Anil Ambani supports Mani Ratnam’s Guru – Mukesh Ambani wants to watch it
பதிந்தவர் SnapJudge மேல் நவம்பர் 17, 2006
சிக்கலில் மணிரத்னத்தின் “குரு’
ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் ஆகியோரை வைத்து மணிரத்னம் இயக்கும் “குரு’ படம், மறைந்த தொழிலதிபர் திருபாய் அம்பானியின் கதை என்ற கருத்து பரவியது. இதையடுத்து படத்தை வெளியிடும் முன் தனக்கு திரையிட்டுக் காட்ட வேண்டும் என்று மணிரத்னம் தரப்பிடம் அம்பானியின் மூத்த மகன் முகேஷ் அம்பானி கூறியுள்ளார். அதே சமயம் அம்பானியின் இன்னொரு மகன் அனில் அம்பானி “குரு’ படத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அவருடைய அட்லாப்ஸ் நிறுவனம்தான் இப்படத்தின் விநியோக உரிமையைப் பெற்றுள்ளது.
“முருகா’ போஸ்டருக்கு தடை
காக்டெய்ல் ட்ரீம் ஃபிலிம்ஸ் பட நிறுவனம் தயாரித்து வரும் புதிய படம் “முருகா’. இதில் அசோக், ஸ்ருதிசர்மா என்ற இரு புதுமுகங்கள் நடித்துள்ளனர். இவர்களுடன் வடிவேலு, சமிக்ஷா, ரியாஸ்கான், மகாதேவன், அசோகன் வின்சென்ட், சுதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் ராஜா இசையமைக்கும் இந்தப் படத்தை இயக்குபவர் ஆர்.டி.நேசன். திரைப்படக் கல்லூரி மாணவரான இவருக்கு இது முதல் படம்.
இந்தப் படத்துக்காக சென்னை நகர் முழுவதும் மிக அதிகமான விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக, கதாநாயகனை போலீஸ் அதிகாரி ஒருவர் சேற்றில் வைத்து காலால் அழுத்தும் (படத்தில் வரும்) காட்சியை விளம்பர பேனராக அமைத்து சென்னை அண்ணா சாலையில் வைத்திருந்தனர். இதைப் பார்த்த போலீஸ் கமிஷனர் இது போன்ற பேனர் வைத்தால் மனித உரிமை மீறல் சட்டத்தின் கீழ் பதிவு செய்து வழக்கு தொடரப்படும் என எச்சரித்ததையடுத்து அந்த பேனர் உடனடியாக அகற்றப்பட்டு வேறு பேனர் வைக்கப்பட்டுவிட்டது.
இந்த இடுகை இடப்பட்ட நாள் நவம்பர் 17, 2006 இல் 1:05 மு.பகல் பின்வருமாறு பகுக்கப்பட்டுள்ளது Adlabs, Anil Ambani, Banner, Bollywood, Guru, Hindi Movie, Human Rights, Kollywood, Mani Ratnam, Movies, Mukesh Ambani, Muruga, Poster, Reliance, Tamil Cinema. You can follow any responses to this entry through the RSS 2.0 ஒடை. உங்களால் முடியும் பதிலிட்டுவிட்டுச் செல்லவும், அல்லது பின்னறியும் தடம் உங்களின் சொந்த தளத்திலிருந்து....

alok சொன்னார்
“Anil Ambani supports Mani Ratnam’s Guru – Mukesh Ambani wants to watch it”
please sent me this article in hindi/english.
from
alok