Kid with one Eye dies due to Medical Complications
Posted by Snapjudge மேல் செப்ரெம்பர் 11, 2006
நெற்றிக் கண்ணுடன் பிறந்த குழந்தை மரணம்
சென்னை, செப். 11: சென்னையில் நெற்றியில் ஒற்றைக் கண்மட்டும் கொண்டு பிறந்த குழந்தை, 10 நாள்களுக்கு முன் இறந்தது.
சென்னைத் தம்பதிக்கு கடந்த மாதம் ஒற்றைக் கண்ணுடன் விநோதக் குழந்தை ஒன்று பிறந்தது. அதன் மூக்கும் சரிவர அமையப் பெறாததால், மூச்சு விட சிரமப்பட்டது.
இதனால், சுவாசக் குழாய் பொருத்தப்பட்டது. பிறந்தது முதலே, படிப்படியாக உடலின் எடையை இழந்து வந்த அக்குழந்தை, கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனையில் 10 நாள்களுக்கு முன் இறந்தது.
குழந்தையின் உடலைப் பதப்படுத்தி, அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்க உதவும்படி, மருத்துவமனை நிர்வாகம் குழந்தையின் பெற்றோரைக் கேட்டுக் கொண்டது. இதற்கு, அவர்கள் மறுத்து விட்டனர்.
மறுமொழியொன்றை இடுங்கள்