Reynolds Roadside pens sale – Rs. 5 to 5000
பதிந்தவர் SnapJudge மேல் அக்டோபர் 20, 2006
பேனா விற்பனைக்கு நாடு முழுவதும் “ரெனால்ட்ஸ் ரைட்சைட்’ அங்காடிகள்: விலை ரூ.5 முதல் ரூ.5 ஆயிரம் வரை
சென்னை, அக். 21: பேனா உள்ளிட்ட எழுதுபொருள்கள் விற்பனைக்கென பிரத்யேகமாக, சென்னை உள்பட நாடு முழுவதும் “ரெனால்ட்ஸ் ரைட்சைட்’ சங்கிலித் தொடர் அங்காடிகளைத் திறந்து புதுமை படைத்துள்ளது ஜி.எம்.பென்ஸ் நிறுவனம்.
நாட்டிலேயே முதல் முறையாகத் தொடங்கப்பட்டுள்ள இந்த அங்காடிகளில் ரூ.5 முதல் ரூ.5 ஆயிரம் வரை பல ரகப் பேனாக்கள் விற்கப்படுகின்றன. இதன் மூலம், உள்நாட்டு பேனாக்கள் மட்டுமன்றி வெளிநாட்டுப் பேனாக்களையும் ஒரே இடத்தில் பார்வையிட்டு வாங்கிக் கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது ஜி.எம்.பென்ஸ்.
தற்போது,
- சென்னை,
- தில்லி,
- ஹைதராபாத்,
- இந்தூர்,
- அகமதாபாத் மற்றும்
- கொச்சி
ஆகிய இடங்களில் ரெனால்ட்ஸ் ரைட்சைட் கடைகள் தொடங்கப்பட்டுள்ளன.
- சண்டீகர்,
- நொய்டா,
- ஆக்ரா மற்றும்
- நாக்பூர் ஆகிய இடங்களில் வரும் மாதங்களில் தொடங்கப்படும்.
இந்தியாவில் தயாரிக்கப்படும் ரெனால்ட்ஸ் ரக பேனாக்கள், புகழ்பெற்ற வெளிநாட்டுப் பேனா ரகங்களான
- பெரோல்,
- ரோட்ரிங்,
- அல்பினோ,
- கலரிஃபிக் போன்ற பிராண்டுகளும் இங்கு கிடைக்கும் என ஜி.எம்.பென்ஸ் துணைத் தலைவர் விஸ்வதீப் குய்லா கூறியுள்ளார்.
