Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Jothika – 4 in 1 Saree : RMKV Marriage Silk Pattu

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 20, 2006

வேடிஸ் சாய்ஸ்… 4 இன் 1 சாரிஸ்

முன்பெல்லாம் துணிக்கடைகளுக்குள் நுழைகிறபோது கையெடுத்துக் கும்பிட்டு வரவேற்கும் பொம்மைகள். இதே வரவேற்பு இப்போதும் உண்டு. ஆனால் பொம்மைகளாய் மனிதர்கள். ஒருபுறம் ஆண்கள். எதிர்புறம் பெண்கள். வரிசையாய் நின்று சாக்லெட், ரோஜாப்பூக்கள் கொடுக்கிறார்கள். இன்னும் ஒரு சில கடைகளில் மேளதாள வரவேற்பு. வாடிக்கையாளரை எப்படியும் கவர்ந்துவிடவேண்டும் என்பதற்காகவே இத்தகைய உபசரிப்பு.

இந்த வரவேற்பு முறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக இருக்கிறது தி.நகர் ஆர்.எம்.கே.வி. துணிக்கடையினர் கொடுக்கும் வரவேற்பு. எல்லோரும் விரும்புகிற வியக்கிற புதியபுதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்து, அதன் மூலமே வாடிக்கையாளரைக் கவர்கின்றனர். குறிப்பாக சேலையில் அதிக கவனம். இப்போது 4 இன் 1 என்கிற “ரிவர்சிபிள்’ புடவையை அறிமுகம் செய்துள்ளனர். இந்த சேலையின் மீது பெண்களுக்கு அப்படி என்ன நாட்டம்?

ஆர்.எம்.கே.வியின் பங்குதாரர் சிவக்குமாரே சொல்கிறார்:

“”இன்றைக்கு சேலை கட்டுவோர் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. குறிப்பாக இன்றைய இளைஞிகள் சேலை கட்டவே விரும்புவதில்லை. எங்கள் வீட்டுப் பெண்பிள்ளைகள் கூட சேலை என்றால் வெறுத்து ஒதுக்குகின்றனர். அவர்கள் வெறுக்கிறார்கள் என்பதற்காக நாம் அப்படியே விட்டுவிடமுடியுமா? சேலை தமிழர்களின் சின்னமல்லவா?

இளைஞிகளிடையே சேலை கட்டுகிற ஆசையை அதிகரிக்கவேண்டும் என்பதற்காகத்தான் இதுபோன்ற புதிய புதிய சேலைகள் அறிமுகம் செய்கிறோம். முன்பு 714 அடி நீளமுள்ள சேலையை நெய்து சாதனை செய்தோம். அடுத்து 50 ஆயிரம் வண்ணங்களுடைய சேலையை நெய்து சாதனை செய்தோம். இப்போது இந்த 4 இன் 1 “ரிவர்சிபிள்’ பட்டுச் சேலை. இந்தச் சேலையை நெய்தது நெசவுத்தொழிலில் ஒரு புரட்சி என்றுகூட சொல்லலாம். ஒரு சேலையின் இரண்டு பக்கங்களிலும் இருவேறு வண்ணங்கள். 4 பார்டர்கள், 4 முந்திகள்.

இந்த முறையில் நெய்தது இதுவே முதல் முறை. இந்த முறைக்கு “கேவி டெக்னிக்’ என்று பெயரிட்டுள்ளோம். இதற்கான காப்புரிமையையும் வாங்க உள்ளோம்.

ஒரே புடவையில் நான்கு புடவைகள் இருப்பதால் அதிக முறை கட்டுவார்கள். இதனால் சீக்கிரம் வீணாகிப் போய்விடும் என்பதெல்லாம் இல்லை. இப்போது தயாரித்துள்ளது மணப்பெண்ணுக்கான சேலை என்ற கண்ணோட்டத்துடன்தான் தயாரித்து உள்ளோம். அதற்காக மணப்பெண்கள் மட்டும்தான் அணியலாம் என்பதல்ல. எல்லோரும் அணியலாம்.

ஒரு புடவையின் விலை 64 ஆயிரத்து 650 ரூபாய் என்பது அதிகம் என்பதுபோலத்தான் தெரியும். ஆனால் இந்தச் சேலையில் மற்ற எல்லாச் சேலைகளையும்விட ஜரிகை வேலைப்பாடுகள் அதிகம். இப்போது சாதாரணமாக மணப்பெண்களுக்கு சேலை எடுத்தாலே அவற்றின் விலை 25 ஆயிரம், 30 ஆயிரம் ரூபாய் ஆகிவிடுகிறது. அவற்றோடு இதை ஒப்பிடுகிறபோது இவற்றின் விலை குறைவுதான்.

இவ்வளவு விலை உள்ள சேலைகளை நடுத்தர வர்க்கத்தில் உள்ளவர்களால் வாங்க முடியாது என்பது உண்மைதான். இதற்காக இதே 4 இன் ஒன் 1 “ரிவர்சிபிள்’ சேலை 6 ஆயிரம் ரூபாயிலிருந்து 10 ஆயிரம் வரையிலான விலையில் வருகிற தீபாவளிக்கு அறிமுகப்படுத்த உள்ளோம்.

சேலையில் இப்படி புதியபுதிய கலைநுணுக்கங்களை புகுத்துவதற்கென்றே நுபுணத்துவம் உள்ள ஒரு குழுவை வைத்திருக்கிறோம். அவர்கள் வேலையே சேலைகளில் புதியபுதிய கலை நுணுக்கங்களை அறிமுகப்படுத்துவது பற்றி பரிசோதித்துக்கொண்டே இருப்பதுதான். “இந்தக் குழுவில் பெண்கள் உண்டா?’ என்றால்… “இல்லை’ என்றுதான் சொல்லவேண்டும். இந்தத்துறையில் பெண்கள் படித்துவிட்டு வந்தாலும், அவர்கள் கவனமெல்லாம் சேலைகளைப் பற்றி இல்லை. பேஷன் உடைகளின் மீதுதான் உள்ளது” என்கிறார் சிவக்குமார்.

இந்த 4 இன் 1 சேலை குறித்து கடை வாயிலில் இரு பெண்களின் உரையாடல்:

“”ஏய்.. 4 இன் 1 புடவை வந்திருக்காமே கேள்விப்பட்டீயா?”

“”ம்.. நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்னா மாதிரின்னு ரஜினி சொல்லுறா மாதிரி 100 இன் 1 வந்தா நல்லா இருக்கும்லே?”

பின்னூட்டமொன்றை இடுக