Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

LTTE’s Airforce starts Flight Attacks

Posted by Snapjudge மேல் ஓகஸ்ட் 11, 2006

தரவைப் பகுதியில் விமானத் தாக்குதல்

மட்டக்களப்பில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி
மட்டக்களப்பில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி

இலங்கையின் வடக்கே யாழ்குடா நாட்டில் முகமாலைப் பகுதியில் இராணுவத்தினர் ஒரு படை முன்நகர்வை மேற்கொண்டுள்ளதாகவும், தங்களின் பகுதிகளை நோக்கி கடும் பீரங்கித் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகவும், விடுதலைப் புலிகளின் இராணுவ விவகாரங்களுக்கான பேச்சாளர் இளந்திரையன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் தரவை பகுதியில் உள்ள தங்களின் முகாம் ஒன்றின் மீது இலங்கை விமானப் படை விமானங்கள் தாக்குதல் நடத்தியதாகவும் இதில் ஆட்சேதங்கள் குறித்து கூடுதலான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை எனவும் இளந்திரையன் தெரிவித்தார்.

இதேவேளை, அரச படைகள் தாமாக படை முன்நகர்வை மேற்கொண்டு தாக்குதல் நடத்தியாகக் கூறப்படுவதை மறுத்த இலங்கை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தங்களுடைய படை நிலைகள் தாக்கப்பட்டதாகவும், அவற்றைப் பாதுகாக்கவே தாங்கள் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்தார்.

தரவை மீது தாக்குதல்
தரவை மீது தாக்குதல்

படையினரின் நடவடிக்கையின் ஒட்டு மொத்த நடவடிக்கையில் குறிக்கோள் என்ன என்பதற்குப் பதிலளித்த கெஹலிய ரம்புக்வெல்ல, அவர்கள் சில பகுதிகளைத் தாக்கும் போது நாங்கள் எங்களின் பகுதிகளைப் பாதுகாக்க வேண்டும். எங்களின் படைகளின் மீது தாக்குதல் நடத்தப்படும் போது நாங்கள் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றார்.

மேலும், எங்களுடைய முதலாவது நோக்கம் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்துவதை முன் கூட்டியே தவிர்ப்பது, மேலும் நிலைகளை பலப்படுத்துவது ஒரு நோக்கம் இரண்டாவது நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பது என்றார் இலங்கை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல.

போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் சார்பில் பேசவல்ல அதிகாரி ராபர்ட் நீல்சனிடம் முகமாலையில் நடந்து வரும் மோதல்கள் குறித்து கேட்ட போது, ‘இலங்கையின் வடக்கே யாழ் குடா பகுதியில் கிளாலி, முகமாலை மற்றும் நாகர் கோயில் பகுதியில் பீரங்கித் தாக்குதல் நடத்தப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதுதான் எங்களுக்கு தெரியும். அங்கு குண்டு தாக்குதல்கள் ஷெல் அடிப்பது நடக்கிறது.. இதை யார் ஆரம்பித்தது என்பது எங்களுக்கு தெரியாது. யார் இப்போது தாக்குதல் நடத்துகின்றனர் என்பதும் எங்களுக்குத் தெரியாது. பீரங்கித் தாக்குதல்கள் அப்பகுதியில் நடப்பதாக ஒரு அரை மணி நேரத்துக்கு முன்பு எங்களுக்கு தகவல் கிடைத்தது’ என்று தெரிவித்தார்.

Sorry, the comment form is closed at this time.

 
%d bloggers like this: