Barak kickback Rs 174 cr & Navy official overlooked objections: CBI
பதிந்தவர் SnapJudge மேல் அக்டோபர் 13, 2006
இஸ்ரேலிடம் இருந்து ஏவுகணை வாங்கியதில் ரூ.174 கோடி ஊழல்: ஜார்ஜ் பெர்னாண்டஸ்சுக்கு ரூ.34 கோடி கமிஷன்
புதுடெல்லி, அக். 13-
இஸ்ரேலிடம் இருந்து எதிரி ஏவுகணைகளை நடுவானில் தாக்கி முறியடிக்கும் பராக் ஏவுகணைகளை வாங்க 2000-ம் ஆண்டு அக்டோபர் 23-ந் தேதி பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சி இருந்த போது ஒப்பந்தம் செய்யப்பட்டது.
கடற்படை கப்பலில் பொருத் துவதற்காக 7 பராக் ஏவுகணை பாதுகாப்பு சாதனங்களும், 200 ஏவுகணைகளும் ரூ.1150 கோடிக்கு வாங்கப்பட்டது. இந்த ஆயுத பேரத்தில் ஊழல் நடந்ததாக தெகல்கா இணைய தளம் 2001-ம் ஆண்டு ரகசிய புலனாய் செய்து கண்டு பிடித்தது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.
இதில்
- முன்னாள் பாது காப்பு துறை மந்திரி ஜார்ஜ் பெர்னாண்டஸ்,
- சமதா கட்சியின் அப்போதைய தலைவர் ஜெயா ஜேட்லி,
- அந்த கட்சியின் முன்னாள் பொருளாளர் ஆர்.கே.ஜெயின்,
- கடற்படை முன்னாள் தலைமை தளபதி சுசில்குமார் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக சி.பி.ஐ. கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது.
இஸ்ரேலிடம் இருந்து ஏவு கணை வாங்கியதில் ரூ.2 கோடி ஊழல் நடந்ததாக அப்போது தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது ரூ.116 கோடி முதல் ரூ.174 கோடி வரை ஊழல் நடந்ததாக சி.பி.ஐ. தெரிவித்து உள்ளது. அரசியல் வாதிகளும், இடைத் தரகர்களும் இதில் பயன் பெற்று உள்ளனர்.
ஏவுகணை வாங்கியதில் ஜார்ஜ்பெர்னாண்டசும், ஜெயா ஜேட்லியும் சேர்ந்து கமிஷனாக ரூ.34.8 கோடி பெற்றுள்ளனர். இதை ஆர்.கே.ஜெயின் ஒப்புதல் வாக்குமூலமாக கொடுத் துள்ளார். இந்த இருவரிடம் இருந்து ஜெயின் கமிஷனாக ரூ.58 கோடி பெற்றுள்ளார். சுரேஷ் நந்தா உள்பட சிலரும் மொத்த ஒப்பந்தத்தில் இருந்து 10 முதல் 15 சதவீதம் கமிஷன் பெற்றுள்ளனர்.
இந்த இடுகை இடப்பட்ட நாள் அக்டோபர் 13, 2006 இல் 1:46 பிற்பகல் பின்வருமாறு பகுக்கப்பட்டுள்ளது Barak, CBI, Charges, Corruption, Fernandez, George Fernandes, India, Israel, Jaya Jaitley, Minister, Ministry, Navy, defence, kickbacks. You can follow any responses to this entry through the RSS 2.0 ஒடை. உங்களால் முடியும் பதிலிட்டுவிட்டுச் செல்லவும், அல்லது பின்னறியும் தடம் உங்களின் சொந்த தளத்திலிருந்து....
