Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

International Woman of the Year – Vasantha Kandasamy

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 20, 2006

விருது: எண்களின் ராணி!

ரவிக்குமார்

கணித ஆராய்ச்சிக் கட்டுரைகளை அதிக அளவில் எழுதி சாதனை படைத்ததற்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் புள்ளியியல் துறை 1996-ம் வருடம் வழங்கியிருக்கும் “இன்டர்நேஷனல் வுமன் ஆஃப் தி இயர்’ பட்டம், அமெரிக்க புள்ளியியல் துறை வழங்கியிருக்கும் “டிஸ்டிங்க்விஷ் அவார்ட்’…இந்த வரிசையில் வசந்தா கந்தசாமியின் கிரீடத்தில் இடம்பிடித்திருக்கும் மற்றொரு ஒளி வைரம் கல்பனா சாவ்லா விருது!

வசந்தா கந்தசாமி

தொலைக்காட்சிப் பெட்டி, டேப்-ரிகார்ட்டர் என்று எந்தவிதமான பொழுதுபோக்கு சாதனங்களும் இல்லை. திரும்பிய பக்கமெல்லாம் வீடு முழுவதும் நிறைந்திருக்கும் புத்தகங்களை எப்போதும் (சு)வாசித்துக்கொண்டும் இருக்கிறார், சென்னை, ஐ.ஐ.டியில் கணிதத் துறையில் உதவிப் பேராசிரியராக இருக்கும் வசந்தா கந்தசாமி. உயர் கல்வித் துறையில் சமூக நீதிக்காக தொடர்ந்து போராடி வருவதற்காக, தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருதைப் பெற்றிருக்கும் “எண்களின் ராணி’ வசந்தா கந்தசாமியுடன் உரையாடியதிலிருந்து…

விருதைப் பெற்றபோது எப்படி உணர்ந்தீர்கள்?

கணிதத் துறையில் நான் செய்திருக்கும் சாதனைகளுக்காகப் பெற்ற எந்த விருதையும் விட, சமூக நீதிப் பணிகளுக்காகப் பெற்றிருக்கும் தமிழக அரசின் இந்த விருதை மிகவும் பெருமையாக நினைக்கிறேன். இந்த விருதின் மூலம் என்னுடைய பணிகள் இன்னமும் கூர்மையாகும்.

விருது பெற்றபோது…

தங்களின் வழிகாட்டுதலோடு பிஎச்.டி. ஆய்வு முடித்த மாணவர் யாருக்காவது, இந்திய அளவில் சிறப்பு கிடைத்திருக்கிறதா?

கணிதத் துறையில் ஆய்வு (பிஎச்.டி) செய்வதற்காக 1997ம் வருஷம், விருதுநகரிலிருந்து கண்ணன் என்ற தலித் மாணவர் வந்திருந்தார். பெரும் போராட்டத்துக்குப் பிறகே ஐ.ஐ.டி.யில் அவருக்கு இடம் கிடைத்தது. மூன்று ஆண்டுகளுக்குப் பின்பு அந்த தலித் மாணவர் கண்ணன், டில்லியில் நடந்த அறிவியல் மாநாட்டிற்கு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார். அறிவியல் துறைக்குப் பெரிய நிறுவனமாக உள்ள “இண்டியன் நேஷனல் சயின்ஸ் காங்கிரஸ்’ மாநாடு, அந்த ஆண்டு தலைநகரான தில்லியில்தான் நடந்தது. ஒவ்வோர் அறிவியல் துறை சார்ந்தவர்களிடமும் ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் பெற்று, அதை எழுதியவர்களின் பெயர்களை நீக்கிவிட்டு தனிப்பட்ட குழுவின் பரிசீலனைக்கு அனுப்புவார்கள். அந்த ஆண்டு 38 பேர் ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பித்ததில், சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் பரிசைப் பெற்றது, தலித் மாணவன் கண்ணனின் கட்டுரைதான். போட்டியில் பங்கேற்ற மற்ற 37 பேருமே பெரிய பெரிய கல்வி நிறுவனங்களில் பேராசிரியராக இருப்பவர்கள் என்பதுதான் இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்! என்னிடம் பி.எச்.டி. முடித்த 15 மாணவர்களில் பெரும்பான்மையானவர்கள், முதல் தலைமுறை படிப்பாளிகள். அவர்களின் பெற்றோர்கள் டீக்கடை வைத்திருப்பவர்கள், சலூன் கடை நடத்துபவர்கள் இப்படித்தான்.

நீங்கள் எழுதியிருக்கும் புத்தகங்கள் அனைத்துமே உங்களின் கணிதத் துறையைச் சார்ந்தது மட்டும்தானா?

பெரும்பான்மையானவை கணிதத் துறையைச் சார்ந்தவை. அதிலும் கணிதத் துறையைப் பயன்படுத்தி மற்ற துறையில் இருப்பவர்களுக்கும் பயனளிக்கக் கூடிய புத்தகங்கள். சாட்டிலைட்டை இயக்குவதற்கும் கணிதம் பயன்படும், சமூகத்தில் எயிட்ஸôல் பாதிக்கப்பட்ட மக்களின் உணர்ச்சிகளைச் சொல்வதற்கும் கணிதம் பயன்படும்.

எயிட்ஸôல் பாதிக்கப்பட்டவர்களுக்காக எழுதியிருக்கும் புத்தகங்களைப் பற்றிச் சொல்லுங்களேன்?

தமிழ்நாடு எயிட்ஸ் கட்டுப்பாட்டு மையத்தின் உதவியோடு இரண்டு ஆராய்ச்சிப் புத்தகங்களை ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறேன். பணியின் காரணமாக ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்பவர்களிடையே எயிட்ஸின் தாக்குதலுக்கு உள்ளானவர்களைப் பற்றிய புத்தகம் கர்ஸ்ங் கண்ச்ங் கன்ள்ற் கர்ள்ள். இந்தப் புத்தகத்தில், பணியின் காரணமாக இடம் பெயர்ந்த எயிட்ஸ் தாக்குதலுக்கு உள்ளான 101 பேரின் உணர்வுகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இன்னொரு புத்தகம், எயிட்ஸ் தாக்குதலுக்கு ஆளான பெண்களைப் பற்றியது. இதன் பெயர் ரர்ம்ஹய் ரர்ழ்ந் ரர்ழ்ற்ட் ரர்ம்க்ஷ. இதிலும் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களின் உணர்ச்சிகள், கணித முறையில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. உணர்வுகளை எண்களில் பதிவு செய்ய முடியாது. நோயின் தாக்குதலை முதன்முதலாக அறிந்த தருணத்தில்…அதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் தருணத்தில்…சமூகம் அவர்களை ஒதுக்கி வைத்திருக்கும் தருணத்தில் அவர்களின் உணர்ச்சிகள் எவ்வாறெல்லாம் இருந்தன என்பதை, விளக்கமாக அறிந்துகொள்ள இந்தப் புத்தகம் உதவும். எண்ணற்ற கேள்விகளில், தேவையானவற்றை மட்டும் பாதிக்கப்பட்டவர்களிடம் கேட்டு, அந்தக் கேள்விகளுக்கு அவர்கள் வெளிப்படுத்தும் மெüனம், கோபம், விரக்தி போன்ற உணர்ச்சிகளைப் பட்டியலிடுவதன் மூலம், எயிட்ஸ் தொடர்பான மருத்துவ ஆராய்ச்சிக்கு இது பயன்படும். கணிதத்தின் மூலம் இப்படி கணிக்கப்படும் முறைக்கு “ஃபஸ்ஸி தியரி’ (ஊன்க்ஷ்க்ஷ்ஹ் பட்ங்ர்ழ்ஹ்) என்று பெயர்.

இரண்டு புத்தகத்திற்காக நிறைய கள ஆய்வுகளைச் செய்திருப்பீர்கள். இந்த ஆய்வுகளின் மூலம் நீங்கள் வெளிப்படுத்தியிருக்கும் விஷயங்கள் என்ன?

பணியின் காரணமாக இடம்பெயர்பவர்களில் பெரும்பாலும் ஆண்களே எயிட்ஸின் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். அதிலும் பெரும்பாலானவர்கள் வாகன ஓட்டுனர்களாகவும், கடினமான தொழில் செய்பவர்களாகவுமே இருக்கிறார்கள்.

நிறைய ஆண்களுக்கு தங்களின் ஆண்மையின் மேல் அளவுக்கதிகமான நம்பிக்கை. நாம் என்ன செய்தாலும், எப்படிப்பட்ட தவறான உறவு வைத்துக் கொண்டாலும் அதனால் நமக்கு ஒன்றுமே ஆகாது என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தது. எயிட்ஸôல் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகள் பல பேருக்கு இப்படி ஓர் எண்ணம் இருப்பது தெரிந்தது. அதேபோல் அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு தங்களின் குடும்பத்தில் பெரிதாக அக்கறை இல்லை. சம்பாதிக்கும் “ஆம்பிளை’ என்கிற திமிர். தான் வாழும் உறவு சனங்களிடையே பொறுப்பில்லாமை, கெட்ட சகவாசம் அதன் காரணமாக பழகும் கெட்ட பழக்கவழக்கங்கள், வறுமை இவையே அவர்கள் எயிட்ஸôல் பாதிக்கப்படுவதற்கு பெரிதும் காரணமாக இருந்திருக்கின்றன. நோய் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் பெரும்பாலும் 31-34 வயதுக்குட்பட்டவர்களாகவே இருந்தார்கள். அதாவது முறைகேடான பாலியல் உறவில் அவர்கள் 21-24 வயது இருக்கும்போது ஈடுபட்டதன் விளைவே நோய்த்தாக்குதலுக்குக் காரணம்.

பெண்களைப் பொறுத்தவரை 90 சதவிதத்தினர் தங்களின் கணவரின் மூலமாகவே எயிட்ஸ் நோய்க்கு ஆளாகியிருக்கிறார்கள்.

“ஃபஸ்ஸி தியரி’யை எளிமையாக புரிந்துகொள்வது எப்படி? வேறு எந்தவிதமான ஆராய்ச்சிக்கு இந்த தியரியைப் பயன்படுத்தியிருக்கிறீர்கள்?

ஃபஸ்ஸி தியரியை, ஒன்பதாவது, பத்தாவது வகுப்பில் நீங்கள் படித்திருக்கும் நிகழ்தகவின் (டழ்ர்க்ஷஹக்ஷண்ப்ண்ற்ஹ்) விரிவான நிலை எனக் கூறலாம். ஒரு நாணயத்தை சுண்டிவிட்டால், “பூ’வாகவோ “தலை’யாகவோதான் விழக்கூடும். ஆனால் மிகவும் அரிதாக நாணயம் இப்படியும் விழாமல், அப்படியும் விழாமல் நடுவில் நின்றால்…அதுதான் “ஃபஸ்ஸி லாஜிக்’. இந்த லாஜிக்கைப் பயன்படுத்தி, சாட்டிலைட்டிலிருந்து தகவல்களைப் பெறும் கோடிங் ஆராய்ச்சிகளைக் கூட, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்திற்காகச் செய்து தந்திருக்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

 
%d bloggers like this: