Dalits prohibited from attending Temple Festivities
Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 15, 2006
கோயில் சாவடிக்குள் தலித்துகள் சென்றதை எதிர்த்து கலவரம்: ஏ.டி.எஸ்.பி. உள்பட 6 பேர் காயம்
விழுப்புரம், செப். 16: சங்கராபுரம் அருகே கொசப்பாடியில் உள்ள செம்பியம்மன் கோயில் சாவடிக்குள் தலித் இனத்தவர் நுழைந்ததற்கு ஊர்மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கல்வீச்சு நடத்தியதில் ஏ.டி. எஸ்.பி. உள்பட 6 பேர் வெள்ளிக்கிழமை காயமடைந்தனர்.
சங்கராபுரம் அருகே கொசப்பாடியில் செம்பியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு இம்மாதம் 9 -ம் தேதி திருவிழா நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.
திருவிழாவின்போது தலித் மக்கள் கோயிலுக்கு செல்லக்கூடாது என்றும் திருவிழா முடிந்த பின்னர் அவர்கள் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்யலாம் என்றும் ஊர்மக்கள் கூறினர். இதை தலித் இனத்தவர் ஏற்றுக்கொண்டனர்.
கோயில் திருவிழா முடிந்த பிறகு தலித் இனத்தவர் கோயிலுக்கு செல்ல முயன்றபோது சாமி சிலைகளை கோயில் சாவடியில் வைத்து விட்டதால் 5 ஆண்டுகளுக்கு இந்த சிலையை வெளியே எடுக்க இயலாது என்று ஊர் மக்கள் கூறினர்.
இந்தநிலையில் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. வீரய்யன், மாவட்ட செயலர் ஆனந்தன், செயற்குழு உறுப்பினர்கள் இ.சுப்ரமணியன், குமார், என்.சுப்ரமணியன், வட்டச் செயலர் திருப்பதி, கிளைச் செயலர் ஏ.ராஜேந்திரன் ஆகியோர் தலித் இனத்தவருடன் செல்லம்பட்டு சாலையிலிருந்து வெள்ளிக்கிழமை ஊர்வலமாக சென்று கொசப்பாடி கிராம எல்லையை நெருங்கினர்.
இவர்களை போலீஸôர் மற்றும் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
அப்போது இவர்களுக்கும், போலீஸôருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் துப்பாக்கி ஏந்திய போலீஸôர் அங்கு குவிக்கப் பட்டனர்.
கொசப்பாடியைச் சேர்ந்த தலித் இனத்தவர் மட்டும் கோயிலுக்கு வரலாம் என்றும் வெளியூரைச் சேர்ந்த எவரும் இந்த ஊருக்குள் வரக் கூடாது என்றும் ஊர்மக்கள் கூறியதாக வருவாய் கோட்டாட்சியர் ஜெயபால், மார்க்சிஸ்ட் கட்சியினரிடம் கூறினார்.
இதை ஏற்றுக்கொண்ட மார்க்சிஸ்ட் கட்சியினர் இந்த ஊருக்கு வெளியே முகாமிட்டதோடு தலித் இனத்தவரை கோயிலுக்கு பத்திரமாக அழைத்துச் செல்லுமாறு அதிகாரிகளிடம் கோரினர்.
இதைத்தொடர்ந்து இந்த ஊரைச் சேர்ந்த தலித் இன பெண்களும், ஆண்களும் நண்பகல் 12 மணியளவில் தலித் குடியிருப்பு பகுதியிலிருந்து மற்றவர்கள் வசிக்கும் பகுதி வழியாக போலீஸ் பாதுகாப்புடன் கோயிலுக்கு புறப்பட்டனர்.
தலித் இனத்தவர் சிலர் செம்பியம்மன் கோயிலுக்கு செல்லாமல், நடு வழியில் உள்ள இக்கோயிலின் சாவடிக்குள் நுழைந்தனர்.
இதைக்கண்ட ஊர்மக்கள் கூட்டமாக திரண்டு, சாவடிக்குள் தலித் இனத்தவர் சிலர் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கோயில் சாவடிக்கு முன் திரண்ட இவர்கள், போலீஸôருடன் வாக்குவாதம் செய்ததால் கலவரம் ஏற்படும் நிலை உருவானது.
இதனால் இவர்களை போலீஸôர் எச்சரித்த பிறகும் இவர்கள் கலைந்து செல்லவில்லை.
இதையடுத்து போலீஸôரை சிலர் தாக்க முயன்றதால், போலீஸôர் தடியடி நடத்தினர். மக்கள், போலீஸôரின் மீதும், அங்கு செய்தி சேகரிக்க சென்றிருந்த பத்திரிகையாளர்கள் மற்றும் புகைப்படக்காரர்கள் மீதும் கல் வீச்சு நடத்தினர்.
இதையடுத்து போலீஸôர் மீண்டும் தடியடி நடத்தி கும்பலை கலைத்தனர். இதில் ஏ.டி.எஸ்.பி பழனி உள்ளிட்ட 6 போலீஸôர் காயம் அடைந்தனர்.
மறுமொழியொன்றை இடுங்கள்