில் சென்று வாழ்ந்தனர். கி.பி. 1517-ல், ஓட்டோமானியர்கள், பாலஸ்தீனத்தைக் கைப்பற்றிய போது, தங்கள் மதத்தில் மிக்க ஈடுபாடு கொண்ட பல யூதர்கள், பாலஸ்தீனத்திற்கே வந்தனர்.
மேற்கு ஐரோப்பிய நாடுகளையடைந்த யூதர்களைப் போலன்றி, ரஷியாவுக்குச் சென்றவர்கள், அரசாலும் மக்களாலும் இம்சிக்கப்பட்டனர். கி.பி. 1881ல் இரண்டாம் அலெக்ஸôண்டர் என்ற ஜார் மன்னர், சுட்டுக்கொல்லப்பட்டதற்கு யூதர்கள் பொறுப்பாக்கப்பட்டனர். உலகே வியக்குமளவுக்கு யூத விரோத உணர்ச்சி தாண்டவமாடியது. ஒரு நூற்றாண்டுக்குக் கேள்விப்பட்டிராத அளவில் படுகொலைக்கும் தீவைப்புக்கும் யூதர்கள் ஆளாக்கப்பட்டனர். ரஷியாவிலிருந்து லட்சக்கணக்கான யூதர்கள், அகதிகளாக வெளியேறினர்.
இந்த ரஷியப் படுகொலை, உலகத்து யூதர்களை உலுக்கியது. “”பாதுகாப்பும் சுதந்திரமும் யூதர்களுக்கான தனிநாட்டில்தான் கிடைக்கும்” என்பதை லியோ பின்ஸ்கர் என்ற ரஷிய – யூத மருத்துவர், ‘‘அன்ற்ர் உம்ஹய்ஸ்ரீண்ல்ஹற்ண்ர்ய்’’ என்ற நூல் மூலம் அறிவித்தார்.
ஹங்கேரியின் புடாபெஸ்டு நகரத்தில் பிறந்த தியோடர் ஹெர்ஸல் என்ற பத்திரிகையாளர் ஒருவர் இருந்தார். யூதக் குழந்தைகளுக்கு “ஞானஸ்நானம்’ அளிப்பதே ஒரே தீர்வு எனக் கருதியவர் அவர். பிரெஞ்சு ராணுவத்தில் பணிபுரிந்து வந்த ட்ரேபஸ் என்ற யூத அதிகாரி, ஜெர்மனுக்கு உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு 1894-ல் விசாரணை நடந்து வந்தது. பத்திரிகையாளர் என்ற முறையில் அவ் விசாரணையைக் காணச் சென்றார் ஹெர்ஸல். அந்த இளம் பத்திரிகையாளரை அதிர்ச்சியடைய வைத்தது எது என்றால், விவரமறிந்த மக்கள் மிக்க பிரான்ஸ் நாட்டில், நீதிமன்றத்திற்கு வெளியே கூடியிருந்த கூட்டம், “”யூதர்களைக் கொல்லுங்கள்” என்று குரைத்துக் கொண்டிருந்ததுதான்! விளைவு: எல்லாக் காலத்து மக்களையும் ஈர்க்கவல்ல மிகச்சிறந்த பிரசுரம் ஒன்று ‘‘பட்ங் ஒங்ஜ்ண்ள்ட் நற்ஹற்ங்’’ என்ற பெயரில் அவரால் வெளியிடப்பட்டது. கி.பி. 1897ல் ஸ்விட்ஸர்லாந்தின் பாஸ்லே நகரில் “”யூதர்களின் காங்கிரஸ்” ஒன்றை வெற்றி பெற நடத்தினார் அவர். அப்பொழுது அவர், “”இப்பொழுது ஒரு யூத நாட்டின் கருவை உருவாக்கி விட்டேன்… கண்டிப்பாக 50 ஆண்டுகளில் எல்லோரும் அதைக் காண்பார்கள்!” என்று தீர்க்கதரிசனத்தோடு சொன்னார். அது 1948ம் ஆண்டு மே மாதம் 14ம் நாள் மெய்ப்பிக்கப்பட்டது!
கி.பி. 1920ல் லீக் ஆப் நேஷன்ஸ் (League of Nations) பாலஸ்தீன நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பை பிரிட்டிஷ் அரசுக்கு வழங்கியது. அதில் யூதர்களுக்குத் தனி நாடு பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. முதலாம் உலகப் போரின் முடிவில், பாலஸ்தீனத்தின் 7,50,000 மக்கள்தொகையில் யூதர்கள் 10 விழுக்காடுதான் இருந்தனர். பல நாடுகளிலிருந்து யூதர்கள் பெருமளவில் குடியேறினால்தான், அவர்களின் கோரிக்கை வெற்றி பெற இயலும். இக் குடியேற்றக் கொள்கை, அரபியர்களிடமிருந்து கடும் ஆட்சேபணையையும் போராட்டத்தையும் தூண்டியது இயல்பே. இருப்பினும், கி.பி. 1933ல் ஹிட்லர், ஜெர்மனின் அதிபரான பிறகு யூதர்கள் இம்சிக்கப்பட்டு, 60 லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டனர்; மேலும் 61,854 யூதர்கள், பாலஸ்தீனத்திற்கு அகதிகளாக வந்தனர்.
யூதர்களின் தனி நாடு கோரிக்கையை பிப்ரவரி, 1947ல் ஐ.நா. சபைக்குக் கொண்டு சென்றது பிரிட்டன். ஐ.நா. சபை, ஒரு சிறப்புக் கமிஷனை நியமித்தது. பாலஸ்தீனத்தை ஒரு சிறிய நாடாகவும், ஒரு பெரிய அரபிய நாடாகவும் பிரிக்கப் பரிந்துரை செய்தது அக் கமிஷன் (1-9-1947). யூதர்கள் ஏற்றுக் கொண்டனர்; அரபியர்களும் பிரிட்டனும் எதிர்த்தனர். பரிந்துரைத்ததைவிட அதிகமான பகுதி அரபியர்களுக்கு எனும் சிறிய மாற்றத்துடன், அத் திட்டத்தை ஐ.நா. பொதுச்சபை ஏற்றுக்கொண்டது.
செய்தி கேட்டவுடனே, பாலஸ்தீன அரபியர்கள் வன்முறையில் இறங்கினர். யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பிரிட்டிஷ் அரசு பாலஸ்தீனத்தை நிர்வகிக்கும் தன் பொறுப்பிலிருந்து 15-5-48 அன்று விடுபடுவதாக அறிவித்தது.
அறிவித்ததற்கு ஒருநாள் முன்னதாக, 1948, மே 14 காலை 9 மணிக்கு பிரிட்டிஷ் ஹைகமிஷனர் பாலஸ்தீனத்தை விட்டு விடைபெற்றார். அன்று மாலையே 4 மணிக்கு, டேவிட் பென் குரியன் இஸ்ரேலின் சுதந்திரப் பிரகடனத்தை அறிவித்தார். அமெரிக்க அதிபர், அதனை அங்கீகரித்து, ஏற்கெனவே அளித்த வாக்குறுதியைக் காப்பாற்றினார்! சில மணிகளில், சோவியத் யூனியனும் அங்கீகரித்தது. 2000 ஆண்டுகளுக்குப் பின், இறைவன் வாக்களித்த நாட்டை, இஸ்ரேலியர்கள் பெற்றனர்!
இஸ்ரேலைச் சுற்றியுள்ள அரபு நாடுகள் அதை ஏற்க மறுத்துத் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதும் இஸ்ரேலை உலக வரைபடத்திலிருந்தே ஒழித்துவிட வேண்டும் என்று சொல்வதும் நீடித்தது. எப்பொழுதும் அரபியர்கள் படையெடுக்கக் கூடும் என்ற அச்சத்தாலும் வருமுன் காத்தல் கருதியும் இஸ்ரேல் எப்பொழுதும் போர் புரியத் தயார் நிலையிலேயே இருக்க வேண்டியுள்ளது.
கி.பி. 638ல் இஸ்லாமியர்கள் பாலஸ்தீனத்தைக் கைப்பற்றியபோதும், கி.பி. 711ல் ஸ்பெயினில் இஸ்லாம் பரவியபோதும் யூதர்களின் அறிவும் ஆற்றலும் பயன்படுத்தப்பட்டு, பறிக்கப்பட்ட உரிமைகளெல்லாம் மீண்டும் தரப்பட்டன. நாடு திரும்பிய யூதர்கள், பாலஸ்தீன இஸ்லாமிய அரசால், தங்கள் நிலங்களை மீட்டுக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். யூதர்களுடன் சகவாழ்வு (Co – existence) காரணமாக, இஸ்லாமிய அரசுகள் பெற்ற நலனைக் கண்டு, முன்பு விரோதம் காட்டிய கிறிஸ்தவர்களும் அவர்களைப் பயன்படுத்தலாயினர். வரலாற்றின் வளமான இந்நிகழ்வுகளை அரபியர்கள், இஸ்ரேலியர்கள் ஆகிய இருவருமே சிந்தித்துப் பார்க்கக் கடமைப்பட்டவர்கள்!
பாலைவனத்தைச் சோலைவனமாக்கியவர்கள், பல சோதனைகளையும் பொறுத்துக் கொண்டு விவசாயம், விஞ்ஞானம் போன்ற துறைகளில் சாதனை படைத்தவர்கள், நாட்டுப்பற்றும் துணிவும் இறையுணர்வும் மிக்க இஸ்ரேலியர்களும் அதே இயல்புகளும் கலாசாரச் சிறப்பும் மிக்க அரபியர்களும் கூடி வாழ்ந்தால் கோடிகோடி நன்மை விளையும். மாறாக தங்களுக்குள் போரிட்டுத் தங்களைச் சிதைத்துக் கொள்வது அவர்களை உள்ளடக்கிய உலகிற்கே உகந்ததல்ல.
யூதர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் ஆகிய மூவருக்கும் பரம பவித்திரமாய் விளங்கும் ஜெருசலேத்தின் புனிதம் போர்களினால் பாதிக்கப்பட அனுமதிப்பது, ஆண்டவன் அளித்த அறிவுடைமைக்கு அழகல்ல.
Ibrahim Mowsoor said
The Good History
nnjackshan said
iyaa enakku israel in full history i um tharuveergalaa?
Vaasikka Migavum Suvarasiyamaaga irukku. Eppai Joothar kal Jerusalemukku Vanthaar kal Yaar Avarkalai Kootti Vanthathu Eana Eluthungal Please
Durai said
பா.ராகவன் எழுதிய நிலமெல்லாம் ரத்தம் படியுங்கள். யூத,பாலஸ்தீனிய வரலாறு புரியும்.
Israel u will be die said
Listen israel u will be Die soon INSHA ALLAH
RK KRISHNAN said
ULAGAM ALIYUM KADVAUL VARUVAR NEENGAL NENAIPATHU NADAKKUM
APPOTHU NAAN KADVULIN ARUKIL ERUPPEN NEENGAL ?
KRISH
rasu said
isreal is a god choosen country .it is not destroyed.god bless isreal people and protect isreal .
rasu said
any country is attack r war to isreal.the country will be surely destroyed in this world map. jesus christ is president of isreal.
vijayakumar said
please send me all about israel news i am very intersting below my email id
syed said
Yootharkal i patritheriyathavar yootharkal iraivanin yeathirikal.avarkalin iyarkayana kunangal nayavangaham,poi,avarkal kollapadavendiyavarkal yeantru kuronil koorapattullathu.
manithan said
அய்யா சத்யமூர்த்தி, சும்மா கண்டத சொல்லாம பா . ராகவன் எழுதிய நிலமெல்லாம் ரத்தம் படிச்சுட்டு அப்புறம் சொல்லுங்க
fu said
வரலாற்றை திரித்து எழுதுவதிலிவர்கல் வல்லவர்கள்…
கி.பி. 1920ல் லீக் ஆப் நேஷன்ஸ் (League of Nations) பாலஸ்தீன நாட்டை நிர்வகிக்கும் பொறுப்பை பிரிட்டிஷ் அரசுக்கு வழங்கியது.// தன் கட்டுபாட்டில் இல்லாத நாட்டை அடுத்தவனுக்கு எப்படி வழங்க முடியும்…முதலாம் மனிதரின் இடத்தை இரண்டாம் மனிதருக்கு மூன்றாம் மனிதர் வழங்குகிறார்…எந்த நியாயம் இது?…இந்தியாவை அவர்களிடம் கொடுத்திருந்தால் கூட நியாயம் ஏன் என்றால் இந்தியா அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது…பலேச்டினே அப்படியல்ல….
கானான் நாட்டுக்குத் திரும்பி, அங்கு புனித தேசத்தை நிறுவுமாறும் அது அவர்களுக்கானது எனவும் வாக்களித்தார் இறைவன் எனப்படுகிறது. அதுவே அவர்களுக்கான Promised Land ஆன இஸ்ரேல் ஆனது// பைபிள் கூறும் ஒன்றை வைத்து நாட்டை நிர்ணயிகாலாமா? நான் பைபிள் இறைவேதம் என்று நம்பவில்லை,நீங்கள் குரான் இறை வேதம் என்று நம்பபோவது இல்லை….இந்தியா முஸ்லிம்களுக்கு என்று குரான் கூறினால் அதன் அடிப்படையில் இந்தியாவை எங்களுக்கு விட்டு தர தயாரா?…அது நியாயமா?…இது ஆக்கிரமிப்பு தான்….
யூதர்களின் தனி நாடு கோரிக்கையை பிப்ரவரி, 1947ல் ஐ.நா. சபைக்குக் கொண்டு சென்றது பிரிட்டன். ஐ.நா. சபை, ஒரு சிறப்புக் கமிஷனை நியமித்தது. பாலஸ்தீனத்தை ஒரு சிறிய நாடாகவும், ஒரு பெரிய அரபிய நாடாகவும் பிரிக்கப் பரிந்துரை செய்தது அக் கமிஷன் (1-9-1947). யூதர்கள் ஏற்றுக் கொண்டனர்; அரபியர்களும் பிரிட்டனும் எதிர்த்தனர். பரிந்துரைத்ததைவிட அதிகமான பகுதி அரபியர்களுக்கு எனும் சிறிய மாற்றத்துடன், அத் திட்டத்தை ஐ.நா. பொதுச்சபை ஏற்றுக்கொண்டது.// யூத நாட்டை சரியாக அங்கே உறுவாக்கினால் அரேபியா ஆப்ரிக்க வளங்களை கொள்ளை அடிக்கலாம் என்று முடிவு செய்த பிரித்தானிய அரசு 1915இல் சய்க் மற்றும் பிகோ சேர்ந்து பிரித்தானிய பார்லிமெண்டில் வைத்து முழு அராபிய நிலங்களையும் சிறு சிறு கூறுகளாக போட்டபொழுது உருவாக்கப்பட்ட நாடு தான் இது,…
அப்படி உண்மையாகவே ஐ.நா அவர்களுக்கு கொடுத்த நிலத்தை விட தற்பொழுது கிட்டத்தட்ட முழு பாலேச்டீனதையும் சிரியா லெபனான் எகிப்த ஆகிய நாடுகளில் ஆக்கிரமித்து இருக்கும் இஸ்ரேலிய அரசை பற்றி ஏன் நீங்கள் குறிப்பிடவில்லை…இது ஏதும் வரலாறு இல்லையா…தினம்தோறும் அவர்கள் கொன்று குவிக்கும் பாலேச்டீனர்களையும் பாலேச்டீனர்களை சுற்றி அவர்கள் நாட்டிலேயே சுவர் எழுப்பி அடிமைகளாகவும், தீண்டதகாதவர்கலாவும், உணவு செல்ல விடாமல் தடுத்தும்,மீன் பிடிக்க விடாமல் தடுத்தும்,அவர்களை அணு அணுவாக கொள்ளும் செய்திகளை ஏன் குறிப்பிடவில்லை…
RK KRISHNAN said
ALL INDIAN MY FAMILY MEMBER
ENGALAI PERIKKATHIRKAL SATHI MATHA VERIYARKAL ENGAL NATTAI VITTU ODATTUM
KURAN BIBLE ETHU UNMAI ENDRU SOLLA YARUKKUM ARUKATHAI ELLAI
ANBU ELLATHAVAN PERIVENAI SAIBAVAN NARAGAM SELVAN
KRISH
usamah mohamed said
En endral kaafirgalukku mulimgalai pidikkadhu
paul said
muslimgale nengal answering Islam thalathai parungal padiyungal ungalathu mathathai patriyum Mohammed patriyum arinthu kolungal
evangelin said
boomiyum athan niraium kartharudaiyadhu,sarvaththaum sirustiththavar thevan,ellam kartharuke uriyadhu
jesus loves you all people
Daniel said
Israel oru porai santhikum athil athu thotru pogum. antha samayam Israelil palaya aalyam kattapadum appothu ulagamengum ubathravam varum appothu yesu varuvar
Arjun said
All are telling about her/his religion’s favour only. never one say about the peace and human
@ Arjun
Arjun said
Please don’t think as SELFISH, think comman b’coz all creating for all people, all bloods are samecolor.
If you need A/B + or – type blood or any organs then why are not going to collect your religion’s blood/organs. That time only you need A/B +/- blood from any religion any caste….. who was told my religion/country, those All Are LIAR
@Arjun
n.mohamedrabi said
my dear friends
palasteine arabic people evvalavu kastam vanthalum ankeya irunyhargal, anal yudhargal avvaru illai melum oru nattai pankiduvathu enbathu brittan and americavirku kai vandha kalai intha iru nattin suya labathirkaha madhangal payanpadutha padukirathu, jerusalem anaithu madhangalin punniya boomi indru thannai samathana thoodhuvanaga kattikollum uno jerusalethai than kattupattil meendum vaithu
perumbanami pakuthikalai palastineku thiruppi thanthu amaithiku vazhikanalame. ithai seyya iyalatha uno oru thalai patchamaga iruppadhahathane artham, americavin kalaniyaga irukkum uno val athai seyya iyalathu,
Stin said
Hello listen Isreal ah aani kooda pudunga mudiyathu…. if you want just try it surey you will destroy…. if you want to commit suicide go and fight with Israel
Mukesh said
Uudharkalai patri migavum thavarana karuthukal sola padugindrana, avarkal than ulagai maraimugama aalgirarkal endru solapaduvathu unmaiya?
http://dongthunggo.com/dong-thung-go.html said
http://dongthunggo.com/dong-thung-go.html
History of Middle-East Arabian Countries & Jews Israel « Tamil News
David said
Very Usefull message
chandrasekar said
israel are abraham son so god give to land long ago.god told moosa ,that peoples are not good i hate the peoples and take land give another peoples that mean time peoples not listen to god so god take the land give to another peoples.but god told whenever some jews people come to me and pray after i will give Promised Land so god give to promise land.god told abraham your son are controlled by world.still jews control all country.that is true