Cyprus rejects Turkish offer over port-opening – Restrictions for EU
பதிந்தவர் SnapJudge மேல் டிசம்பர் 7, 2006
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்காக துருக்கி சைப்ரசுடன் சமரசம்
![]() |
|
| துருக்கி இணைய சைப்ரஸ் தடையாக உள்ளது என்பதை விளக்கும் கேலிச் சித்திரம் |
ஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கி உறுப்பு நாடாக சேர நடைபெறும் பேச்சு வார்த்தைகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் தடை விதிப்பதை தவிர்க்கும் ஒரு கடைசி நிமிட நடவடிக்கையாக, துருக்கி தனது ஒரு துறைமுகத்தை சைப்ரசுடனான வணிகத்திற்கு திறக்க முன்வந்துள்ளது.
இந்த முன்னெடுப்பானது நிபந்தனையற்ற ஒன்றாக இருக்கும் என அறியப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக உள்ள சைப்ரஸ் நாட்டை, துருக்கி அங்கீகரிக்காத நிலையிலும், சைபிரஸிலிருந்து வரும் விமானங்கள் மற்றும் கப்பல்களை தனது நாட்டில் அனுமதிக்க ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை மதிக்காததாலும், அது ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாகச் சேர நடைபெறும் பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்தம் செய்ய வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரை செய்திருந்தது.
இது குறித்த இறுதி முடிவை ஐரோப்பிய ஒன்றிய நாட்டின் தலைவர்கள் அடுத்த வாரம் நடைபெறவுள்ள உச்சி மாநாட்டில் எடுக்க உள்ளார்கள்.

