Thanjavur Ponniah Ramajayam College’s Murugesan caught with Hawaala money
பதிந்தவர் SnapJudge மேல் நவம்பர் 26, 2006
சென்னை விமானத்தில் வந்த தொழில் அதிபரிடம் ரூ.1 கோடி `ஹவாலா’ பணம் சிக்கியது
சென்னை, நவ. 26- சென்னை விமான நிலையத்தில் நேற்று இரவு 10.30 மணி அளவில் விமான நிலைய அதிகாரிகள் பயணிகளிடம் சோதனை மேற் கொண்டனர்.
அப்போது டெல்லியில் இருந்து வந்த இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் சூட்கேசில் ரூ.1 கோடியே 2 லட்சம் ஹவாலா பணத்துடன் தொழில் அதிபர் ஒருவர் சிக்கினார். அவரிடம் விமான நிலைய அதிகாரிகள் மற்றும் வருமான வரி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அவரது பெயர் முருகேசன் (வயது 45) என்பதும், இவர் தஞ்சாவூரை சேர்ந்த பிரபல தொழில் அதிபர் என்பதும் தெரிய வந்தது. இவர் பொன்னையா ராம ஜெயம் என்ற பெயரில் கல்லூரி நடத்தி வருகிறார்.
வருமான வரி துறை அதிகாரி களின் பிடியல் இருக்கும் தொழில் அதிபர் முருகேசனிடம் ரூ.1கோடி பணம் வந்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னையில் உள்ள இவரது கல்லூரி அலுவலகம் மற்றும் வீடுகளில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் தஞ்சையில் உள்ள அவரது வீட்டிலும் வருமான வரிதுறையினர் சோதனை நடந்தது.

bsubra சொன்னார்
ராஜபாட்டை: பத்திரிக்கைகளின் கயமைத்தனம்
பிரபல கல்வி நிறுவனத்தின் நிறுவனர் 1 கோடி ரூபாயுடன் விமான நிலையத்தில் பிடிபட்டார் என்றவுடன் எல்லா பத்திரிக்கைகளும் அன்று செய்தி வெளியிட்டன. ஆனால் பிறகு என்ன நடந்தது, என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது மக்களிடம் இருந்து மறைக்கப்பட்டன.
ThanjaiVaasi சொன்னார்
Please add this update. Murugesan arraested agin this time. http://www1.timesofindia.indiatimes.com/Cities/Chennai/Training_institute_head_arrested_/articleshow/3320361.cms
ThanjaiVaasi சொன்னார்
Murugesan Arrested