Tamil News

BBC, Dinamani, Dinamalar, Maalai Malar et al

Exemplary out of state Tamil language students to be rewarded – M Karunanidhi

பதிந்தவர் SnapJudge மேல் அக்டோபர் 26, 2006

வெளிமாநிலங்களில் தமிழில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு: கருணாநிதி அறிவிப்பு

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

பிற மாநிலங்களில் தமிழ் மொழி வளர்ச்சியைக் கருத்திற்கொண்டு தமிழை ஒரு பாடமாகப் பயிலும் மாண வர்களை ஊக்குவிக்கும் வகையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விலும், பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்தவிலும் அதிக மதிப்பெண் பெறுபவர்களுக்கு பரிசு வழங்கும் திட்டம் செயல் படுத்தப்படும்.

  1. முதல் பரிசு ரூ.10 ஆயிரம்,
  2. 2-ம் பரிசு ரூ.5 ஆயிரம்,
  3. 3-ம் பரிசு ரூ.3 ஆயிரம்

எனப் பரிசுகள் வழங்கப்படும்.

  • புதுடெல்லி,
  • மகாராட்டிரம்,
  • மேற்கு வங்காளம்,
  • கர்நாடகம்,
  • ஆந்திரா மற்றும்
  • கேரளா ஆகிய 6 மாநிலங்களில் 2,16,000 ரூபாய் செலவில் இத் திட்டம் செயற்படுத்தப்படும் முதல்-அமைச்சர் அறிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக கடந்த ஏப்ரல் மாதம் புது டெல்லி, மேற்கு வங்காளம், கர்நாடகம், ஆந்திரா மற் றும் கேரளா ஆகிய 6 மாநி லங்களில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விலும், பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்விலும் அதிக மதிப்பெண்கள் பெற்றுத் தேர்ச்சி பெற்ற ஒவ்வொரு மாணவருக்கும், ஒவ்வொரு மாநிலத்திலும் முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.5 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.3 ஆயிரமும் வழங்கப்படும் என்றும், இத் திட்டம் இனி ஒவ்வொரு ஆண்டிலும் தொடர்ந்து செயல் படுத்தப்படும் என்றும் முதல்-அமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>