Racial remarks against Indians – Jolie’s bodyguards arrested: scuffle with kids parents
பதிந்தவர் SnapJudge மேல் நவம்பர் 17, 2006
குழந்தைகள் பெற்றோர் மீது தாக்குதல்: நடிகை ஏஞ்சலினா பாதுகாவலர்கள் கைது
மும்பை, நவ. 17- ஆஸ்கர் விருது பெற்ற ஆலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜுலி தனது கணவர் பிராட் பிட்னுடன் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். ஒரு மாதமாக அவர் மும்பையில் தங்கி இருந்து `மைட்டி ஹார்ட்‘ என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
மும்பையில் உள்ள அஞ்சு மான்-இ-இஸ்லாம் பள்ளிக் கூடத்தில் அனுமதி பெற்று படப்பிடிப்பு நடந்தது. இதை யொட்டி அந்த பள்ளிக்கூடத்தின் கதவை படப்பிடிப்பு குழுவினர் இழுத்து மூடிவிட் டனர்.
மாலையில் அந்த பள்ளிக்கூடத்தின் கதவு திறக்கப்பட்டது. அப்போது குழந்தைகளை அழைத்து போக வந்த பெற் றோர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்களை நடிகை ஏஞ்சலினாவின் பாதுகாவலர்கள் பிடித்து தள்ளினார்கள். பெண் களையும் அவர்கள் பிடித்து தள்ளினார்கள். சில பெற்றோர் நடிகையை பார்க்கும் ஆர்வத் தில் அங்கு திரண்டனர். அவர்களை பாதுகாவலர்கள் தாக்கினார்கள். இந்தியர்களை தரக்குறைவாகவும் அவர்கள் திட்டினார்கள்.
இதுபற்றி பெற்றோர் மும்பை போலீசில் புகார் செய்தார். இதையடுத்து ஏஞ்சலினா ஜுலியின் பாதுகாவலர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது
- 323(தாக்குதல் நடத்தியது)
- 504(அமைதிக்கு பங்கம் விளைவித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு செய்யப்பட்டுள்ளது.
இன்று மாலை அவர்கள் மாஜிஸ்திரேட்டு முன் ஆஜர் படுத்தப்படுகிறார்கள்.
ஏற்கனவே கடந்த மாதம் புனேயில் ஏஞ்சலினாவின் பாதுகாவலர்கள் புகைப்பட காரர் ஒருவரை துப்பாக்கியை காட்டி மிரட்டினார்.
சில நாட்களுக்கு முன்பு இங்கிலாந்து புகைப்படக்காரர் ஒருவரை ஓட்டல் அருகே இந்த பாதுகாவலரின் தாக்கி னார்கள்.
