Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Sex, Pornography & Glamor in Tamil Cinema – TP Rajalakshmi to Sneha

பதிந்தவர் Snapjudge மேல் ஜூலை 7, 2007

ஆபாசம் காட்டும் புதுமுகங்களுக்கு மத்தியில் கவர்ச்சி காட்டாமல் சாதனை படைத்த நடிகை: `சினேகா’ ஒரு சிறப்பு பார்வை 

1931-ல் முதன் முதலாக தமிழ் சினிமா பேசத் தொடங்கியது. படம்: “காளிதாஸ்”.

கண்ணையா கம்பெனி மூலம் முதன் முதலாக நாடக நடிகையாக ரசிகர்கள் முன்பு தோன்றிய டி.பி. ராஜலட்சுமிதான் தமிழ் சினிமா விலும் முதல் கதாநாயகி.

இதற்கு முன்பான காலகட்டத்தில் எல்லாம் ஏ.பி.நாகராஜன், வீராச்சாமி என பல ஆண்கள்தான் நாடகங்களில் பெண் வேடமேற்று நடித்துக் கொண்டிருந்தார்கள்.

“காளிதாஸ்” படத்தில் டி.பி. ராஜலட்சுமி அறிமுகமான போதே “மன்மத பானமடா… மார்பினில் பாயுதடா” என்ற பாடலுக்கு நெஞ்சை நிமிர்த்திக்காட்டி, காமிரா வழியாக ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து படைத்தார்.

இவரைப் போலவே தவமணிதேவி என்ற நடிகை பிராவே அணியாமல் தொள, தொள ஜாக்கெட்டுடன் மூடி மறைக்காமல் நடித்து “கவர்ச்சி பாம்” என்று பெயர் எடுத்தவர்.

கே.எல்.வி.வசந்தா என்ற நடிகைக்கு “ஒன்சைடு நடிகை” என்ற பெயரே உண்டு. புடவைத்தலைப்பால் ஒரு பக்கத்தை மூடி, மறுபக்கத்தை திறந்தே போட்டிருப்பதுதான் இவரது “ஸ்டைல்”.

இந்தக்கால கட்டத்தில் நடித்த டி.ஆர்.ராஜகுமாரி, எம்.எஸ்.சுப்புலட்சுமி, கே.பி. சுந்தரம்பாள், பத்மினி, விஜயகுமாரி, தேவிகா, அஞ்சலி தேவி என பல நடிகைகளை விட்டுவிட்டு இன்றைய நடிகைகள் அனைவருமே தவமணி தேவிகளாகவே காட்சி அளிக்கின்றனர்.

ஒருஜாண் டவுசரும், அரைஜாண் ஜாக்கெட்டும் தான் இவர்களது பிரதான “காஸ்ட்ïம்”கள்.

“உள்ளத்தை அள்ளித்தா” படத்தில் மேற்படி காஸ்ட்ïம் களை அறிமுகப்படுத்தி, தொடை காட்டி, பெயர் எடுத்து, பிள்ளையார்சுழி போட்டவர் நடிகை ரம்பா.

ஜோதிலட்சுமி, ஜெய மாலினி, சில்க் சுமிதா, டிஸ்கோ சாந்தி என கவர்ச்சி களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த நடிகைகளை `கடாசி’விட்டு இப்போது கதாநாயகிகளே ஆடைகுறைப்பிற்கு தயாராகி விட்டார்கள்.

ஆபாசம் என்பது புதிய சினிமாக்களின் சாபம் போலவே ஆகிவிட்டது.

இத்தனைக்கும் இடையில் தமிழ் சினிமாவில் காவியத்துவ மான ஒரு நடிகை இருக்கிறார். பெயர்: சினேகா.

பெயருக்கு ஏற்றாற் போலவே வேறெந்த நடிகைக் கும் இல்லாத அளவுக்கு ரசிகர்களுக்கு இவர் மீது தனி சினேகம் உண்டு.

பெயர் வாங்குவதற்கும், பணம் சம்பாதிப்பதற்கும் “இன்னமும் உடையை குறைத்துக்கொள்ள வேண்டுமாப” என்று கேட்கிற ஏராளமான நடிகைகளுக்கு மத்தியில், கதைக்கு தேவை என்று அடம்பிடித்தால்கூட கவர்ச்சி காட்டமாட்டேன் என்கிற தமிழ் கவுரவம் இன்றைய தேதியில் சினேகாவிடம் மட்டுமே!

இந்த ஒரே காரணத்தினால் சினேகாவின் கையை விட்டுப்போன படங்கள் ஏராளம். அதற்காக அவர் தனது நிலையை ஒருபோதும் மாற்றிக்கொள்ளவில்லை.

சினேகாவை இன்ன மும் நிருபர்கள் கேட்டுக் கொண்டுதான் இருக் கிறார்கள்.

“நீங்கள் கவர்ச்சியாக நடிப்பீர்களா?”

நானும் அதை விரும்ப வில்லை என்று. என் ரசிகர்களும் அதை எதிர்பார்க்க வில்லை” என்கிற பதில்தான் சினேகாவிடம்.

சினேகா பிறந்து வளர்ந்தது துபாயில் என்றாலும், பூர்வீகம் நம்ம “பண்ருட்டி”தான். அப்பா ராஜாராம். அம்மா பத்மாவதி.

ஷார்ஜாவில் உள்ள இந்தியன் ஹைஸ்கூலில் படித்து வந்த “சுகாசினி” “எங்கன நிலா பட்சி” என்ற மலையாளப் படம் மூலம்தான் சினேகாவாக சினிமாவுக்கு வந்தார். கதாநாயகன் “குஞ்சாக்கோ கோபன்”.

சினேகாவின் முதல் தமிழ்ப்படம் சுசி.கணேசன் இயக்கிய “விரும்புகிறேன்”. இந்தப்படம் சொன்ன தேதியில் ரிலீசாகி இருக்குமானால் முதல் படத்திலேயே சினேகா பரபரப்பாக பேசப் பட்டிருப்பார். அத்தனை யதார்த்தமான நடிப்பு!

சினேகாவை ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் பிடிக்க வைத்த படம் “லிங்குசாமி”யின் “ஆனந்தம்”. இதில்வரும் “பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்” என்ற பாடலில் சினேகாவைப் பார்த்து முதன் முதலாக ரசிகர்கள் பரவசமடைந்தனர்.

என்னவளே, காதல் சுகமானது, பார்த்தாலே பரவசம், புன்னகைதேசம், பம்மல் கே.சம்பந்தம், உன்னை நினைத்து, ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே, கிங், ஏப்ரல் மாதத்தில், வசீகரா, பார்த்திபன் கனவு, ஆட்டோகிராப், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் என எந்தப் படத்திலும் சினேகா டூ பீஸ் உடையில் வரவில்லை. மனம் கிளுகிளுக்கும்படியாக மாராப்பையோ, தொப் புளையோ, தொடையையோ காட்டவில்லை.

இத்தனைக்கும் சினேகா “பார்த்திபன் கனவு” படத்தில் “சத்யா” என்ற 2-வது வேடத்தை முற்றிலும் மேக்அப்பே இல்லாமல் நடித்திருக்கிறார்.

சினேகாவின் மிகப்பெரிய பிளஸ் அவரது வசீகர “ஹேதம்லி” புன்னகைதான்.

சினேகா படத்தை குடும்பத் தோடு கண்டுகளிக்கலாம் என்ற வகையில் தான் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.

தொடக்க காலங்களில் சரோஜாதேவி, சாவித்திரி போன்றவர்களும், இடைப்பட்ட காலங்களில் ரேவதி, சுகாசினி போன்றவர் களும்தான் தமிழ் சினிமாவில் கலாச்சார கவுரவம் சேர்த்திருக்கிறார்கள்.

இன்றைய தமிழ் சினிமாவில் “அவிழ்த்து எறிவதில் யார் சிறந்தவர்ப” என்று நடிகைகள் போட்டி போட்டு “துண்டு துணி” அளவுக்குவந்துவிட்ட நிலையில் சினேகா ஒரு வீரம் விளைஞ்ச நடிகையாகவே தெரிகிறார்.

About these ads

25 பதில்கள் -க்கு “Sex, Pornography & Glamor in Tamil Cinema – TP Rajalakshmi to Sneha”

 1. jaffar சொன்னார்

  Ya…

  Very good Actress in tamil cinema.. I like sneha Natural Acting..

 2. s.suresh babu சொன்னார்

  beautiful actress,excellent acting skills.appealing family figure.one can die for her beauty. who is going to marry her. it is better if she settles family quickly.i like her to be a mother of a child

 3. Murugan சொன்னார்

  Sneha may not be that attractive like meena, still her expressions to the demand of the characters she acted are appreciable. I liked the most was the one in AUTOGRAPH. LONG live SNEHA in Tamil industry.

 4. Christina சொன்னார்

  I would love to mail u.. so pls. let me k

  know ur mail id..

  Iam from Zambia.

 5. vasuvalingam சொன்னார்

  i like sneha

 6. vasuvalingam சொன்னார்

  va.va@aol.in

 7. sakthi சொன்னார்

  sneha smile is very sexy

 8. vasuvalingam சொன்னார்

  i am vasu from kilakarai.doing Second year MCA.

 9. vasuvalingam சொன்னார்

  my friend DON Kowsik is very talent boy

 10. vasuvalingam சொன்னார்

 11. mayandi சொன்னார்

  சினேகாவின் மிகப்பெரிய பிளஸ், சினேகா படத்தை குடும்பத் தோடு கண்டுகளிக்கலாம் என்ற வகையில் தான் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.

 12. Ananthakrishnan சொன்னார்

  “Paandi” padam phathigala adakka odukka Snehavirku enna Aachu? Nadigaigal ellam ore inam thaan. Idil sneha enna Ramba enna ellam ondrudhan

 13. R.selvamani.singapore. சொன்னார்

  sneha is good homely face. And very suitable women for famely filim

 14. Lakshmanan சொன்னார்

  Dear Friend,

  I read above report, It is really 100% Correct.

  In tamil cinema God Gift === Sneha Madam

  I pray god Sneha Madam do this kind of roles in life long & give long life to Sneha Madam,

  If u have Sneha Madam mail id please give?

  Thanks & Lot of wishes to you & sneha madam.

  Lakshmanan.M

 15. முகமது இக்பால் சொன்னார்

  சினேகாவின் புன்னகை ததும்பும் விதம், கனமான நடிப்பு இவற்றால் மட்டுமே ரசிகர்களால் பெருமளவு கவரப்படுகிறார்! கவர்ச்சியால் மட்டுமே ரசிகர்களை தன் பக்கம் இழுக்கும் முயற்சியில் இறங்கியிருக்கும் மற்றவர்களின் மத்தியில் சினேகா ஒருவரே தனித்து நிற்கிறார் – பேசப்பட்டு வருகிறார்! கவர்ச்சி சீக்கிரத்தில் காணாமல் போய்விடும்! ஆனால் சினேகா காலத்தால் நிலைத்து நிற்பார்!

 16. selva சொன்னார்

  #

  “Paandi” padam phathigala adakka odukka Snehavirku enna Aachu? Nadigaigal ellam ore inam thaan. Idil sneha enna Ramba enna ellam ondrudhan….this s the true statement…
  ellam orey kuttai la oorina mattainga than….
  #

 17. yaseenjahabar சொன்னார்

  MISS SHENAHA ONE OFTHE SUCH A GOOD ACTOR IAM VERY LIKE TOOMUCH LAUGHING IS ONE OF THE GALAMOUR GUY

 18. aiij சொன்னார்

  aa

 19. viswalingam சொன்னார்

  sneha is a good actress with her enthralling
  homely smiles

 20. shankar சொன்னார்

  do u know sneha”s maru pakkam? she is wealthy not only acting in cinemas but in another ways. but her homely look is her plus. i too love sneha s smile. ok?

 21. ravi சொன்னார்

  dear shankar!

  please dont see the actresses other side. cinema is a male dominated field and a girl cant fight with males.. till
  this time sneha tries to do only for ideal roles. we have to appreciate her.

 22. rahul சொன்னார்

  sneha! I want you! Shall we marry?

 23. nalini சொன்னார்

  sneha is very bad girl and naughty girl. so boys are very carefull

 24. nalini சொன்னார்

  sneha is thinking only earn money. so she is chating for more boys. This is sneha Number. any time ur contact. she is very free.

  1. 8870885089
  2. 708438873

  3. 952687457

 25. RAJA சொன்னார்

  ENTHA PUTHULE ENTHA PAMPO YAR KANDATHU !…..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s

 
Follow

Get every new post delivered to your Inbox.

Join 43 other followers

%d bloggers like this: