Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Profit law allows her but Sonia not likely to return to NAC job

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 28, 2006

பதவியில் இல்லாமலே சாதித்தவர் சோனியா!

நீரஜா சௌத்ரி
தமிழில்: சாரி.
தேசிய ஆலோசனைக் கவுன்சில் என்ற அமைப்பு 2004 ஜூன் மாதம் ஏற்படுத்தப்பட்டது. “”பொறுப்பில் இல்லாமலே அதிகாரம் செலுத்தவும் அதை நியாயப்படுத்தவும் சோனியா காந்திக்காக ஏற்படுத்தப்பட்டதுதான் இந்தக் கவுன்சில்” என்று எதிர்க்கட்சிகள் அப்போது குற்றஞ்சாட்டின.

இந்த கவுன்சிலுக்காக ஆண்டுக்கு 18 கோடி ரூபாய் செலவில் பட்ஜெட், 12 உறுப்பினர்கள், 50 அலுவலகப் பணியாளர்கள் – அதில் ஒருவர் செயலர், இணைச் செயலர் அந்தஸ்துள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரி – எண்.10 ஜன்பாத் இல்லத்துக்கு எதிரிலேயே மிகப் பெரிய பங்களா என்று வசதிகள் செய்துதரப்பட்டபோது, சோனியாவுக்காக தனி அலுவலகமே தயார் செய்யப்பட்டது போன்ற தோற்றம்தான் ஏற்பட்டது.

அன்றிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த அமைப்பின் தலைவராக சோனியா காந்தி மீண்டும் பதவியேற்க மாட்டார் என்ற நிலையில், நிலைமையே வேறாக் காட்சி தருகிறது. இந்த அமைப்பையே கலைத்துவிட்டார்கள் என்றால் அதைவிட பரிதாபம் வேறு எதுவும் இருக்க முடியாது.

ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆதாயம் தரும் பதவிகளுக்கு விதிவிலக்கு தந்து, இரட்டைப் பதவி மசோதாவை நிறைவேற்றி, அதை குடியரசுத் தலைவரும் ஏற்று கையெழுத்திட்டுவிட்ட நிலையில், தேசிய ஆலோசனைக் கவுன்சில் கதி என்ன ஆகும் என்று தெரியவில்லை. இந்த மசோதாவே செல்லாது என்று அறிவிக்கக் கோரி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தினேஷ் திரிவேதி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அதை நீதிமன்றமும் ஏற்று அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இந்த வழக்கு நடந்து முடிய நிரம்ப கால அவகாசம் பிடிக்கும்.

குறைந்தபட்ச பொது திட்டத்தில் கூறப்பட்டுள்ள சமூக நல திட்டங்களை அமல் செய்வதற்கு, தேசிய ஆலோசனைக் கவுன்சில்தான் அரசுக்கு மூல விசையாகச் செயல்பட்டிருக்கிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டம், தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டம், அனைத்துப் பகுதிகளிலும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ப்பு திட்டம், சத்துணவு திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு, கிராமப்புற சுகாதார மேம்பாட்டுத் திட்டம் போன்றவற்றுக்கு நிதி அமைச்சகம் கூடுதல் நிதி ஒதுக்க, முக்கிய காரணமாக இருந்ததே தேசிய ஆலோசனைக் கவுன்சில்தான்.

பெண்களைக் கணவன்மார்களும், அவருடைய உறவினர்களும் அடித்து உதைத்து கொடுமை செய்வதைத் தடுக்க வேண்டும், சட்டம் இயற்ற வேண்டும் என்று 1975-லேயே வலியுறுத்தப்பட்டது. ஆனால் சட்ட வடிவம் பெற்றது இப்போதுதான். இது ஆரம்பம்தான். போகப்போக இச் சட்டம் மேலும் வலிவு பெறும். பெண்களின் பறிக்கப்பட்ட உரிமைகள் ஒவ்வொன்றாக மீட்டெடுக்கப்படும்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சாதனைகள் பற்றிய பேச்சு வரும்போது தேசிய ஆலோசனைக் கவுன்சில் ஆற்றிய பங்கும் கூடவே நினைவுகூரப்படும். தகவல் அறியும் சட்டம் தொடர்பாக இடதுசாரிகள் உரிமை கொண்டாட முற்பட்டாலும், அதில் அதிகாரிகளின் குறிப்புகளை வெளியே தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அதிகார வர்க்கம் கூறியதை அரசுத்தரப்பில் ஏற்று சட்ட திருத்தமும் சேர்க்கப்பட்டது. அதை சோனியா காந்தி வன்மையாக ஏற்க மறுக்கவே, அது கிடப்பில் போடப்பட்டது.

இதற்கெல்லாம் பல காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணம், தேசிய ஆலோசனைக் கவுன்சிலின் தலைவராக சோனியா காந்தி இருந்ததே. 14-வது மக்களவையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மைய விசையாக இருப்பது காங்கிரஸ் கட்சியே. அதன் தலைவர் என்ற வகையில் சோனியா காந்தி மட்டற்ற அதிகாரம் பெற்று விளங்குகிறார். அதிகாரமுள்ள பதவி எதிலும் இல்லாமலே, “”அதிகாரம் செலுத்தும் செல்வாக்கு” அவருக்கு இருக்கிறது.

நேரடியாக அதிகாரம் உள்ள பதவியில் அவர் இருந்திருந்தால், அதிகாரிகளின் ஆலோசனைகளையும் விளக்கங்களையும் கேட்டு, மக்களின் கோரிக்கைகளை முழுக்க உள்வாங்கும் சக்தியை இழந்தவராகக்கூட மாறியிருப்பார். பெரும்பாலான அரசியல் தலைவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் இப்படித்தான் மக்களுடைய தொடர்பை இழந்து, அதிகாரிகளின் ஆலோசனையைக் கேட்டு செயலிழந்து நிற்கிறார்கள்.

சோனியா காந்தி இல்லாமல், தேசிய ஆலோசனைக் கவுன்சிலால் இனி வலுவாகச் செயல்பட முடியாது. கடந்த 3 மாதங்களாகச் செயல்பட்டதைப்போல, எவருக்கும் தெரியாதபடி வேண்டுமானால் செயல்படலாம். அல்லது சோனியாவின் நம்பிக்கையைப் பெற்ற ஒருவரின் தலைமையில் ஓரளவு வலுவுடன் செயல்படலாம். ராகுல் காந்தியைக் கூட தலைவராக நியமிக்கலாம். ஆனால் கவுன்சிலில் இருக்கும் சிலரே ராகுலின் தலைமையை ஏற்கக் தயக்கம் காட்டக்கூடும்.

பொருளாதார ஆலோசனைக் கவுன்சில் போல இதையும் பிரதமர் தலைமையில் செயல்படும் அமைப்பாக மாற்றிவிடலாம் என்ற யோசனையும் இருக்கிறது. தொழில், வர்த்தகப் பிரமுகர்கள் தங்கள் நோக்கத்துக்கு அரசு இயந்திரத்தை வளைக்க முற்படும்போது, அதை எதிர்த்து நிற்கும் சக்தியாக, மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பாக இது செயல்பட வேண்டும் என்றே பலரும் கருதுகின்றனர்.

தேசிய ஆலோசனைக் கவுன்சிலுக்கு கடந்த ஆண்டு, ஓராண்டு பதவிக்காலம் நீட்டிப்பு தரப்பட்டது. இந்த ஆண்டு 6 மாதங்கள்தான் தரப்பட்டுள்ளது. எனவேதான், இதைக் கலைத்துவிடுவார்கள் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. இந்த அமைப்பும் அது மேற்கொண்ட பணிகளும், “”காங்கிரஸýம், சோனியா காந்தியும் ஏழை பங்காளர்கள்” என்ற மதிப்பைப் பெற்றுத் தந்துள்ளன. பொருளாதார சீர்திருத்தத்துக்கு ஆதரவாக பிரதமரும் நிதி அமைச்சரும் செயல்படும்போது, மக்களின் சார்பாக சோனியா செயல்பட்டு அரசியல்தளத்தில் சமநிலையை ஏற்படுத்தினார்.

அடுத்த ஆண்டு உத்தரப் பிரதேசத்திலும் பஞ்சாபிலும் சட்டப் பேரவை பொதுத் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. 2009-ல் மக்களவைக்கே பொதுத் தேர்தல் நடைபெற வேண்டும். சீர்திருத்தங்களால் ஏற்படும் அரசியல் லாபங்களைவிட, தேசிய ஆலோசனைக் கவுன்சிலின் மக்கள் நல திட்டங்களால்தான் அதிக அரசியல் லாபம் கிட்ட முடியும்.

தமிழில்: சாரி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: