Thinking Loud Authors – Celebrations & Book Release Function
பதிந்தவர் SnapJudge மேல் மே 4, 2007
உரத்த சிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்க முப்பெரும் விழா
சென்னை, மே 4: உரத்த சிந்தனை வாசக எழுத்தாளர் சங்கம் சார்பில் முப்பெரும் விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் “திரை’ என்ற தலைப்பில் கவிஞர் பூவை அமுதன் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது.
பூந்தமல்லியை அடுத்த குத்தம்பாக்கம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராதைமணாளன் எழுதிய என் வாழக்கைப் பாதையிலே, கவிஞர் துருவன் எழுதிய தொலைதூரக் கடிதங்கள் ஆகிய இரு நூல்கள் வெளியிடப்பட்டன. நீதிபதி டி.என்.வள்ளிநாயகம் இரு நூல்களையும் வெளியிட்டார்.
குத்தம்பாக்கம் கிராம இளைஞர் மன்றத்தினருக்கு விளையாட்டு உபகரணங்களை கார்முகிலன் வழங்கினார். 81வது பிறந்தநாள் கண்ட சீனி.திருநாவுக்கரசு, திலகம் திருநாவுக்கரசு தம்பதிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
- எழுத்தாளர் பாலதிரிபுரசுந்தரி,
- உரத்த சிந்தனை நிறுவன தலைவர் எஸ்.வி.ராஜசேகர்,
- செயலாளர் உதயம்ராம்,
- ஒருங்கிணைப்பாளர்கள் சீ.மோகன்,
- கே.ஜெகதீஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
