Court annuls Turkish presidential elections
பதிந்தவர் SnapJudge மேல் மே 3, 2007
துருக்கியில் அதிபரை தேர்ந்தெடுக்க நடைபெற்ற வாக்கெடுப்பு செல்லாது என நீதிமன்றம் தீர்ப்பு
![]() |
|
| துருக்கியின் பிரதமர் எர்துவான் |
துருக்கியில் புதிய அதிபரைத் தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றத்தில் நடந்த முதற்சுற்று வாக்கெடுப்பு செல்லுபடியற்றது என்று அரசியல் சட்ட நீதிமன்றம் முடிவானது, ‘’ஜனநாயகத்தின் மீது சுடப்பட்ட ஒரு துப்பாக்கிச் சன்னம்’’ என்று துருக்கியப் பிரதமர் ரெசப் தைப் எர்துவான் அவர்கள் தெரிவித்துள்ளார்.
போதுமான அளவுக்கு உறுப்பினர்கள் சமூகமளித்திருக்கவில்லை என்று கூறும் இந்த நீதிமன்றத் தீர்ப்பானது, ஒரு புதிய அதிபரைத் தேர்வு செய்வதை சாத்தியமற்றதாக்கிவிடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
வெளியுறவு அமைச்சரான அப்துல்லாஹ் குல் அவர்கள்தான் இந்த தேர்தலின் ஒரேயொரு வேட்பாளராவார். ஆனால் அவர் துருக்கியின் மதசார்பற்ற அரசியலமைப்பை முழுமையாக ஏற்று நடக்கவில்லை என்று கூறும் எதிர்க்கட்சி, இந்த தேர்தலுக்கான முதற் சுற்று வாக்களிப்பை புறக்கணித்திருந்தது.
இந்த முதற்சுற்று வாக்களிப்பு மீண்டும் ஞாயிறன்று நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்தப் பிரச்சினையில் இருந்து விடுபட, ஜூன் 24 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று ஆளும் நீதி மற்றும் அபிவிருத்திக் கட்சி பிரேரித்துள்ளது.
துருக்கி நாட்டில் அரசியல் சாசனத்தை மாற்ற பிரேரணை
![]() |
|
| துருக்கி நாடாளுமன்றம் |
துருக்கி நாட்டில் அதிபரை தேர்ந்தெடுப்பதில் உள்ள அரசியல் சிக்கல் நீடிக்கும் நிலையில், அந்த நாட்டின் நாடாளுமன்றம், அதிபரை தேர்தெடுக்க, நாட்டின் அரசியல் சாசனத்தில் திருத்தத்தைக் கொண்டுவர அரசு முன்வைத்துள்ள பிரேரணைகள் குறித்து விவாதித்து வருகிறது.
இந்தப் பிரேரணையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பதன் மூலம் அதிபரை தேர்தெடுக்காமல், மக்களே நேரடியாக அதிபரை தேர்தெடுப்பதற்கான திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
அதிபர் தேர்தலுக்கு அரசின் சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளாரான அப்துல்லா குல் அவர்கள் இஸ்லாமியத் திட்டங்களைக் கொண்டவர் எனக் குற்றம் கூறி அவர் தேர்வாவதை எதிர்கட்சியினர் தடுத்த பிறகு, அரசு இந்தப் பிரேரணையை சமர்ப்பித்துள்ளது.
இவ்வாறாக அரசியல் சாசனத்தை திருத்த, துருக்கியை ஆளும் ஏ கே கட்சிக்கு, இது தொடர்பில் மத்திய வலதுசாரிக் கொள்கையை உடைய சிறிய கட்சியின் ஆதரவு கிடைத்துள்ள போதிலும், தற்போதைய அதிபரின் அனுமதி கிடைப்பதிலோ அல்லது பொதுமக்கள் வாக்கெடுப்பு காரணமாகவோ கால தாமதம் ஏற்படலாம்.



bsubra சொன்னார்
ஜனாதிபதி மக்களால் தோந்தெடுக்கப்படுவதற்கு துருக்கிய நாடாளுமன்றம் வாக்கு
துருக்கிய நாடாளுமன்றம் அதிபரை மக்களே தேர்ந்தெடுக்கும் நிலை உருவாகத் தேவையான அரசியலமைப்புச் சட்டமாற்றத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது. சுமார் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
நாடாளுமன்றம் தற்போது ஆராய்ந்து வரும் பல அரசியலமைப்புச் சட்ட மாற்றங்களுள் இது தலையானது.
இந்த மாற்றம் அதிபர் அஹ்மத் நெக்டெத் செசேரினால் அங்கீகரிக்கப்பட வேண்டும். மதச்சார்பற்ற அவர் இந்த மாற்றத்தைத் தனது வெட்டு வாக்கைப் பயன்படுத்தித் தடுத்து நிறுத்துவேன் என்று தெரித்திருந்தார்.
துருக்கியை ஆளும் மதவாத இஸ்லாமியர்களுக்கும், நாட்டின் மதசார்பற்ற கட்டமைப்புக்கும் இடையே அதிபர் தேர்வு தொடர்பாக நடக்கும் கடைசி மோதல் இது.
ஜூலை மாதம் நடக்கவுள்ள பொதுத்தேர்தலுக்கு முன்னதாக இந்த சட்ட மசோதா நடைமுறைக்கு வர வாய்ப்பில்லை என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.