India, Pakistan, Iran narrow down differences on gas price
பதிந்தவர் SnapJudge மேல் ஜனவரி 25, 2007
குழாய்ப் பாதை கேஸ் விலை நிர்ணயம்: ஈரான், பாகிஸ்தான், இந்தியா பேச்சு தோல்வி
புது தில்லி, ஜன. 26: ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் குழாய்ப் பாதை அமைத்து வழங்கத் திட்டமிட்டுள்ள கேஸýக்கு விலை நிர்ணயிப்பதற்காக நடைபெற்ற முத்தரப்பு பேச்சில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதற்கான பேச்சு ஈரான் தலைநகர் தெஹ்ரானில் புதன்கிழமை, வியாழக்கிழமை ஆகிய இரு தினங்கள் நடைபெற்றது.
இதில், பெட்ரோலிய, இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் தனிச் செயலர் அனில் ரஸ்தான் தலைமையில் இந்தியக் குழு பங்கேற்றது.
ஈரான் சார்பில் தேசிய ஈரான் எண்ணெய் நிறுவனத்தின் (என்ஐஓசி) சர்வதேச விவகாரங்கள் பிரிவு இயக்குநர் ஹஜ்ஜதுல்லா கனீமிபார்த் கலந்துகொண்டார்.
கேஸ் விற்பனை செய்யும் நாடு என்ற முறையில் ஈரான் தெரிவித்த விலைக்கும், வாங்கும் நாடுகள் என்ற முறையில் பாகிஸ்தானும் இந்தியாவும் கோரிய விலைக்கும் பெரும் இடைவெளி இருப்பதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவ்வப்போது நிலவும் கச்சா எண்ணெய் விலையில் 10 சதவீதத்துக்கு நிகரான விலையுடன், நிலையான விலையாக 1.20 டாலர் சேர்த்து தர வேண்டும் என்று ஈரான் கேட்டது. ஒரு மில்லியன் பிரிட்டிஷ் அனல்மின் யூனிட் கேஸýக்கான (எம்பிடி யூனிட்) விலை இது.
தற்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 50 டாலராக உள்ளது. இதில் 10 சதவீதம் 5 டாலர். இதன் அடிப்படையில் கணக்கிட்டால், ஒரு எம்பிடி யூனிட் கேஸ் விலை 6.20 டாலர் என்று ஆகிறது.
பாகிஸ்தான் எல்லையில் ஈரான் சப்ளை செய்யும் கேஸýக்கான விலை இது. அதற்கு அப்பால் கேûஸ கொண்டு செல்ல ஆகும் செலவையும் சேர்த்தால் விலை இன்னும் அதிகமாகும்.
விலையை நிர்ணயிப்பதற்கான இந்த சூத்திரத்தை பாகிஸ்தானும், இந்தியாவும் ஏற்கவில்லை.
தங்கள் எல்லையில் சப்ளை செய்யப்படும் கேஸ் விலை ஒரு எம்பிடி யூனிட்டுக்கு 4.25 டாலருக்கு மேல் போகக் கூடாது என பாகிஸ்தானும், இந்தியாவும் வலியுறுத்தின. இதில் உடன்பாடு ஏற்படாததால் பேச்சு தோல்வி அடைந்தது. பின்னர் ஒரு தேதியில் மீண்டும் கூடிப் பேசுவது என தீர்மானிக்கப்பட்டது.
ஈரானில் இருந்து 2,700 கி.மீ. தொலைவுக்கு, ரூ.3,500 கோடி செலவில் குழாய்ப் பாதை அமைத்து பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் கேஸ் வழங்கும் திட்டத்தை நிறைவேற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்த இடுகை இடப்பட்ட நாள் ஜனவரி 25, 2007 இல் 10:17 பிற்பகல் பின்வருமாறு பகுக்கப்பட்டுள்ளது BTU, Border, Brent crude, British thermal units, Diesel, External Affairs Minister, Gaffney Cline and Associates, Gas, IRNA, India, Iran, Iran-Pakistan, Islamic Republic News Agency, Pakistan, Petrol, Petroleum, Price, Transport costs, barrel, mBtu, natural gas, pipe, pipeline, trans-national. You can follow any responses to this entry through the RSS 2.0 ஒடை. உங்களால் முடியும் பதிலிட்டுவிட்டுச் செல்லவும், அல்லது பின்னறியும் தடம் உங்களின் சொந்த தளத்திலிருந்து....
