Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Archive for ஜூலை 31st, 2006

Religions, Beliefs, Castes as Societal Ills

Posted by Snapjudge மேல் ஜூலை 31, 2006

மதமும் மருந்தும் ஒரு சாதி

நெல்லை சு. முத்து

மதம் மனிதனுக்கு நான்கு வகைகளில் உதவுகிறது என்று கருதுகிறார் உடலியங்கியல் நிபுணர் ராபின் டன்பர்.

முதலாவது, ஆண்டவன் இந்தப் பிரபஞ்சத்தை உருவாக்கி ஆட்டிப் படைக்கிறான் என்கிற இறையாண்மை நம்பிக்கை. இரண்டாவதாக, இந்த உலகின் சகல துயரங்களிலிருந்தும் விடுதலை தருகிறான் அல்லது மனசாந்தி அருள்கிறான் என்னும் ஆன்மிக நம்பிக்கை. மூன்றாவதாக, சமூக வாழ்க்கைக்கு உகந்த ஒழுக்க நெறி காட்டுகிறது மதம் எனும் நன்னம்பிக்கை. நான்காவதாக, மதம் என்பது தன்னை ஒருவகைக் குழுவின் அங்கத்தினர் என்ற பாதுகாப்பு உணர்வு வழங்குகிறது. இன நம்பிக்கை, இதுவே மனித மனங்களை ஒட்ட வைக்கும் பசை மாதிரியாம்.

எமில் துர்ஹீம் (உம்ண்ப் ஈன்ழ்ட்ங்ண்ம்) எனும் விஞ்ஞானியின் கருத்துப்படி, இந்தப் பசையே சமுதாயத்தை ஒன்றிணைக்கிறதாம். இதற்குக் காரணம் – மூளைக்குள் இயற்கையாகச் சுரக்கும் “எண்டார்ஃபின்கள்’ (ங்ய்க்ர்ழ்ல்ட்ண்ய்ள்) என்னும் போதைச் சத்து, மனவலியைப் போக்கக் கூடியது.

குத்து விளக்கைச் சுற்றி வட்டமடித்துக் கும்மி அடிப்பது, உட்கார்ந்தபடி பஜனைகளில் கைகொட்டி சாய்ந்து ஆடுவது, மண்டி இட்டு ஆண்டவனிடம் பேரம் பேசுவது, பாசி மாலை அல்லது உத்திராட்சம் உருட்டுவது, ஆசனம் அது இது என்று பல்வேறு உடல் அசைவுகள் எல்லாம் எண்டார்ஃபின் தூண்டலுக்கான வேண்டுதல்கள். இத்தகைய செயல்களின்போது எண்டார்ஃபின்கள் கூடுதல் உற்பத்தி ஆவதால்தான் மதங்கள் மனிதனுக்கு மன வலிமை சேர்க்கிறது என்கிறார் இவர்.

அன்றியும் பாருங்கள், பெரும்பாலும் ஆன்மிகச் சிந்தனையாளர்கள் பொதுவாகவே, கொஞ்சம் அதிக சந்தோஷத்துடன் நீண்ட நாள் வாழ்கிறார்கள். அவர்கள் மூளையில் எண்டார்ஃபின்கள் பெருக்கெடுக்கிறதோ என்னவோ? நேர்மறைச் சிந்தனைக்கும் மதம் காரணம் என்கிறார்கள். தீவிரவாதிகளிடம் இந்த எண்டார்ஃபின் அளவுக்கு அதிகமாகச் சுரப்பதால் மதம் ஒரு போதை மருந்தாகவே மாறி விடுகிறது.

சரி, மத உணர்வின் ஆரம்பம் எது? ஆதி காலத்தில் மதம் கிடையாது. ஆனால் மார்க்கம் இருந்தது. வாழ்க்கை நெறி இருந்தது. சம்பிரதாயங்கள் இருந்தன. இவை யாவும் பிற்காலத்தில் சடங்குகள் ஆக மாறி மதத்தோடு ஒன்றிவிட்டன.

பக்தி மனதுக்கு இதமூட்ட வல்ல அகவய விஷயம் என்று மேனாட்டு விஞ்ஞானிகள் ஒத்துக் கொள்கின்றனர். இன்று எதிர்மறை விளைவுகள் நடக்கிறது என்றால் அதற்குக் காரணம் நீங்கள் கடைப்பிடிக்கும் மதம் அல்ல, உங்களைப் பிடித்த “மதம்’. கட்டுப்படுத்துவது சிரமம்.

ஆண்டவனுக்கு ஏன் வழிபாடுகள்? “”இறைவன் விரும்புகிறார் என்று நம்புகிறேன்” என்பீர்கள். இந்தக் கேள்வியைப் புரிந்து கொள்ள முதலில் மனக்கோட்பாடு (பட்ங்ர்ழ்ஹ் ர்ச் ம்ண்ய்க்) பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். தத்துவஞானிகள் இதனை “இரண்டாம் நிலைக் குறிக்கோள்’ (ள்ங்ஸ்ரீர்ய்க்-ர்ழ்க்ங்ழ் ண்ய்ற்ங்ய்ற்ண்ர்ய்ஹப்ண்ற்ஹ்) என்கிறார்கள். நான் நம்புகிறேன் என்றும், கடவுள் விரும்புகிறார் என்றும் இரண்டு நிலைகள். அதாவது இறைவன் என்கிற இன்னொரு இரண்டாம் நபரின் மனநிலையை நாம் புரிந்து கொண்டதாகக் கருதுகிறோம். அது முடிகிற சமாசாரமா?

மூன்றாம் நிலை “”நாம் நல்லவை செய்ய வேண்டும் என்பதே ஆண்டவன் விருப்பம் என்று நம்புகிறேன்”. இதுதான் “தனிநபர் மதம்’ (டங்ழ்ள்ர்ய்ஹப் ழ்ங்ப்ண்ஞ்ண்ர்ய்). அதேவேளையில் “”நாம் அறம் செய்ய வேண்டும் என்பது ஆண்டவன் விருப்பம் என்று நீ நம்ப வேண்டுகிறேன்”. இது நான்காம் நிலை “சமூக மதம்’ (ள்ர்ஸ்ரீண்ஹப் ழ்ங்ப்ண்ஞ்ண்ர்ய்). அதையும் தாண்டி, “”நாம் அறம் செய்ய வேண்டும் என்பது ஆண்டவன் விருப்பம் என்று நாம் நம்புவதை நீ அறிந்து கொள்ள வேண்டும்”. இதுவே ஐந்தாவதான “குழு அல்லது இனச்சார்பு மதம்’ (ஸ்ரீர்ம்ம்ன்ய்ஹப் ழ்ங்ப்ண்ஞ்ண்ர்ய்).

இந்த மத உணர்வின் மூலஸ்தானம் நெற்றி மூளையின் (ச்ழ்ர்ய்ற்ஹப் ப்ர்க்ஷங்) சாம்பல் நிறப்பகுதி. விலங்குகளிடம் மதம் என்பது முதல் நிலையிலேயே தேங்கிவிட்டது.

பெரும்பாலான மனித நடவடிக்கைகள் மத நம்பிக்கையின் இரண்டாம் அல்லது மூன்றாம் நிலையிலே நின்று விடுகின்றன. அவரவர் மனங்களில் தனித்தனி மதங்கள். “அயலானை நேசி. ஆனால் வேலியை அகற்றிவிடாதே’ என்று உபதேசித்த ஒவ்வொரு சன்னியாசிக்கும், துறவிக்கும், ஆன்மிகவாதிக்கும் அவரவர் பெயரில் தனித்தனி மதங்கள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம்.

அன்பு அடிப்படை மதங்களை நம்புவோர் கொலைத் தொழிலில் ஈடுபட என்ன காரணம்? நாம் எதையாவது நம்பும்போது மூளைக்குள் நடப்பது என்ன? விளையனூர் ராமச்சந்திரன் எழுப்பிய விஞ்ஞானக் கேள்வி இது.

இவர் இன்று கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் நரம்பியல் நிபுணர். “நம்பிக்கைக் கோளாறுகள்’ (க்ண்ள்ர்ழ்க்ங்ழ்ள் ர்ச் க்ஷங்ப்ண்ங்ச்) குறித்த ஆய்வில் கில்லாடி..

நம்பிக்கைக்கு இரண்டு பரிமாணங்கள் உண்டாம். ஒன்று அறிவு சார்ந்தது. பகுத்து அறிவதும், பகுத்து ஆய்வதும். இன்னொன்று உணர்வுப்பூர்வமானது. முன்னது “உறுதியாக அலசி ஆராய்ந்த அறிவுசார் நம்பிக்கை’ விவகாரம். பின்னது “எனது எந்தவித நம்பிக்கையிலும் குறுக்கிட உனக்கு உரிமையில்லை’ என்கிற உணர்ச்சி வில்லங்கம்.

அதனால்தான் மனிதன் நம்பிக்கையை உணர்கிறானே, அன்றி அது பற்றிச் சிந்திப்பது இல்லை. உயிரியல் ரீதியில் நம்பிக்கை உணர்வை விளக்குவதும் சிரமம். ஆனால் இத்தகைய இன்னொரு விஷயமும் இருக்கிறது. அதுதான் மருந்து. ஏறத்தாழ எல்லா வகையிலும் கடவுள் நம்பிக்கை மாதிரிதான் மருந்து நம்பிக்கை என்கிறார் அலிசன் மோத்லக் (அப்ண்ள்ர்ய் ஙர்ற்ப்ன்ந். டஹழ்ற்ண்ஸ்ரீப்ங்ள் ர்ச் ஊஹண்ற்ட். சங்ஜ் நஸ்ரீண்ங்ய்ற்ண்ள்ற். 28-01-2006).

எந்த நோய்க்கும் உரிய மருந்து தராமல், தந்துவிட்டதாக நோயாளியை நம்ப வைத்துக் குணப்படுத்தும் முறையை ஜான்-கார் ஸþபியட்டா (ஒர்ய்-ஓஹழ் ழன்க்ஷண்ங்ற்ஹ) ஆராய்ந்தார். ஆன் ஆர்பர் நகரில் மிக்சிகன் பல்கலைக் கழகப் பேராசிரியர். இவர் 14 ஆரோக்கியவான்களைத் தேர்ந்து எடுத்து அவர்கள் தாடையில் வலியூட்டும் மருந்து செலுத்தினார்.

அந்தச் செயற்கை வலியைப் போக்குவதாகக் கூறி அவர்களுக்கு ஊசி மருந்து ஊட்டினார். “அட வலி போயோ போச்சு’ என்று ஆனந்தப்பட்டனர் சிலர். “என்ன சாமி, இதுக்கு நாட்டுக் கஷாயமே மேல். வலி பிராணன் போகுது’ என்று துடித்தனர் ஏனையோர். உண்மையில் இந்த இரு பிரிவினர்க்கும் கட்சிபேதம் பாராமல் வழங்கியது ஒரே உப்புத்தண்ணீர்.

இருந்தாலும் அனைவரின் மூளையையும் “பொசிட்ரான் உமிழ்வு பகுப்பாய்வு’ (டர்ள்ண்ற்ழ்ர்ய் உம்ண்ள்ள்ண்ர்ய் பர்ம்ர்ஞ்ழ்ஹல்ட்ஹ்) முறைப்படி கவனித்தார். நோய் குணம் அடைந்ததாக நம்பிய பேர்வழிகளின் மூளையில் “எண்டார்ஃபின்கள்’ பிரவாகம்!

இப்படி மருந்தே இல்லாத மருத்துவ முறை “பிளாசிபோ’ (டப்ஹஸ்ரீங்க்ஷர்) எனப்படும். லத்தீன் மொழியில் “நான் உன்னை சந்தோஷப்படுத்துகிறேன்’ (ஐ ள்ட்ஹப்ப் ல்ப்ங்ஹள்ங்) என்று அர்த்தம். கடவுள் நம்பிக்கையும் இந்த மாதிரிதான் என்று கருதுகிறார் டீன் ஹேமர் (ஈங்ஹய் ட்ஹம்ங்ழ்); மேரிலாந்தில் பெத்தெஸ்டா எனும் இடத்தில் அமெரிக்கத் தேசிய மருத்துவ நிறுவனப் பேராசிரியர். “கடவுள் மரபணு’ (எர்க் எங்ய்ங்) என்ற தனி நூலே எழுதி உள்ளார்.

நம்பிக்கை, கடவுளிடமோ மருந்திடமோ எதுவானாலும், மூளைக்குள் நடக்கும் நரம்பணுக் கடத்திகளின் திருவிளையாடல். பொதுவாக, ஆன்மிகச் சிந்தனைக்கும் மூளையில் அடங்கிய டோப்பாமின் (ஈர்ல்ஹம்ண்ய்ங்), செரோட்டினின் (நங்ழ்ர்ற்ண்ய்ண்ய்) ஆகிய உணர்வுக் கடத்திகளின் அருளே காரணம். ஆயின், இவற்றை ஒழுங்குபடுத்துவது “விமாட்-2′ (யஙஅப2) என்கிற மரபணுப் புரதம்.

ஏதாயினும் மதமே இல்லாத மதம் வளர்ப்போம்.

Posted in Analysis, Caste, Cocaine, Evils, Medicine, Op-Ed, Panacea, Religion, Society, Tamil | Leave a Comment »

South Indian Film Chamber Election – Results

Posted by Snapjudge மேல் ஜூலை 31, 2006

நடிகர் சங்கத் தேர்தலில் சரத் அணி ஒட்டுமொத்த வெற்றி

சென்னை, ஆக. 1: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணியினர் ஒட்டுமொத்தமாக வெற்றி பெற்றுள்ளனர்.

தி. நகர் நடிகர் சங்க வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 6 மணி தேர்தல் வரை நடைபெற்றது. தபால் வாக்குகள் உள்பட மொத்தம் 1396 வாக்குகள் பதிவாகின.

ஞாயிறு இரவு 7 மணி முதல் திங்கள்கிழமை காலை 7 மணி வரை வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

செயலாளராக ராதா ரவி தேர்ந்தெடுக்கப்பட்டார். ராதா ரவிக்கு 992 வாக்குகளும் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மன்சூர் அலி கானுக்கு 235 வாக்குகளும் கிடைத்தன.

துணைத் தலைவர்களாக நடிகை மனோரமா, நடிகர் விஜயகுமார் இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மனோரமாவுக்கு 1084 வாக்குகளும், விஜயகுமாருக்கு 958 வாக்குகளும் கிடைத்தன.

பொருளாளராக கே.என். காளை தேர்ந்தெடுக்கப்பட்டார். காளைக்கு ஆதரவாக 720 வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட நல்லதம்பிக்கு 582 வாக்குகளும் கிடைத்தன.

24 செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 46 பேர் போட்டியிட்டனர். இதில் சரத்குமார் அணி சார்பாக போட்டியிட்ட 24 பேரும் வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்றவர்கள்; அவர்கள் பெற்ற வாக்குகள் (அடைப்புக்குறிக்குள்):

1. முரளி (862)

2. சார்லி (849)

3. சத்யராஜ் (848)

4. சிலம்பரசன் (842)

5. அலெக்ஸ் (829)

6. ஸ்ரீபிரியா (810)

7. அப்பாஸ் (795)

8. செந்தில் (786)

9. பிரவீண்குமார் (773)

10. ஏ.கே.ராஜேந்திரன் (765)

11. பிரஷாந்த் (745)

12. ஸ்ரீகாந்த் (734)

13. “பசி’ சத்யா (722)

14. கே.ஆர்.செல்வராஜ் (704)

15. குண்டுகல்யாணம் (703)

16. ஆர்.வீரமணி (693)

17. மும்தாஜ் (693)

18. சி.எஸ்.பி.கண்ணன் (686)

19. ஏ.கே.வேணு (686)

20. ரங்கசாமி (681)

21. ஜெய்சீதாராமன் (664)

22. விந்தியா (654)

23. எம்.ராஜேந்திரன் (644)

24. ராஜ்குமார் (632)

புதிய நிர்வாகிகள் வரும் 4-ம் தேதி பதவியேற்கின்றனர்.

Posted in Actors, Actresses, Dinamani, Election, Kollywood, Sarathkumar, South India, Tamil | Leave a Comment »

Delhi Tamil Sangam – Office Bearers Election

Posted by Snapjudge மேல் ஜூலை 31, 2006

தில்லி தமிழ்ச் சங்க புதிய நிர்வாகிகள்

புதுதில்லி, ஆக. 1: தில்லி தமிழ்ச் சங்கத்தின் புதிய தலைவராக மூத்த வழக்கறிஞர் எம்.என். கிருஷ்ணமணி, பொதுச் செயலராக ஆர். முகுந்தன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இச் சங்கத்தின் தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கடும் போட்டிக்கு இடையே, முகுந்தன் கோஷ்டியினர் முக்கிய பதவிகளைப் பிடித்தனர்.

தலைவர் – எம்.என். கிருஷ்ணமணி, துணைத் தலைவர் – எஸ். துரை, பொதுச் செயலர் – ஆர். முகுந்தன், இணைச் செயலர்கள் – ரமாமணி சுந்தர், பி. ராகவன், பொருளாளர் – என். சந்தானம், இணைப் பொருளாளர் – பி.அறிவழகன்.

நிர்வாகக் குழு உறுப்பினர்கள்: ஜோதி பெருமாள், சீதாலட்சுமி ராமச்சந்திரன், ஆர்.வி. சாரி, கே.வி.கே. பெருமாள், கே. கணேசன், எஸ். நரசிம்மமூர்த்தி, கே.ஆர். வெங்கடேசன், கே.எஸ். முரளி, கே. உலகநாதன் மற்றும் எஸ். குருமூர்த்தி.

குழு உறுப்பினர்கள்: எஸ். நாராயணன் மற்றும் கே. சேனாபதி.

Posted in Delhi, New Delhi, Tamil, Tamil Sangam | 13 Comments »

IIT Admissions : SC/ST Seats are unfilled

Posted by Snapjudge மேல் ஜூலை 31, 2006

ஐஐடிக்களில் எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினருக்கு ஒதுக்கிய இடங்கள் பல காலியாக உள்ளன

புதுதில்லி, ஆக 1: மத்திய அரசின் உயர்திறன் கல்வி நிறுவனங்களில், இட ஒதுக்கீட்டை அதிகரிக்க அரசு முனைந்துள்ளது. ஆனால் ஐஐடிக்களில், ஷெட்யூல்டு வகுப்பு மற்றும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த இடங்கள் பல காலியாகவே உள்ளன.

இத்தகவலை மத்திய மனிதவளத் துறை இணை அமைச்சர் எம்.ஏ.ஏ.ஃபாத்மி மாநிலங்களவையில் திங்கள்கிழமை தெரிவித்தார்.

ஐஐடி நிறுவனங்களின் முதுநிலைப் படிப்புகளில், 15 சத இடங்கள் ஷெட்யூல்டு வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. பழங்குடியினருக்கு 7.5 சத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 2005-06 கல்வியாண்டில், இவற்றில் முறையே 11.91 சதம் மற்றும் 3.95 சத இடங்கள்தான் நிரப்பப்பட்டிருந்தன. மீதி இடங்கள் காலியாகவே இருந்தன.

கடந்த ஆண்டு மட்டுமல்லாமல் பல ஆண்டுகளாகவே இதே நிலைதான் நீடிக்கிறது. இதற்குப் பல்வேறு சமுதாய, பொருளாதாரக் காரணங்கள் உள்ளன என்றார் அவர்.

ஐஐடி படிப்புகளில் சேருவதற்காக நுழைவுத் தேர்வு திருத்தி அமைக்கப்பட்ட பிறகு, முதல் முயற்சியிலேயே தேர்வு பெறும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

இந்தப் புதிய திட்டத்தின் கீழ் பொதுப்பிரிவில் விண்ணப்பிக்கும் மாணவிகளிடம் 50% சதவீதக் கட்டணம்தான் வசூலிக்கப்படுகிறது. மாணவிகளின் தேர்ச்சி எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 2005-ம் ஆண்டு, 29 ஆயிரம் மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். 2006-ல் இந்த எண்ணிக்கை 59 ஆயிரமாக உயர்ந்துள்ளது.

மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் அதிகரிப்பு: அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் கவுன்சில் (ஏஐசிடிஇ) தொழில் நுட்பக் கல்லூரிகளில் இந்த ஆண்டு கூடுதலாக 42 ஆயிரம் மாணவர்களைச் சேர்க்க அனுமதியளித்துள்ளது.

நாடு முழுவதுமுள்ள 529 தொழில் நுட்பக் கல்லூரிகளில் 42 ஆயிரத்து 277 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக 36 ஆயிரத்து 111 இடங்கள் பொறியியல் மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

இதற்கேற்ப, தொழில்நுட்பக் கல்வி பயில விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது என்று அவர் கூறினார்.

Posted in Admissions, Engineering, IIT, Reservations, SC/ST, Tamil | 2 Comments »

Thisaigal – August Issue – Independence Special

Posted by Snapjudge மேல் ஜூலை 31, 2006

திசைகள் ஆகஸ்ட் இதழில்

திசைகள் ஆகஸ்ட் இதழில்

பங்கு பெறும் எழுத்தாளர்கள் :

தனிமனித சுதந்திரம் பற்றிய இந்த இதழில் தடைகளை வென்ற மனிதர்கள் நம்முடன் தம் அனுபங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

எழுத்தாளர் கிருஷ்ணாவின் தாயாரை நேர் காணல் காணுவது சென்னையிலிருந்து மதுமிதா.

லிவிங் ஸ்மைல் வித்யா சென்னையிலிருந்து தன் கட்டுரையின் மூலம் சமூகத்திற்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறார்.

ஏழை விவசாயி குடும்பத்திலிருந்து முன்னுக்கு வந்த ஆறுமுகத்தை நமக்கு அறிமுகப்படுத்துவது கடலூர் நடேசன்.

இவர்களுடன் இன்னும் தனிமனித சுதந்திரம் பற்றி தங்கள் கருத்துக்களை முன் வைப்பவர்கள்,

அலாஸ்காவிலிருந்து தங்கமணி,

நியூஜெர்ஸியிலிருந்து தமிழ்சசி, மற்றும்

கல்கத்தாவிலிருந்து நிர்மலா.

சிறுகதைகள் பங்களிப்பு செய்திருப்பவர்கள், இங்கிலாந்திலிருந்து நிலா, சிங்கப்பூரிலிருந்து ரம்யா நாகேஸ்வரன் மற்றும் சென்னையிலிருந்து டி.எஸ்.பத்மநாபன்.

கவிதைகள் தருபவர்கள், பன்னீர்செல்வம், கவிநயா, ஜெஸீலா, கே. மாதங்கி, நாகு, ஸ்ரீனி, மற்றும் சிலம்பூர் யுகா.

அண்டை, அயல் பகுதியில் லிலியன் பார்டன் என்பவர், 2006, ஜூலை 24 ந் தேதியிட்ட நியூயார்க்கர் இதழில் தான் வாழ்ந்த நியூயார்க் பற்றி எழுதியதன் மொழிபெயர்ப்பு இடம் பெறுகிறது.

இணையத்தில் தமிழ் இந்த அளவு பிரமாதமாக பவனி வருவதற்கு உமர் தம்பியின் யூனிகோட் முயற்சிகள் ஒரு பெரும் காரணம். அவர் மறைந்தது தமிழ் கணினி வளர்ச்சிக்கு ஒரு பெரும் இழப்பு. அவருடனான தன் தொடர்புகளை நினைவு கூறுகிறார் சுரதா யாழ்வாணன்.

புத்தகம் பகுதியில் டாக்டர் என். நடேசன் எழுதிய ”வண்ணாத்திக்குளம்” புத்தகம் பற்றி தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்பவர் லண்டனிலிருந்து ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். சினிமாப் பகுதியில் சுப்பிரபாரதி மணியன்.

போதிமரத்தில் வினோபா பாவேவின் உரைகளிலிருந்து ஒரு துளி.

சிறந்த வாசிப்பு அனுபவத்தை இது உங்களுக்கு அளிக்கும் என்று நம்புகிறேன். உங்கள் கருத்துக்களையும் விவாதங்களையும் “திசைகள் அரங்கில்” வரவேற்கிறோம்.

அன்புடன்

அருணா சீனிவாசன்.

Posted in Aruna Srinivasan, e-zine, ezine, Independence, Issue, magazine, Tamil, Thisaigal, Writers | 3 Comments »

CBI vs Jayalalitha on obtaining Gifts from Sengottaiyan & Azhagu Thirunavukkarasu

Posted by Snapjudge மேல் ஜூலை 31, 2006

ஜெயலலிதா மீது சிபிஐ வழக்கு

தமிழக எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா
தமிழக எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா

அரசு ஊழியர் தன்னுடைய பணிக்காலத்தில் தன்னுடைய பணியோடு தொடர்புடைய யாரிடமிருந்தும் எந்த ஒரு பரிசுப்பொருளையும் பெறக்கூடாது என்கிற ஊழல் தடுப்புச்சட்ட விதிகளை மீறி, 1992 ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, அப்போது அவரது அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்த செங்கோட்டையன் மற்றும் அழகு திருநாவுக்கரசு ஆகியோரிடமிருந்து ரூ. 2 கோடி ரூபாயை அன்பளிப்பாக பெற்றது தொடர்பான வழக்கில் சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வுத்துறை, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது.

முன்னாள் முதல்வரும் தற்போதைய சட்டமன்ற எதிர்கட்சித்தலைவருமான ஜெயலலிதா, மற்றும் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோர் இதில் பிரதான குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஜெயலலிதா முதல்முறையாக ஆட்சியில் இருந்தபோது, 1992ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒட்டி 89 வங்கி டிடிக்கள் எனப்படும் உடனடி பண ஓலைகள் அவருக்கு பரிசாக வந்தன. அவற்றின் மொத்த மதிப்பு 2 கோடியே 12 ருபாய்.

இந்த உடனடி பண ஓலைகளை செங்கோட்டையனும், அழகு திருநாவுக்கரசுவும் வெவ்வேறு பெயர்களில் எடுத்து பரிசு வழங்கியதாக புகார் எழுந்தது.

முதல்வராக இருந்த நிலையில் இந்த உடனடி பண ஓலை பரிசுகளை ஜெயலலிதா பெற்றுக்கொண்டது தவறு என்று, திமுக ஆட்சியில் 1996 ஆம் ஆண்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இது தவிர, ஜெயலலிதா வெளிநாட்டிலிருந்தும் பரிசு வாங்கியதாக புகார் எழுந்ததால், இந்த வழக்கை சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வுத்துறை விசாரித்தது.

இதையடுத்து ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜெயலலிதா மீது மத்திய புலனாய்வுத்துறை வழக்கு பதிவு செய்தது.

நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இந்த வழக்கில், குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் அனுமதி அளித்தது.

ஜெயலலிதா தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருப்பதால், அவர் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கு சட்டமன்ற சபாநாயகர் ஆவுடையப்பனுடைய முன் அனுமதி கோரி அவருக்கு மத்திய புலனாய்வுத்துறை கடிதம் அனுப்பியது.

இதற்கான அனுமதியை ஆவுடையப்பன் வழங்கிய பின்னணியில், இன்று சென்னையில் உள்ள மத்திய புலனாய்வுத்துறையின் சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விவரங்கள் பற்றி, மத்திய புலனாய்வுத்துறையின் வழக்கறிஞர் டேனியலின் பேட்டியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.

Posted in ADMK, Azhagu Thirunavukkarasu, BBC, CBI, Chief Minister, Corruption, Jayalalitha, Law, News, Sengottaiyan, Tamil, Tamil Nadu, TN | Leave a Comment »

Qana Massacre by Israel

Posted by Snapjudge மேல் ஜூலை 31, 2006

ெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் 34 குழந்தைகள் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் பலி

மரணமடைந்த சிறார்களில் சடலங்கள்
கானா தாக்குதலில் 34 குழந்தைகள் உட்பட பலர் பலி

தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான் குண்டு வீச்சில் 50க்கு மேற்பட்ட பொது மக்கள் பலி. அதில் பாதிக்கு மேல் குழந்தைகள், சிறுவர்கள். கானா என்ற கிராமத்தில் உள்ள 3 மாடிக் கட்டடம் மீது இஸ்ரேலியக் குண்டுகள் வீழ்ந்ததில் அந்தக் கட்டடத்தின் நிலவறைக்குள் தஞ்சம் புகுந்திருந்த கிராம மக்கள் மீது கட்டம் இடிந்து வீழ்ந்து மூடியது.

அது ஹெஸ்புல்லா பயன்படுத்தி வந்த பகுதி என்றும் அங்கிருந்து பொது மக்களை விலகும் படி தாங்கள் அறிவித்திருந்தோம் என்றும் இஸ்ரேல் கூறுகிறது. ஆனால் அங்கிருந்து வெளியேற முடியாத அளவுக்கு மக்கள் ஒன்றில் பயந்து போயிருந்தார்கள் அல்லது அங்கிருந்து வெளியேறுவதற்கான வசதிகள் அவர்களுக்கு இல்லாமல் இருந்தது என்கிறார் அப்பகுதிக்குச் சென்ற பி.பி.சி. முகவர்.

இந்தத் தாக்குதலை ஒரு கோரமான படுகொலை என்று வர்ணித்த ஹெஸ்புல்லா இதற்கு பதிலடி கிடைக்கும் என்று கூறுகிறது. எல்லைப்புற இஸ்ரேலிய நகரமான கிர்யத்திலுள்ள நமது இன்னோரு முகவர் அப்பகுதி மீது ஹெஸ்புல்லா அடித்த பல கட்டூஸா ஏவுகணைகள் இன்று வந்து வீழ்ந்தன என்கிறார்.


கானாவில் நடந்த தாக்குதலுக்கு இஸ்ரேலிய பிரதமர் வருத்தம்

இஸ்ரேலிய பிரதமர் எஹுத் ஆல்மர்ட்
இஸ்ரேலிய பிரதமர் எஹுத் ஆல்மர்ட்

கானாவில் பொது மக்கள் கொல்லப்பட்டு இருப்பதற்கு இஸ்ரேலிய பிரதமர் எகுட் ஒல்மர்ட் வருத்தம் தெரிவித்துள்ளார். ஆனால் சண்டை நிறுத்தத்தினை அறிவிக்க போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த அவரது அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

குண்டுத்தாக்குதல் தொடர்பான செய்தி பரவிய உடன், லெபனானுக்கு செல்ல திட்டமிட்டு இருந்த அமெரிக்க அரசுத்துறை செயலர் கொண்டலீசா ரைஸ் தனது பயணத்தினை ரத்து செய்துள்ளார்.

உடனடியாக, எந்தவிதமான நிபந்தனைகளும் அற்ற போர் நிறுத்தம் ஏற்படாமல், தான் எந்தவித பேச்சுவார்த்தையிலும் ஈடுபட போவதில்லை என லெபனான் பிரதமர் ஃபவுட் சினியோரா அறிவித்துள்ளார்.

ஜெருசேலத்தில் இருக்கின்ற அமெரிக்க அரசுத்துறை செயலர் கொண்டலீசா ரைஸ், அப்பாவி மக்கள் கொடூரமாக இறந்துள்ளதற்கு தனது வருத்தத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான் குண்டு வீச்சில் 50க்கு மேற்பட்ட பொது மக்கள் பலி. அதில் பாதிக்கு மேல் குழந்தைகள், சிறுவர்கள்.

கானா என்ற கிராமத்தில் உள்ள 3 மாடிக் கட்டடம் மீது இஸ்ரேலியக் குண்டுகள் வீழ்ந்ததில் அந்தக் கட்டடத்தின் நிலவறைக்குள் தஞ்சம் புகுந்திருந்த கிராம மக்கள் மீது கட்டம் இடிந்து வீழ்ந்து மூடியது.

அது ஹெஸ்புல்லா பயன்படுத்தி வந்த பகுதி என்றும் அங்கிருந்து பொது மக்களை விலகும் படி தாங்கள் அறிவித்திருந்தோம் என்றும் இஸ்ரேல் கூறுகிறது.

ஆனால் அங்கிருந்து வெளியேற முடியாத அளவுக்கு மக்கள் ஒன்றில் பயந்து போயிருந்தார்கள் அல்லது அங்கிருந்து வெளியேறுவதற்கான வசதிகள் அவர்களுக்கு இல்லாமல் இருந்தது என்கிறார் அப்பகுதிக்குச் சென்ற பி.பி.சி. முகவர்.

இந்தத் தாக்குதலை ஒரு கோரமான படுகொலை என்று வர்ணித்த ஹெஸ்புல்லா இதற்கு பதிலடி கிடைக்கும் என்று கூறுகிறது.

எல்லைப்புற இஸ்ரேலிய நகரமான கிர்யத்திலுள்ள நமது இன்னோரு முகவர் அப்பகுதி மீது ஹெஸ்புல்லா அடித்த பல கட்டூஸா ஏவுகணைகள் இன்று வந்து வீழ்ந்தன என்கிறார்


இஸ்ரேலுக்கு உலக நாடுகள் கண்டனம்

தாக்குதலுக்கு உள்ளான கானா நகரம்
கானா நகரில் தாக்கப்பட்ட கட்டிடம்

இஸ்ரேலின் இந்தத் தாக்குதலுக்கு உலகின் பல பாகங்களிலிருந்து கண்டனங்கள் வந்துள்ளன.

அந்த நாட்டுடன் ராஜதந்திர உறவு கொண்டுள்ள மிகச் சில அரபு நாடுகளுக்குள் ஒன்றான ஜோர்டனின் மன்னர் அப்துல்லா இந்தத் தாக்குதலை ஓர் அசிங்கமான குற்றச் செயல் என்றும், சர்வதேச சட்டதிட்டங்களைக் கண்மூடித்தனமாக மீறிய நடவடிக்கை என்றும் கூறியுள்ளார்.

லெபனானிலுள்ள ஐ.நா. பிரதிநிதி உடனடியாக ஒரு விசாரணை தேவை என்றுள்ளர். அரபு லீக் அமைப்பும் அதே கருத்தை வலியுறுத்தியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைகளுக்குப் பொறுப்பான தலைவர் கவியே சொலனோ அவர்கள் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை எந்தக் காரணத்தாலும் நியாயப்படுத்த முடியாது என்றார்.

பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சர் பொது மக்களைக் கொல்வது சகிக்க முடியாத ஒன்று என்றதுடன் இஸ்ரேலை பொறுப்பாகச் செயற்படும் படி மீண்டும் விலியுறுத்தினார்.

பிரெஞ்சு அதிபர் ஜக் சிராக், பாலஸ்தீன அதிபர் மஃமுத் அப்பாஸ், எகிப்திய அதிபர் ஹொஸ்னி முபாரக் மற்றும் போப்பாண்டவர் ஆகியோர் உடனடியாகப் போர் நிறுத்தம் தேவை என்று அறை கூவியுள்ளனர்.

Posted in BBC, EU, Hezbollah, Israel, Jordan, Lebanon, Mid-east, News, Ohmert, Qana, Tamil, UN | Leave a Comment »

South Indian Film Chamber Elections

Posted by Snapjudge மேல் ஜூலை 31, 2006

விறுவிறுப்பான வாக்குப் பதிவு அமைதியாக நடந்த நடிகர் சங்கத் தேர்தல்

சென்னை, ஜூலை 31: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் பெரிய பிரச்சினைகள் ஏதுமின்றி அமைதியாக நடைபெற்றது.

2006-2009 பதவிக் காலத்துக்கு நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான நடிகர் சங்கத் தேர்தல் தியாகராய நகரிலுள்ள நடிகர் சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் வாக்குரிமை உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 1898. தபால் வாக்குரிமை உள்ளவர்கள் 576. வாக்குப் பதிவு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்றது.

ஆயுள் கால உறுப்பினரான ஜேப்பியார் காலை 8.10 மணியளவில் முதல் நபராக வந்து வாக்களித்தார். சரத்குமார் காலை 8.30 மணிக்கும், விஜயகாந்த் காலை 10.40 மணிக்கும் வந்து வாக்களித்தனர்.

இதைத் தொடர்ந்து நடிகர்கள் நெப்போலியன், விக்ரம், விஜய், ஸ்ரீகாந்த், பார்த்திபன், விவேக், விணுசக்கரவர்த்தி, கரண், பரத், எஸ்.வி.சேகர், திருநாவுக்கரசர் (பாஜக), ராதாரவி, சின்னிஜெயந்த், விஜயகுமார் உள்ளிட்ட பலர் வாக்களித்தனர்.

நடிகைகளில் மனோரமா, ராதிகா, ஸ்ரீபிரியா, ரேவதி, சந்தியா, எம்.என்.ராஜம், வெண்ணிற ஆடை நிர்மலா, மும்தாஜ், விந்தியா, தேஜாஸ்ரீ, மஞ்சுளா உள்ளிட்ட பலர் வாக்களித்தனர்.

சலசலப்பு:இவர்கள் தவிர வெளியூர்களில் இருந்து வந்து ஏராளமான சினிமா மற்றும் நாடக நடிகர், நடிகைகளும் வாக்களித்தனர்.

அப்போது நடிகர் சங்க வளாகத்துக்குள் வெளியூரிலிருந்து வந்தவர்களை அமர வைக்கக் கூடாது என்று பொருளாளர் பதவிக்குப் போட்டியிடும் நல்லதம்பி தெரிவித்தார்.

அவர்களும் உறுப்பினர்கள்தான்; அவர்கள் அமருவதில் தவறு ஏதுமில்லை என்று நடிகர் செந்தில் கூற அங்கு சிறு சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் சரத்குமாரும், போலீஸôரும் தலையிட்டு பிரச்சினையைப் பெரிதுபடுத்தாமல் பார்த்துக்கொண்டனர்.

நடிகர் சங்கத் தலைவரான விஜயகாந்த் இந்தத் தேர்தலில் போட்டியிடாததால் அப்பதவிக்கு நடிகர்கள் சரத்குமாரும், நாசரும் போட்டியிட்டனர்.

நாசர் திடீரென தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றதால் சரத்குமார் ஏற்கெனவே ஒருமனதாக நடிகர் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்.

சங்கத்தின் மற்ற நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க நடைபெற்ற இத் தேர்தலில் பொதுச் செயலாளர் பதவிக்கு ராதாரவி, மன்சூர் அலிகான் ஆகியோரும், துணைத் தலைவர்கள் பதவிக்கு விஜயகுமார், மனோரமா உள்ளிட்ட ஐந்து பேர் போட்டியிடுகிறார்கள்.

பொருளாளர் பதவிக்கு நல்லதம்பி, கே.என்.காளை ஆகியோர் போட்டியிடுகிறார்கள். 24 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு சத்யராஜ், பிரஷாந்த், சிலம்பரசன், அப்பாஸ், செந்தில், முரளி, ஸ்ரீபிரியா, மும்தாஜ், விந்தியா, அலெக்ஸ், சார்லி உள்ளிட்ட 46 பேர் போட்டியிடுகிறார்கள்.

சரத் அணிக்கு விஜயகாந்த் ஆதரவு: இத் தேர்தலில் சரத்குமார் அணி சார்பாக போட்டியிடும் நிர்வாகிகளுக்கு விஜயகாந்த் ஏற்கெனவே ஆதரவு தெரிவித்திருந்தார்.

தேர்தலில் சரத் அணி சார்பாக போட்டியிடும் நிர்வாகிகளுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்று தெரிகிறது.

எம்.கே.வி.ராஜாமணி தலைமைத் தேர்தல் அதிகாரியாக பொறுப்பேற்று சங்கத் தேர்தல் அமைதியாக நடைபெற உதவினார்.

ஆகஸ்ட் 4-ல் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு: தேர்ந்தெடுக்கப்படும் புதிய நிர்வாகிகள் ஆகஸ்ட் 4-ம் தேதி பதவியேற்கிறார்கள்.

Posted in Actors, Dinamani, Election, Nasser, Sarathkumar, Tamil | Leave a Comment »